சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெறப்போகும் தன்னுடைய வாகனங்களின் தகவல்களை ஹோண்டா வெளியிட்டது.

raunak ஆல் ஜனவரி 14, 2016 05:41 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
19 Views

வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தன்னுடைய BR – V , புதிய அக்கார்ட் மற்றும் ஜாஸ் ரேசிங் கான்செப்ட் ஆகியவைகளை ஹோண்டா காட்சிக்கு வைக்கிறது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப் போகும் தனது கார்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் BR – V காம்பேக்ட் க்ராஸ்ஓவர்/ SUV வாகனங்களையும் புதிய அக்கார்ட் கார்களையும் காட்சிக்கு வைக்க உள்ளனர். இதனுடன் இணைந்து ஹோண்டா ப்ராஜெக்ட் 24 மற்றும் ஹோண்டா ஜாஸ் ரேசிங் கான்செப்ட் ஆகிய கான்செப்ட் வெர்ஷன்களையும் , ப்ரியோ , ஜாஸ் , அமேஸ், சிட்டி, மொபிலியோ மற்றும் CR – V கார்களின் ப்ரொடக்க்ஷன் வெர்ஷன்களையும் (உற்பத்திக்கு தயாராக உள்ள வெர்ஷன் ) காட்சி படுத்த உள்ளது. இவை தவிர, எப்போதும் போல அசிமோ (ASIMO) என்ற ( அட்வான்ஸ்ட் ஸ்டெப் இன் இன்னவேடிவ் மொபிலிட்டி ) மனிதர்களைப் போன்ற ரோபோவையும் ஹோண்டா காட்சிக்கு வைக்க உள்ளது. மேலும் -மெக்லாரென் - ஹோண்டா MP4 - 30 F1 ரேசிங் கார் ஒன்றும் இந்த எக்ஸ்போவில் ஹோண்டா நிறுவனத்தால் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

ஹோண்டா BR – V க்ராஸ்ஓவர் வாகனங்களின் இந்திய பிரவேசம் இந்த ஆட்டோ எக்ஸ்போ மூலம் நடந்தேற உள்ளது. ஹயுண்டாய் க்ரேடா மற்றும் இதே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ரெனால்ட் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட டஸ்டர் வாகனங்களுடனும், இன்னும் சில SUV களுடனும் இந்த புதிய BR – V வாகனங்கள் போட்டியிடும் என்று தெரிகிறது. மூன்று வரிசை இருக்கைகள் இந்த கார்களுக்கு பெரியதொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனைய SUV வாகனங்களில் அந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் i-DTEC டீசல் என இரண்டு ஆப்ஷன்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆறு - வேக மேனுவல் கியர் அமைப்பு அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டாலும் , பெட்ரோல் என்ஜினில் CVT ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றும் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

ஹோண்டா இந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள புதிய தலைமுறை மேம்படுத்தப்பட்ட ஹோண்டா அக்கார்ட், 9வது மேம்படுத்தப்பட்ட பதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் பற்றிய தகவல்கள் ஜூலை 2015 ல் வெளியானது. உட்புற / வெளிப்புற தோற்றங்களில் லேசான மாற்றங்களே செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்டு சொல்லும் வகையில் 7 - அங்குல இன்போடைன்மென்ட் அமைப்பு , ஆப்பிள் கார்ப்ளே மற்றும் கூகிள் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன. என்ஜினைப் பொறுத்தவரை 2.4-லிட்டர் i-VTEC என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிய வருகிறது. ஆறு -வேக மேனுவல் மற்றும் CVT கியர் அமைப்பு இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. டொயோடா கேம்ரி ஹைபிரிட் கார்கள் பெற்றுள்ள நல்ல வரவேற்பினால் , ஹோண்டா நிறுவனமும் இந்த அக்கார்ட் கார்களின் ஹைபிரிட் வெர்ஷன் ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் வாசிக்க

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.92.90 - 97.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை