இந்தூரில் ஹோண்டா புதிய டீலர்ஷிப் மையத்தை தொடங்கி உள்ளது .
published on ஜனவரி 18, 2016 04:22 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பலாசியா , இந்தூரில் ஹோண்டா புதிய டீலர்ஷிப் ஒன்றை லேண்ட்மார்க் இந்தியா என்ற பெயரில் ஜனவரி 15-ல் துவக்கி உள்ளது. இந்த டீலர்ஷிப் மையத்தை ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மூத்த துணை தலைவர் , மார்கெடிங் மற்றும் விற்பனை பிரிவு, திரு. ஞானேஸ்வர் சென் மற்றும் இந்த புதிய டீலர்ஷிப் மையத்தின் நிர்வாக இயக்குனர் , திரு. சஞ்சய் தாக்கர் ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர். 12000 சதுர ஆடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த மையத்தில் தேர்ந்த , அனுபவமுள்ள பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான ஒரு வாங்கும் அனுபவத்தை தர காத்திருக்கின்றனர். விற்பனை , சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் ( உதிரி பாகங்கள் என அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இந்த புதிய டீலர்ஷிப் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் ரிப்பேர் , வீல் அலைன்மென்ட் உட்பட பல்வேறு சேவைகளை வழங்க இங்கே 18 பே ( வாகனம் சர்வீசுக்காக நிறுத்தப்படும் இடம் ) அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மையத்தையும் சேர்த்து ஹோண்டா நிறுவனத்திற்கு நாடு முழுக்க 173 நகரங்களில் 268டீலர்ஷிப் மையங்கள் உள்ளன. கடந்த 2015 டிசம்பரில் ஹோண்டா நிறுவனம் விலை உயர்வை அறிவித்தது. இதன் மூலம் ஹோண்டா கார்களின் விலை ரூ. 10,000 வரை கூடி உள்ளது. மேலும் அடுத்த மாதம் நடை பெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா தனது காம்பேக்ட் SUV பிரிவு வாகனமான ஹோண்டா BR - V வாகனங்களை காட்சி படுத்த உள்ளது.
இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் மார்க்கெடிங் மற்றும் விற்பனை பிரிவு மூத்த தலைவர் , திரு ஞானேஸ்வர் சென் , “ மத்திய பிரதேச மாநிலத்தில், எங்களது மேலும் ஒரு டீலர்ஷிப் மையத்தை திறப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த புதிய மையத்தையும் சேர்த்து, மத்திய பிரதேச மாநிலத்தில் எங்களது டீலர்ஷிப் மையங்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. டீலர்ஷிப் மையங்களையும், நெட்வொர்கையும் பரவலாக்க வேண்டும் என்ற எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதி நவீன வசதிகளுடன் கூடிய டீலர்ஷிப் மையம், ஹோண்டா கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெருகி வரும் வரவேற்பை பூர்த்தி செய்யும் விதத்திலும், விற்பனை மற்றும் சேவைகளின் அதி நவீன வளர்ச்சியை அனுபவிக்கும் விதத்திலும், கூடுதல் வாகன ஆப்ஷன் மற்றும் வசதியை எளிதாக பெறும் விதத்திலும், ஒரு உயர் தரமான உரிமையாளர் போன்ற அனுபவத்தை தரும் விதத்திலும் இருக்கும் " என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் ஹோண்டா கனெக்ட் என்ற அதி நவீன தொழில் நுட்ப தளத்தை அறிமுகம் செய்தது. இன்றைய டிஜிடல் மயமான எங்களது வாடிக்கையாளர்களின் உலகில் , தொழில்நுட்ப புதுமையை புகுத்த வேண்டும் என்ற எங்களது இடை விடாத முயற்சியின் பலனாகவே இந்த ஹோண்டா கநெக்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன தொடர்புக்கான தொழில் நுட்பம் , எங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது மட்டுமின்றி எங்கள் ஹோண்டா கார் உரிமையாளர்களின் அனுபவத்தை கூடுதல் பாதுகாப்பாகவும் , வசதி மிக்கதாகவும், மகிழ்ச்சியானதாகவும் மாற்றுகிறது".
இந்த புதிய டீலர்ஷிப் மையத்தின் நிர்வாக இயக்குனர்,திரு. சஞ்சய் தாக்கர் இந்த திறப்பு விழ நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவிக்கையில், "எங்கள் வர்த்தகத்தின் மீது நம்பிக்கை வைத்து உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மிகஷ்ஹ சிறந்த , நவீன கட்டமைப்பு வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த டீலர்ஷிப் மையம் , வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வதேச தரத்திலான சேவையை வழங்கும்" என்று கூறினார்.
மேலும் வாசிக்க
2016 ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெறப்போகும் தன்னுடைய வாகனங்களின் தகவல்களை ஹோண்டா வெளியிட்டது.
0 out of 0 found this helpful