• English
    • Login / Register

    இந்தோனேசிய வாகன சந்தையில் ஹோண்டா ப்ரியோ RS கார்களின் அறிமுகம் உறுதி - ஹோண்டாவின் துணை நிறுவனம் தகவல்

    manish ஆல் ஜனவரி 29, 2016 01:44 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    24 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    சமீபத்தில் , ஹோண்டா ப்ரியோ கார்களின் உற்பத்திக்கு தயாராக உள்ள மாடலின் படங்கள் ஆன்லைனில் கசிந்தன.  இந்த ஹேட்ச்பேக் ரக காரை இந்தோனேசிய சந்தையில் அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.  ஹோண்டா நிறுவனத்தின் இந்தோனேசிய துணை நிறுவனமான PT  ஹோண்டா ப்ராஸ்பெக்ட் மோட்டார்ஸ் ப்ரியோ RS கார்களின் பெயரை பதிவு செய்துள்ள தகவலை ஆட்டோநெட்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியின்  மூலம் ப்ரியோ RS  கார்கள் இந்தோனேசிய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது உறுதியாக தெரிகிறது. தற்போது உள்ள ப்ரியோ கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் என்ஜின் வகை தான் இந்த புதிய காரிலும் பொருத்தப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது. தற்போதய கார்களில் 88PS அளவுக்கு சக்தி மற்றும் அதிகபட்சமாக  109Nm அளவுக்கு டார்கையும் உற்பத்தி செய்யும்     i-VTEC   என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 

    வடிவமைப்பை பொறுத்தவரை,  காரின் முகத் தோற்றம் மொபிலியோ கார்களை நினைவூட்டும் விதத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. LED, DRL களைக் உள்ளடக்கிய புதிய ஹெட்லேம்ப் க்ளஸ்டர் , ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ்,  ஹோண்டா ஜாஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களை நினைவூட்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.  குரோம் பூச்சுடன் கூடிய புதிய கருப்பு வண்ண க்ரில் , தேன்கூட்டு வலைப்போல் நெருக்கமாக பின்னப்பட்டுள்ள ஏயர்டேம் (airdam) உடன் கூடிய மறு வடிவமைக்கப்பட்டுள்ள எடுப்பான பம்பர்கள் என்று பல  புதிய மாற்றங்களை காண முடிகிறது. பக்கவாட்டில் பெரிய அளவிலான டைமன்ட் - கட் அல்லாய் மற்றும் சைட்ஸ்கிர்ட்ஸ் (side skirts)  ஆகியவை பளிச்சென்று தெரிகிறது. காரின் பின்புறத்தில் , குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்ஹாஸ்ட் மப்ளர் , பின்புற ஸ்பாய்லர், நல்ல ஸ்போர்ட்டியான தோற்றம் தரும் வகையில் மறு வடிவமைக்கப்பட்டுள்ள பின்புற பம்பர் மற்றும் RS என்ற பெயர் கொண்ட பேட்ஜ் ஆகிய மாற்றங்கள்  தெளிவாக தெரிகின்றன. காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை ,  கேபின் முழுதும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு உள்ளது.   மேலும்  டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பும் உட்புறத்தை அலங்கரிக்கிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் இந்தியாவில் விற்பனையாகி வரும் ப்ரியோ மற்றும் அமேஸ் கார்களிலும் விரைவில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் வாசிக்க   

    was this article helpful ?

    Write your Comment on Honda ப்ரியோ

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience