Honda Elevate, City மற்றும் Amaze விலை உயர்த்தப்பட்டுள்ளது, மற்றும் இப்போது ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் கிடைக்கும்
published on ஏப்ரல் 01, 2024 06:51 pm by sonny for ஹோண்டா சிட்டி
- 782 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா எலிவேட் மிக அதிகமாக விலை உயர்ந்துள்ளது. ஆனால் கூடுதலாக சில வசதிகளையும் பெறுகிறது
-
சிட்டி ஹைப்ரிட் மற்றும் அமேஸிற்கான வேரியன்ட் பட்டியலை மேம்படுத்தும் அதே வேளையில் எலிவேட் மற்றும் சிட்டிக்கான வேரியன்ட் வாரியான வசதிகளை ஹோண்டா மாற்றியமைத்துள்ளது.
-
ஹோண்டா எலிவேட் எஸ்யூவி இப்போது விலை ரூ.11.91 லட்சத்தில் இருந்து ரூ.16.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது.
-
ஹோண்டா சிட்டி செடான் இப்போது விலை ரூ.12.08 லட்சத்தில் இருந்து ரூ.16.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனை செய்யப்படுகிறது.
-
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் என்ட்ரி லெவல் V வேரியன்ட் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது டாப் வேரியன்ட் விலை ரூ. 20.55 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
ஹோண்டா அமேஸ் என்ட்ரி வேரியன்ட் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது அமேஸ் காரின் விலை ரூ.7.93 லட்சத்தில் தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).
புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் ஹோண்டா கார்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து மாடல்களுக்கும் என்ட்ரி லெவல் விலை உயர்த்தியுள்ளது. கூடுதலாக ஹோண்டா எலிவேட் மற்றும் ஹோண்டா சிட்டி இப்போது மேலும் ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகின்றன. ஹோண்டா அமேஸ் பாதுகாப்பு வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றியமைக்கபட்ட விலை மற்றும் ஒவ்வொரு மாடலின் வசதிகளுக்கான மாற்றங்கள் இரண்டையும் விரிவாகப் பார்ப்போம்.
புதிய ஹோண்டா விலை & அம்ச புதுப்பிப்புகள்
ஹோண்டா எலிவேட்
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
SV |
ரூ.11.91 லட்சம் |
ரூ.11.58 லட்சம் |
ரூ.33000 |
V |
ரூ.12.71 லட்சம் |
ரூ.12.31 லட்சம் |
ரூ.40000 |
VX |
ரூ.14.10 லட்சம் |
ரூ.13.71 லட்சம் |
ரூ.40000 |
ZX |
ரூ.15.41 லட்சம் |
ரூ.15.10 லட்சம் |
ரூ.31000 |
ஆட்டோமெட்டிக் |
|||
V CVT |
ரூ.13.71 லட்சம் |
ரூ.13.41 லட்சம் |
ரூ.30000 |
VX CVT |
ரூ.15.10 லட்சம் |
ரூ.14.80 லட்சம் |
ரூ.30000 |
ZX CVT |
ரூ.16.43 லட்சம் |
ரூ.16.20 லட்சம் |
ரூ.23000 |
எலிவேட் விலை ரூ.40000 வரை உயர்ந்துள்ளது. இது இப்போது ஸ்கோடா குஷாக்கிற்கு சற்று முன்னால் காம்பாக்ட் எஸ்யூவி இடத்தில் மிகவும் விலையுயர்ந்த என்ட்ரி வேரியன்ட் ஆக உள்ளது.
