சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2015 பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் தங்களது சமீபத்திய வாகனங்களையும் UNI-CUB என்ற ரோபோ மாடலையும் காட்சிப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது

published on ஆகஸ்ட் 27, 2015 03:57 pm by அபிஜித்

ஜப்பானிய பிரம்மாண்ட ஆட்டோ தயாரிப்பாளரான ஹோண்டா நிறுவனம், செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ள, 66வது பிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில் தனது சமீபத்திய மாடல்களை, பார்வையாளர்கள் கவனத்திற்கு காட்சிபடுத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து கார் தயாரிப்பாளர்களும், தங்களது சமீபத்திய கார்களையும், புதுபிக்கப்பட்ட கார்களையும் மட்டுமே இந்த பெரும் நிகழ்ச்சியில் காட்சிபடுத்தி வைப்பார்கள். கார்கள் தவிர, ஹோண்டா நிறுவனம் தனிப்பட்ட நகர்வியக்க ஊர்தியான (மொபிலிட்டி டிவைஸ்) UNI-CUB என்ற ரோபோ மாடலையும் காட்சிப்படுத்தவுள்ளது.

இந்தியாவில், நமக்கு கிடைக்ககூடிய ஜாஸ் காரை விட சற்றே மேம்படுத்தபட்ட புதிய ஜாஸ் கார், இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த படவுள்ளது. உயர்தர கட்சிதமான SUV HR-V மாடல் மற்றும் புதுப்பிக்கப்பட்ட CR-V மாடல் கார்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தவுள்ளது. இந்த இரு மாடல் கார்களும் செப்டெம்பர் மாதத்தில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஹோண்டா நிறுவனம் தனது ப்ராஜக்ட் 24 என்ற ரேஸ் காரையும் இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது உலகளவில் உள்ள ஹோண்டாவின் வடிவமைப்பு மையங்கள் போட்டி போட்டு இதன் வடிவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த நூதன பந்தைய காரின் வடிவ மூலக்கூறுகள் அனைத்தும், ஜப்பான் நாட்டில் அசாகா பகுதியில் உள்ள ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள் வடிவமைப்பு மையத்தில் இருந்தும், வகோவில் உள்ள ஆட்டோமொபைல் வடிவமைப்பு மையத்தில் இருந்தும் பெறப்பட்டது. இந்த காரின் தோற்றத்தை மேலே உள்ள படத்தில் பார்க்கும் போது, ஓட்டுனர் ஒரு பக்கமாக அமர்வது போல் தெரிவதால், மற்றொரு பக்கம் இதன் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என ஊகிக்கமுடிகிறது. இதன் உண்மையான வடிவத்தை அரங்கத்தில் சென்று பார்த்தால் மிகவும் வியப்படைவோம் என்று நிச்சயமாக கூற முடியும்.

மேலும், இந்நிறுவனத்தின் எதிர்கால வாய்ப்பை விவரிக்கும் வகையில் ஹோண்டா UNI-CUB ரோபோவை இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தவுள்ளது. இந்த நகர்வியக்க ஊர்தி, சீரான சமன்படுத்தப்பட்ட தரை பகுதியில் மூடிய கட்டடத்தின் உள்ளே மட்டுமே பயன்படுத்த கூடியதாக வடிவமைக்க பட்டுள்ளது. இதன் அதிநவீன எடை சமநிலை (வெயிட் பேலன்ஸ் சிஸ்டம்) அமைப்பு செக்வே PT யில் (Segway PT) உள்ளது போல, தானாகவே எடையை சமன் செய்து கொள்ள உதவுகிறது. மேலும் எந்த வழியில் செல்வதற்கு சவாரியாளர் விரும்புகிறார் என்பதை அறியவும் இது பயன்படுகிறது. உதாரணமாக சவாரியாளர் வலது பக்கமாக சாய்ந்தால் UNI-CUB சாதனமும் அதே திசையில் திரும்பும். இதே போல, இடது புறமாகவும் திரும்ப இயலும்.

இதற்கு மேலும், அக்கார்டு (Accord), அக்கார்டு டூரர் (Accord Tourer), சிவிக் டைப் R (Civic Type R ) போன்ற கார்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன. ஹோண்டாவின் சமீபத்திய படைப்பான Type R வகை பற்றி பேசுகையில், இது 2.0 லிட்டர் சுழலூட்டு விசை பொறி VTEC (டர்போசார்ஜ்ட்) இயந்திரத்தின் உதவியுடன் ஒப்பில்லா செயல்திறனை கொடுப்பதாக உள்ளது. திடமான 310 PS திறனை தரவல்ல இந்த கார், அதிகபட்சமாக 270 kmph வேகத்தில் உங்களை பயணிக்க வைக்கும். இதுவே, மிக சக்தி வாய்ந்த முன் சக்கர இயக்க முறையில் உள்ள ஹாட்ச்பேக் வாகனமாகவும் திகழ்கிறது.

வெளியிட்டவர்

அபிஜித்

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை