• English
  • Login / Register

ஜப்பானில் இருந்து பிரெத்தியாகமாக வெளிவந்திருக்கும் ஹோண்டா BR-V -இன் படத்தொகுப்பு (பிக்சர் கேலரி)

published on அக்டோபர் 27, 2015 08:44 pm by raunak for ஹோண்டா பிஆர்-வி

  • 13 Views
  • 19 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

Honda BR-V

இந்தியாவில், ஹோண்டா இந்தியா அடுத்ததாக அறிமுகப்படுத்த உள்ள மிகப் பெரிய காரான BR – V மாடலை, ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரத்தில், ஒட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமக்கு வந்தது. இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர் தனது புதிய BR-V மாடலின் அறிமுகத்துடன், தற்போது பரபரப்பாக வளர்ந்து கொண்டிருக்கும் காம்பாக்ட் SUV பிரிவில் நுழையவிருக்கிறார். இதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், BR-V அதன் போட்டியாளர்களை நகலெடுத்தது போல அல்லாமல், 7 பேர் அமர்ந்து செல்லக் கூடிய 7 இருக்கைகள் பொருத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், ஹோண்டாவின் பரம போட்டியாளரான ஹுண்டாய் நிறுவனம், கிரேட்டா மாடலை அறிமுகப்படுத்தியது. தற்போது, கொரியன் வாகன தயாரிப்பாளரின் கிரேட்டா அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது, அதாவது, ஒரு மாதத்தில் சுமார் 7 ஆயிரம் கார்களுக்கு மேல் ரீடைல் செய்யப்படுகிறது. BR-V அறிமுகமாகும் வேளையில், ரினால்ட் நிறுவனமும் தனது புதிய டஸ்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை, மேம்படுத்தப்பட்ட மெக்கானிக்கல் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டஸ்டர் காரின் க்லோன் மாடலான நிஸ்ஸான் டெர்ரானோ காரிலும், இத்தகைய மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். BR-V –இல் 7 இருக்கைகள் வருவதனால், 7 இருக்கைகள் கொண்ட மஹிந்த்ரா ஸ்கார்பியோ (இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் ஜெனரேஷன்) மற்றும் மேம்படுத்தப்பட்ட 2015 டாடா சபாரி காருடனும், இந்த கார் போட்டியிடும்.

Honda BR-V

உண்மையிலும் உண்மை: ஹோண்டா BR-V அடுத்த வருடம் அறிமுகமாகிறது

அடுத்து நடக்கவிருக்கின்ற 2016 இந்தியன் வாகன கண்காட்சியில் (இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ) ஹோண்டாவின் BR-V பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். அதன் பின், மிக விரைவிலேயே சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, இதன் இஞ்ஜின் ஆப்ஷன்ஸ் உறுதியாகிவிட்டன. அதாவது, இதன் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் i-VTEC இஞ்ஜினும், இதன் டீசல் மாடலில் 1.5 லிட்டர் i-DTEC இஞ்ஜினும் பொருத்தப்பட்டு வெளியிடப்படும். ட்ரான்ஸ்மிஷன் வகைகளைப் பார்க்கும் போது, இதன் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வகையைப் பெற்று வரும். எனினும், பெட்ரோல் வகையில் மட்டும் ஹோண்டாவின் புதிய CVT ட்ரான்ஸ்மிஷன் வருகிறது. நமது ஃபர்ஸ்ட் ட்ரைவ் ஆய்வுரை விரைவில் வெளியிடப்படும். அதுவரை, நாம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் 3 வரிசை இருக்கைகளுடன் வரும் ஹுண்டாய் கிரேட்டாவின் தெளிவான படங்களைப் பார்த்து மகிழுங்கள்.

வெளிப்புறத் தோற்றம்

Honda BR-V

BR-V மாடல், இதற்கு முந்தைய ப்ரியோவின் தொழில்நுட்பத்தில் தயாரானது என்று கூறப்பட்டாலும், ப்ரியோ கார் வரிசையில் வரும் அமெஸ், மொபிலியோ போல இல்லாமல், BR-V மாடல் புது விதமான வெளித்தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு, ஹோண்டா இன்டர்நேஷனல் SUV வரிசைகளான CR-V மற்றும் HR-V போன்ற கார்களின் சாயலில் உள்ளது.

Honda BR-V

SUV பிரிவு கார்களை ஒத்திருப்பதற்காக BR-V –இன் வெளிப்புற வடிவமைப்பில், நான்கு புறங்களிலும் நெகிழியால் (பிளாஸ்டிக்) ஆன கிளாடிங்க் செய்யப்பட்டு, முன்புற மற்றும் பின்புற முட்டுத் தாங்கிகளில் (பம்பர்) இரண்டு வித வண்ணத்தை இட்டு, கம்பீரமாக வடிவமைத்துள்ளனர்.

மேலும் வாசிக்க: ஹோண்டா BR-V: வண்ண விவரங்கள் வெளியிடப்பட்டது

தனித்தன்மையுடன் இருந்தாலும், BR-V –யின் பக்கவாட்டு வடிவமைப்பு மொபிலியோ காரை நினைவு படுத்துகிறது. முன்புற மற்றும் பின்புற கதவுகள் கிட்டத்தட்ட MPV-யின் சாயலில் உள்ளன. ஜன்னல் விளிம்புகள் (விண்டோ கிங்க்) கூட மொபிலியோவைப் போலவே உள்ளன.

BRV மாடலின் முன்புற ஹெட்லாம்ப்கள் நேர்த்தியாகவும், சற்றே பின்புறம் சென்றவாறு வடிவமைக்கப்பட்டிருப்பது, CR-V / HR-V மாடலை ஒத்திருக்கின்றது. மேலும், இந்த அமைப்பில், லோ பீம் புரொஜெக்டர் லாம்ப் மற்றும் ஹை பீம் ஹலோஜென் லாம்ப் பொருத்தப்பட்டு வருகின்றது.

ஹோண்டா BR-V –இன் பின்புற விளக்குகள் அழகாக மடிக்கப்பட்டது போல காணப்படுகின்றன. LED பொருத்தப்பட்ட இந்த பின்புற விளக்குகள் இரண்டும் உட்புறமாக நீண்டு இணைக்கப்பட்டுள்ளன. கவனமாகப் பார்த்தால், இதன் பூட் மூடி மிகவும் கீழே உள்ளது தெரியும். இது மொபிலியோவில் உள்ளதைப் போலவே, சாமான்களை ஏற்றுவதற்கு எளிதாக இருக்கிறது.

BR-V மாடலின் பின்புறத்தைப் பார்க்கும் ரியர் வியூ மிர்ரர், LED சைட் ரெபீட்டர் பொருத்தப்பட்டு, ஜாஸ் மற்றும் சிட்டி போன்ற கார்களில் வருவதைப் போல உள்ளது.

BR-V கார், டிவின் 5 ஸ்போக் டையமண்ட் கட் கொண்ட அலாய் சக்கரங்களில் 195/60 க்ராஸ் செக்ஷன் கொண்ட R16 டயர் பொருத்தப்பட்டு, கம்பீரமாக சாலையில் செல்லும்.

இந்த கார் மோனோகோக் தொழில்நுட்பத்தில் பயணிக்கிறது. இதன் ஸ்பேர் வீல் டிரங்க்கிற்கு கீழே பொருத்தப்பட்டுள்ளதால், வெளியில் இருந்தே எடுத்து பயன்படுத்துவதற்கு வசதியாக உள்ளது.

உட்புறத் தோற்றம்

Honda BR-V

ஹோண்டா BR-V –க்கான முகப்பு பெட்டி (டாஷ் போர்டு), ப்ரியோ/அமெஸ்/மொபிலியோ போன்ற மாடல்களில் இருந்து நகலெடுத்தது போல இல்லாமல், சிட்டி/ஜாஸ் மாடல்களில் உள்ள டாஷ் போர்டை சற்றே மாற்றி அமைத்தது போல இருக்கிறது. இது வரவேற்கத்தக்க வடிவமைப்பாகும்.