காம்பாக்ட் எஸ்யூவி ஆனது இப்போது 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக பெறுகிறது. முன்பு டாப் ZX வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டது. சீட்பெல்ட் ரிமைண்டர் மற்றும் ஐந்து இருக்கைகளுக்கும் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள் ஆகியவை இப்போது புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன. வேரியன்ட் வாரியான வசதிகளில் 7-இன்ச் TFT உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் வேனிட்டி மிரர் மற்றும் மூடியுடன் கூடிய முன் வைசர்கள் இப்போது ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. ஃபேன் வேகம் மற்றும் வெப்பநிலைக்கான முன் ஏசி வென்ட்ஸ் நாப் மற்றும் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல்களுக்கு இப்போது சில்வர் பெயிண்ட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
SV |
ரூ.12.08 லட்சம் |
ரூ.11.71 லட்சம் |
ரூ.37000 |
V |
ரூ.12.85 லட்சம் |
ரூ.12.59 லட்சம் |
ரூ.26000 |
VX |
ரூ.13.92 லட்சம் |
ரூ.13.71 லட்சம் |
ரூ.21000 |
ZX |
ரூ.15.10 லட்சம் |
ரூ.14.94 லட்சம் |
ரூ.16000 |
ஆட்டோமெட்டிக் |
|||
V CVT |
ரூ.14.10 லட்சம் |
ரூ.13.84 லட்சம் |
ரூ.26000 |
VX CVT |
ரூ.15.17 லட்சம் |
ரூ.14.96 லட்சம் |
ரூ.21000 |
ZX CVT |
ரூ.16.35 லட்சம் |
ரூ.16.19 லட்சம் |
ரூ.16000 |
ஹோண்டா நிறுவனம் சிட்டி செடான் காரின் விலையை ரூ.37000 வரை உயர்த்தியுள்ளது.
இது இப்போது 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது. முன்பு VX மற்றும் அதற்கும் கூடுதலான வேரியன்ட்களில் அனைத்து 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் ஆகியவற்றையும் வழங்குகிறது. கூடுதலாக பேஸ் வேரியன்ட் கேஜ் கிளஸ்டரில் 4.2-இன்ச் MID -யை பெறுகிறது மற்றும் VX வேரியன்ட் இப்போது பின்புற சன்ஷேட் மற்றும் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது.
ஹோண்டா சிட்டி ஹைப்ரிட்
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
IN |
விவரம் இல்லை |
ரூ.18.89 லட்சம் |
விவரம் இல்லை |
ZX |
ரூ.20.55 லட்சம் |
ரூ.20.39 லட்சம் |
ரூ.16000 |
குறைந்த தேவை காரணமாக ஹோண்டா என்ட்ரி லெவல் சிட்டி ஹைப்ரிட் வேரியன்ட்டை கொண்டுள்ளது அல்லது நிறுத்தப்படலாம். இங்கேயும் ஒரே அப்டேட் என்னவென்றால் இப்போது 5 சீட்களுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள் வருகின்றன.
ஹோண்டா அமேஸ்
வேரியன்ட் |
புதிய விலை |
பழைய விலை |
வித்தியாசம் |
E |
விவரம் இல்லை |
ரூ.7.16 லட்சம் |
விவரம் இல்லை |
S |
ரூ.7.93 லட்சம் |
ரூ.7.84 லட்சம் |
ரூ.11000 |
VX |
ரூ.9.04 லட்சம் |
ரூ.8.95 லட்சம் |
ரூ.9000 |
ஆட்டோமெட்டிக் |
|||
S |
ரூ.8.83 லட்சம் |
ரூ.8.73 லட்சம் |
ரூ.10000 |
VX |
ரூ.9.86 லட்சம் |
ரூ.9.77 லட்சம் |
ரூ.9000 |
என்ட்ரி லெவல் ஹோண்டா அமேஸின் விலை ரூ.11000 வரை உயர்ந்துள்ளது. இது இப்போது அனைத்து 5 இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்களுடன் வருகிறது. இங்கும் அமேஸின் பேஸ் வேரியன்ட் விரைவில் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான ஹோண்டா வரிசைக்கான அப்டேட்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட விலை விவரங்கள் இவை. எலிவேட் எஸ்யூவி -க்கான வேரியன்ட் வாரியான பட்டியலை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலே கூறப்பட்ட அனைத்து அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்
மேலும் படிக்க: ஹோண்டா சிட்டி ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful