2016-ல் ஹோண்டாவிடம் இருந்து வெளிவரவுள்ள கார்கள்
published on ஜனவரி 04, 2016 05:47 pm by sumit
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
புத்தாண்டு ஆரம்பித்துவிட்ட நிலையில், வாகன தயாரிப்பாளர்களின் மீதான எதிர்பார்ப்புகள் புதுப்பிக்கப்பட்டதாக, 2016 ஆம் ஆண்டை வாகன ஆர்வலர்கள் துவங்கி உள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் க்ரேடா, பெலினோ மற்றும் க்விட் போன்ற சில வெற்றிகரமான கார்களின் அறிமுகங்களை காண முடிந்தது போல, இந்த 2016-லும் சில சிறந்த அறிமுகங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன. எனவே மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான ஹோண்டாவிடம் இருந்து 2016 ஆம் ஆண்டில் எதிர்ப்பார்க்கப்படும் கார்களின் ஒரு பட்டியலை நாங்கள் தொகுத்து வழங்குகிறோம்.
ஹோண்டா BR-V
ஆட்டோ எக்ஸ்போ 2016-ல், ஒரு கச்சிதமான SUV-யான BR-V-வை, ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபிலியோவின் அதே பிளாட்பாமை இது கொண்டிருந்தாலும், BR-V-வில் ஒரு கூடுதலான உயர்ந்த நிலைப்பாட்டை காண முடிகிறது. அமேஸில் உள்ள 1.5-லிட்டர் என்ஜினையும், அதனுடன் ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் இந்த கார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டாவின் எர்த் டிரீம்ஸ் டெக்னாலஜியில் செயல்படும், ஒரு CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸையும் இவ்வாகனம் பெற்றிருக்கலாம். எங்கள் கணிப்பு படி, இதன் அறிமுக விலை ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்கு உட்பட்டதாக அமையலாம்.
ஹோண்டா பிரியோ
எல்லா காரியங்களும் திட்டத்திற்கு ஏற்ப நடக்கும் பட்சத்தில், 2016-ல் பிரியோவின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஹோண்டா வெளியிட முடியும். தற்போதைய பிரியோவை இயக்கி வரும் அதே 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜினையே இதுவும் கொண்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், இந்நிறுவனத்தின் i-DTEC வரிசையை சேர்ந்த புதிய 1.1-லிட்டர் டீசல் என்ஜினையும் இதில் ஹோண்டாவால் கொண்டுவரப்பட வாய்ப்புள்ளது. இரு பெடல் டிரைவிங்கை விரும்புவோருக்காக, இந்த காரில் மேனுவல் உடன் ஆட்டோமேட்டிக் பதிப்புகளும் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016 ஆம் ஆண்டின் இறுதியில் இவ்வாகனத்தின் அறிமுகம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் விலை ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6.5 லட்சத்திற்குள் இடைப்பட்டதாக அமையலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஹோண்டா சிட்டி
தனது பிரபலமான சேடனான சிட்டியின் ஒரு புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்ய ஹோண்டா தயாராக உள்ளது. இது ஆட்டோ எக்ஸ்போ 2016-ல் வெளியிடப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காரின் இயந்திரவியல் 2013 சிட்டியை ஒத்துக் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016 சிட்டியின் வெளிபுறம் மற்றும் உட்புறத்தில் முக்கிய அழகியல் மாற்றங்களை பெறலாம் என்று தெரிகிறது. இதன் அறிமுக விலை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.11 லட்சத்திற்குள் உட்பட்டு நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு
தனது பிரிமியம் சேடனான அக்கார்டை, 2016-ல் மீண்டும் கொண்டு வர ஹோண்டா தயாராக உள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் விற்பனை, சில காரணங்களால் கடந்த 2013 ஆம் ஆண்டோடு நிறுத்தப்பட்டது. ஹோண்டா சிவிக் ஹைபிரிடு போல, அக்கார்டை முழு கட்டமைப்பு கொண்ட யூனிட்டாக (கம்பிளிட்லி பில்டு யூனிட் - CBU) இந்த ஜப்பான் வாகனத் தயாரிப்பாளர் கொண்டு வரமாட்டார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. உள்ளூர் தொழிற்சாலைகளிலேயே இந்த யூனிட்கள் தயாரிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் அறிமுக விலை ரூ.30 லட்சம் முதல் ரூ.34 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே இந்த கார், சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க