ஹோண்டா நிறுவனம், மிகவும் புத்திசாலித்தனமாக டாஷ் போர்டை வடிவமைத்திருக்கிறது. விலை நிர்ணயிக்கும் போது, நிச்சயம் இதனை கருத்தில் கொள்ளும். முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்ட டாஷ் போர்டு, வெள்ளி நிற வேலைப்பாடுகளில் மிளிர்கிறது. இதன் டாஷ் போர்டு சிட்டி/ஜாஸ் மாடல்களின் நகலாக இருந்தாலும், சென்ட்ரல் டனல் கொண்ட ஸ்டியரிங் வீல் (கீழே உள்ள படத்தைப் பார்க்க) ப்ரியோ/அமெஸ்/மொபிலியோ போன்ற கார்களில் இருந்து பெறப்பட்டது.

மேலும் வாசிக்க: இந்தியாவில் அறிமுகமாக உள்ள ஹோண்டா BR-V பற்றிய பிரத்தியேக தகவல்கள்: ஜப்பான் நாட்டில் இருந்து வெளிவந்தன

கதவின் பட்டைகள் மற்றும கேபினில் உள்ளே பொருத்தப்பட்ட ஏனைய அம்சங்கள் ப்ரியோ/அமெஸ்/மொபிலியோ கார்களில் உள்ளதைப் போலவே உள்ளன. (கீழே உள்ள படத்தைப் பாருங்கள் – மூன்றாவது வரிசையில் உள்ள பாட்டில் மற்றும் மொபைல் ஃபோன் வைத்துக் கொள்ள வசதியாக உள்ள ஹோல்டர்கள், மொபிலியோவில் உள்ளதைப் போலவே இருக்கிறது)

BR-V –இன் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர் பெரிய MID (மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே) திரை பொருத்தப்பட்டு உயர்தரமாக காட்சி தருகிறது. இந்த அமைப்பு சிட்டி காரில் இருந்து பெறப்பட்டதாகும்.

BR-V டாஷ் போர்டு டிசைன் சிட்டி மற்றும் ஜாஸ் கார்களில் இருப்பதைப் போலவே இருந்தாலும், அவற்றில் உள்ள டச் பேனல் கிளைமேட் கண்ட்ரோல் இதில் பொருத்தப்படவில்லை. ஆனால், HVAC அமைப்பிற்கான பட்டன்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள கைகளால் இயக்கக் கூடிய ரீசர்குலேஷன் கைபிடி மிகவும் பழைய மாடலில் உள்ளது. எனவே, விலை நிர்ணயிக்கும் போது, இதுவும் கருத்தில் கொள்ளப்பட்டு, விலை சற்றே குறையக் கூடிய வாய்ப்பிருக்கிறது.

மொபிலியோவில் கால் வைப்பதற்கு விசாலமான இடம் உள்ளதைப் போலவே, BR-V –இன் இரண்டாவது வரிசையும் மிகவும் விசாலமாக இருக்கிறது. சாமான்கள் வைக்கும் இடமும் விசாலமாகவே உள்ளது. இதன் இரண்டாம் வரிசையை 60:40 –யாக பிரித்துக் கொள்ளலாம். மேலும், மூன்றாவது ரோவை 50:50 –யாக பிரித்துக் கொள்ளலாம்.

பின்புறத்தில் சாமான்கள் வைக்கும் இடம் மிகவும் பாங்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனைய 3 வரிசைகளும் சற்றே உயர்ந்து இருக்கும் போதும், இதன் மூடி சற்றே கீழே பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இந்தோனேஷியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பான ஹோண்டா BR-V மாடல் வெளியீட்டு நிகழ்ச்சி – இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Honda பிஆர்-வி

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டஸ்டர் 2025
    ரெனால்ட் டஸ்டர் 2025
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience