சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஒரு சிறிய மேக்ஓவர் உடன் வந்துள்ள ஹோண்டா சிட்டி, ADAS வசதி ஹைபிரிட் இல்லாத வேரியண்டிலும் கிடைக்கிறது

modified on மார்ச் 03, 2023 03:58 pm by rohit for ஹோண்டா சிட்டி

ஸ்டாண்டர்ட் சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் இரண்டும் முறையே புதிய என்ட்ரி - லெவல் வேரியண்ட் SV மற்றும் V ஆகியவற்றைப் பெற்றுள்ளன.

  • ஹோண்டா நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்டட் சிட்டியின் விலையை ரூ.11.49 லட்சத்தில் இருந்து ரூ.15.97 லட்சமாக நிர்ணயித்துள்ளது.

  • சிட்டி ஹைப்ரிட் இப்போது ரூ.18.89 லட்சம் முதல் ரூ.20.39 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

  • காரின் முன்புற மற்றும் பின்புற ப்ரொஃபைல்கள் சிறு வடிவ மாற்றங்களைப் பெறுகின்றன.

  • ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட்கள் ஆகியவை புதிய அம்சங்களாகும்.

  • ஹோண்டா முந்தைய அதே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் எஞ்சின் ஆப்ஷன்களுடன் செடானை வழங்குகிறது.

  • புதுப்பிக்கப்பட்டுள்ள டீசல் மாறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே புதிய பேஸ்-ஸ்பெக் டிரிம்கள் (முறையே SV மற்றும் V) மற்றும் சில கூடுதல் அம்சங்களைப் பெறுகின்றன, வழக்கமான சிட்டி காரானது மிகப்பெரிய பலனைப் பெறுகிறது: ADAS. புதிய வேரியண்ட் வரிசை மற்றும் விலைகள் பின்வருமாறு:

வேரியண்ட் வாரியான விலைகள்

வேரியண்ட்கள்

பழைய விலை

புதிய விலை

வேறுபாடுகள்

சிட்டி பெட்ரோல்

SV

ரூ. 11.49 இலட்சம் (புதிய)

V

ரூ. 11.87 இலட்சம்

ரூ. 12.37 இலட்சம்

+ரூ 50,000

V CVT

ரூ. 13.27 இலட்சம்

ரூ. 13.62 இலட்சம்

+ரூ. 35,000

VX

ரூ. 13.33 இலட்சம்

ரூ. 13.49 இலட்சம்

+ரூ. 16,000

VX CVT

ரூ. 14.63 இலட்சம்

ரூ. 14.74 இலட்சம்

+ரூ. 11,000

ZX

ரூ. 14.32 இலட்சம்

ரூ. 14.72 இலட்சம்

+ரூ. 40,000

ZX CVT

ரூ. 15.62 இலட்சம்

ரூ. 15.97 இலட்சம்

+ரூ. 35,000

சிட்டி ஹைப்ரிட்

V

ரூ. 18.89 இலட்சம்

ZX

ரூ. 19.89 இலட்சம்

ரூ. 20.39 இலட்சம்

+ரூ 50,000

காம்பாக்ட் செடானின் ஸ்டான்டர்டு மற்றும் ஹைபிரிட் வகைகளின் விலை ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது. இரண்டு மாடல்களும் முன்பை விட மிகவும் விலை குறைவாக கிடைக்கின்றன அவற்றின் புதிய என்ட்ரி-லெவல் டிரிம்கள்தான் இதற்கு காரணம் .

இந்த அப்டேட்டுகளுடன், ஹோண்டா சிட்டியின் டீசல் வகைகளை கைவிட்டுள்ளது.

வடிவமைப்பு புதுப்பிப்புகள்

சிட்டி -யின் முன் பக்கத்தில் குறைந்த அளவு புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது, இதில் வளைந்து நெளிந்த பேட்டர்னுடன் கூடிய திருத்தப்பட்ட கிரில், அதிக கண்கவர் LED DRLs -கள் மற்றும் ரீடன் பம்பர் ஆகியவை அடங்கும். ப்ரொஃபைலிலும் பின்பக்கத்திலும், லேசாக திருத்தப்பட்ட அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் பின்புற பம்பர் தவிர இந்த செடானில் பெரிய அளவுக்கான மாற்றங்கள் எதுவும் இல்லை.

ஹோண்டா கார்பன் ஃபைபர் போன்ற எஃபெக்டை முன்புற மற்றும் பின்புற பம்பர்களில் கொடுத்துள்ளது, மேலும் கேபினுக்குள் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனலைச் சுற்றியும் உள்ளது. செடான் இப்போது இருக்கும் பேலெட் -டில் கூடுதலாக அப்சிடியன் ப்ளூ பேர்ல் ஷேடைப் பெறுகிறது.

புதிதாக என்ன இருக்கிறது ?

வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆம்பியன்ட் லைட்கள் மற்றும் ரெயின்-சென்சார் வைப்பர்கள் ஆகியவற்றை ஃபேஸ்லிஃப்ட் சிட்டியில் ஹோண்டா பொருத்தியுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, சிட்டி ஹைப்ரிடில் இருந்து அட்வான்ஸ்டு டிரைவ் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை மிகப்பெரிய அப்டேட்டாகப் பெற்றுள்ளது.

இது லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ-எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. செடானின் ஹைபிரிட் பதிப்பானது ADAS ஐ ஸ்டான்டர்டாக பெறுகிறது.

ADAS பாதுகாப்பு அமைப்பும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. லோ ஸ்பீடு ஃபாலோ (ஹைபிரிட் வகையில் மட்டும்) மற்றும் லீடு கார் டிப்பார்ச்சர் நோட்டிஃபிக்கேஷன் சிஸ்டமும் சேர்க்கப்பட்டு இதன் தகவமைக்கப்பட்ட க்ரூய்ஸ் கண்ட்ரோல் திறனும் விரிவாக்கப்பட்டுள்ளது. முன்னால் செல்லும் வாகனத்திடமிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்க ‘லோ ஸ்பீடு ஃபாலோ’ உதவுகிறது. அதேபோன்று முன்னால் செல்லும் வாகனம் நகர்ந்ததை காட்சி ̀ரீதியாகவும் ஒலி வடிவிலும்‘லீடு கார் டிப்பார்ச்சர் நோட்டிஃபிக்கேஷன் சிஸ்டம்’ ஓட்டுனருக்குத் தெரிவிக்கிறது.

மேலும், ஹோண்டா அதனுடைய V வேரியன்டிற்கு (ஒன்-அபோவ்-பேஸ்) மேற்பட்டவற்றிற்கு ADAS எளிதில் கிடைக்கச் செய்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான பிற பிரபலமான சந்தை பிராண்டுகள் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அவற்றின் டாப் வேரியன்டுகளுக்கு மட்டுமே உரியதாக கட்டுப்படுத்தியிருக்கின்றன.

ஹோண்டா செடானில் உள்ள மற்ற அம்சங்களில் எட்டு அங்குல தொடுதிரை, சன்ரூஃப், லேன்வாட்ச் கேமரா மற்றும் க்ரூய்ஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும். இதன் பாதுகாப்பு சாதனங்களில் ஆறு ஏர்பேகுகள், ஒரு ரியர்வியூ கேமரா, மற்றும் EBD-யுடன் கூடிய ABS ஆகியவை அடங்கும்.

பெட்ரோல் பவர் மட்டுமே

இந்த மிட்லைஃப் புதுப்பிப்புகளுடன் சிட்டி இப்போது பெட்ரோல் வகை மட்டுமே என்று மாறிவிட்டது. அதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இவை:


விவரக்குறிப்புகள்


1.5-லிட்டர் பெட்ரோல்


1.5-லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட்


ஆற்றல்

121PS


126PS (இணைந்தது)


டார்க்

145Nm


253Nm (இணைந்தது)


டிரான்ஸ்மிஷன்


6-ஸ்பீடு MT, 7-ஸ்டெப் CVT

e-CVT

0.7kWh பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் சிட்டி ஹைப்ரிட் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. டீசல் வகை வாகனங்கள் இல்லாமல் போனதால் (சிட்டி-யின் வரிசையிலிருந்து மட்டுமல்ல, முழுப் பிரிவிலுமிருந்தும்), சிட்டி ஹைபிரிட் இப்போது 20.15kmpl (நகரங்களில்) சோதனை செய்யப்பட்ட எரிபொருள் சிக்கனத்துடன் ரியல் வேர்ல்டு டிரைவிங் நிலைமைகளில் அதிக மைலேஜ் 23.38kmpl (நெடுஞ்சாலைகளில்) கொண்ட செடானாக உள்ளது.

போட்டியாளர்கள் யார்?

ஹோண்டா-வின் இந்த கச்சிதமான செடான் அதன் போட்டியாளர்களாக வோக்ஸ்வேகன் வெர்செஸ், மாருதி சியாஸ், ஸ்கோடா ஸ்லாவியா, போன்றவற்றைக் கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் வெளியாகப்போகும் நியூ-ஜென் ஹூண்டாய் வெர்னா -வும் இந்தப் பட்டியலில் இருக்கிறது. ஆயினும், ஹைபிரிட் வகையில நேரடிப் போட்டி எதுவும் இல்லை.

மேலும் படிக்கவும்: ஹோண்டா சிட்டி 2023 டீசல்

r
வெளியிட்டவர்

rohit

  • 44 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹோண்டா சிட்டி

Read Full News

explore similar கார்கள்

ஹோண்டா சிட்டி

Rs.11.82 - 16.30 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்17.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை