• English
  • Login / Register

ஹோண்டா கனெக்ட்-டை, ஹோண்டா இந்தியா அறிமுகம் செய்கிறது

published on டிசம்பர் 17, 2015 04:19 pm by raunak

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

உங்களின் காரை குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உடனுக்குடன் தகவல்களை, உங்கள் குடும்பத்துடன் நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் வசதியை கொண்ட ஒரு தகவல்தொடர்பு ஸ்மார்ட்போன் ஆப் ஆகும்.

ஜெய்ப்பூர்:ஹோண்டாவின் வாகனங்கள் மற்றும் மற்ற சேவைகளை குறித்த விரிவான தகவல்களை செளகரியமான அணுகுமுறையுடன் அளிக்க கூடிய ஹோண்டா கனெக்ட் என்ற ஒரு ஆப்—பை, ஹோண்டா கார் இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோண்டா கனெக்ட் அப்ளிகேஷன், iOS மற்றும் ஆன்ட்ராய்டு பிளாட்பாம்களுக்கு ஏற்ப கிடைக்கின்றன. இதை ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுல் ப்ளே ஆகியவற்றில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதில் உள்ள சில அம்சங்களை பெறுவதற்கு, ஒரு ‘கனெக்டேட் டிவைஸ்’ தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த டிவைஸை ரூ.2,999 என்ற மானிய விலையில், முதல் 20,000 வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா நிறுவனம் அளிக்க உள்ளது. இந்த கனெக்டேட் டிவைஸ் மூலம், இணைக்கப்பட்டுள்ள காரில் மின்டா i-கனெக்ட் மூலம் அளிக்கப்படும் அம்சங்களை பெற உதவுகிறது. மேலும் ஹோண்டா ஜாஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா CR-V ஆகியவற்றின் எல்லா புதிய வாடிக்கையாளர்களுக்கும், ஹோண்டா டீலர்ஷிப்களின் மூலம் அளிக்கப்படுகிறது.

இந்த புதிய தகவல் பிளாட்பாம் குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடேட் தலைவர் மற்றும் CEO ஆன திரு.காத்சுஷி இனோய் கூறுகையில், “இன்று நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக, தொழிற்நுட்பம் ஒன்றார கலந்துவிட்டது. எங்கள் வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் அடிப்படையிலான வாழ்க்கை பாணிக்கு தகுந்த முறையில் ஏற்ற வகையிலான கண்டுபிடிப்புகளை உருவாக்குவது, இந்த ஹோண்டா கனெக்ட்-டை வடிவமைத்துள்ளதன் பின்னணியில் அமைந்த எங்களின் இலக்குகளில் ஒன்றாகும். இந்த பிளாட்பாம் மூலம் கிடைக்கும் ஒரு மதிப்பு மிகுந்த தகவல் தொடர்பு மார்க்கத்தின் விளைவாக, எங்களின் வாடிக்கையாளர்களுடனான ஹோண்டாவின் பிணைப்பு மேலும் வலுவுள்ளதாக மாறுகிறது” என்றார்.

புதிய ஆப் மற்றும் கனெக்டேட் டிவைஸின் அம்சங்களை காண்போம்.

செளகரியமான அம்சங்கள்

சர்வீஸ் முன்பதிவு / அலர்ட்கள்: இந்த சர்வீஸ் அம்சங்களின் மூலம் ஒரு ஹோண்டா வாகனத்தின் பராமரிப்பு குறித்து நினைவுப்படுத்தும் அறிவிப்புகளை, ஹோண்டா உரிமையாளருக்கு அனுப்பி வைக்கிறது. இதில் கால இடைவெளி (பிரியோடிக்) சர்வீஸ் அலர்ட்ஸ், ஆன்-லைன் சர்வீஸ் சந்திப்புகளை (அப்பாய்மெண்ட்ஸ்) ஏற்பாடு செய்தல், வாகனத்தில் செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பராமரிப்பு பணிகளை குறித்த ஒரு விரிவான பின்னணியை கட்டியெழுப்புதல், சந்திக்க வேண்டிய தேதி, டீலர் பெயர், செலவு மற்றும் பல காரியங்களை உட்படுத்தி உள்ளது.

புதியது மற்றும் கருத்து அமைப்பு என்ன: ஹோண்டாவின் புதிய தயாரிப்புகள் மற்றும் பிரச்சாரங்கள் ஆகியவற்றின் மேம்பாடுகள் குறித்து பயனீட்டாளர்களுக்கு அறிவிக்கும் ஒரு வாய்ப்பை ஹோண்டா கனெக்ட் உருவாக்கி கொடுக்கிறது. மேலும், பயனீட்டாளர்கள் தங்களின் கருத்துகளை நேரடியாக நிறுவனத்திடம் தெரிவிக்க முடிகிறது.

உபயோகமான அம்சங்கள்

மேனுவல் SOS அம்சம்: ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தாங்கள் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையில் சிக்கி தவிப்பதாக வாடிக்கையாளர்கள் உணர்ந்தால், இந்த மேனுவல் SOS அம்சத்தில் ஒரு கிளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர் இருக்கும் நிலை குறித்து அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்வார்கள்.

பிட் ஸ்டாப்கள்: நாட்டின் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த நேரத்திலும் நேவிகேஷன் அசிஸ்டென்ஸ் மூலம் ஒரு ரியல் டைம் அடிப்படையில், அருகாமையில் உள்ள ஹோண்டா டீலர் மற்றும் ஃப்யூயல் ஸ்டேஷன் ஆகியவை உள்ள இடம் பற்றிய தகவலை எளிய முறையில் தேடி தருகிறது.

இன்ஸூரன்ஸ் மற்றும் PUC புதுப்பித்தல்: கார் இன்ஸூரன்ஸ் மற்றும் PUC புதுப்பித்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எந்த காரியங்களையும், ஹோண்டா உரிமையாளர்கள் இழந்து விடாமல் தவிர்க்கும் வகையில், அவை குறித்து நினைவுப்படுத்தல்களை அளிக்கிறது.

டாக்குமெண்ட் வாலெட்: தங்களின் காருடன் தொடர்புடைய முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப் படங்கள், வாடிக்கையாளர் வைத்து கொள்ள இந்த டாக்குமெண்ட் வாலெட் உதவுகிறது.

ஃப்யூயல் லாக்: வாகனத்தில் எரிபொருள் நிரப்புவது மற்றும் ஆடோமீட்டர் ரீடிங் ஆகியவற்றின் அடிப்படையில், வாகனத்தில் கடைசியாக எரிபொருள் நிரப்பிய தகவல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தின் புள்ளிவிபரங்கள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை இந்த ஃப்யூயல் லாக் பதிவு செய்து கொள்கிறது.

பாதுகாப்பு மற்றும் பத்திரத்தன்மை (‘கனெக்டேட் டிவைஸ்’ நிறுவப்பட்ட பிறகு மட்டுமே கிடைக்கிறது)

இம்பேக்ட் அலர்ட்: ‘கனெக்டேட் டிவைஸ்’-சின் உள்ளே காணப்படும் சென்ஸர் மூலம் காரின் 3D நோக்குநிலை (ஓரியன்டேஷன்) ஒரு வினாடிக்கு நூறு முறைகள் அளவிடப்படுகிறது. மேலும் அதன் உள்ளடிக்கிய வழிமுறை (இன்பில்ட் அல்கோரிதம்) மூலம் அதன் பலமான திடீர் இடறல், இடித்தல் மற்றும் மோதல் ஆகியவை மீதான குறித்து சுமூகமான தாக்கத்தை கண்டறிய முடியும். இந்த இம்பேக்ட் அலர்ட் அம்சம், HCIL-ன் 24X7 கால் சென்டரான ஹோண்டா ஒன்2ஒன் அமைப்பை செயல்படுத்தி, ஒரு உதவி அழைப்பை (அசிஸ்டென்ஸ் கால்) பெற்று தருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளரை விரைவில் தொடர்பு கொள்ளும் ஹோண்டா பிரதிநிதி, முன்பே நிர்ணயிக்கப்பட்ட அவசர தொடர்பிற்கான எண்களுக்கு தகவல் அளித்து, கார் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டி, உதவிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

லோக்கேட் மை கார்: இந்த லோக்கேட் மை கார் என்ற அம்சத்தின் மூலம், வாடிக்கையாளர் செய்யும் ஒரு கிளிக்-கில், தங்களின் கார் இருக்கும் இடத்தை ஒருசில வினாடிகளில் கண்டறிவது எளிதாகிறது.

டிரிம் அனாலிசிஸ்: வாடிக்கையாளரின் டிரைவிங் பழக்கவழக்கங்களில் உட்படும் வழக்கமான எடுத்தல், சராசரி வேகம் மற்றும் இட்லிங் நேரம் ஆகியவை குறித்து புள்ளிவிபரங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை இந்த டிரிப்-பை-டிரிப் அனாலிசிஸ் மூலம் பெறப்படுகிறது. இதேபோல கார் எங்கேயாவது நிறுத்தப்பட்டாலோ அல்லது கண்மூடித்தனமான ஓட்டினாலோ, அது குறித்த தகவல்களை பெற முடிகிறது. சுருக்கமாக கூறினால், தங்களின் அன்பானவர்கள் காரை ஓட்டுகிறார்களா அல்லது ஓட்டப்படுகிறார்களா என்பதை குறித்து தகவல்களை பெற இயலுகிறது.

மை கார்’ஸ் ஹெல்த்: இது ஒரு வாகனத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கும் அம்சமாகும். வாகனத்தில் என்ஜின் மற்றும் பேட்டரி தொடர்பான ஏதாவது தொழிற்நுட்ப கோளாறுகள் ஏற்படும் போது, அதற்கான கார் கோளாறு குறியீட்டு எண்ணுடன், அதன் விளக்கத்தையும் காட்டுகிறது. ஒரு வேளை ஏதாவது டிஃபேக்ட் டிராபிள் கோடு (DTC) வெளியாகும் பட்சத்தில், ஹோண்டாவின் நுகர்வோர் கால் சென்டர் 24X7 செயல்பாடு மூலம் அருகில் உள்ள டீலருடன் தொடர்பை ஏற்படுத்தி, அது குறித்து வாடிக்கையாளருக்கு தகுந்த நேரத்தில் தேவைப்படும் அறிவுரை மற்றும் உதவிகள் ஆகியவை அளிக்கப்படுகிறது.

ஷேர் மை லோக்கேஷன்: இது ஒரு பாதுகாப்பு மற்றும் குதுகலம் அளிக்கும் அம்சம் ஆகும். இதன் மூலம் தற்போது உங்களின் கார் எந்த இடத்தில் உள்ளது என்பதை உங்களின் நண்பர்கள் மற்றும் அன்பு மிகுந்தவர்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த பகிர்ந்து அளிப்பு அமர்வுகளை (ஷேரிங் ஷேசன்ஸ்) 15 நிமிடம் முதல் 12 மணிநேரம் வரை கொண்டதாக நீட்டிக்க முடியும்.

மேலும் வசிக்க

2016 சீமா ஷோ: சீரமைக்கப்பட்ட 10வது தலைமுறை சிவிக்கை, ஹோண்டா காட்சிக்கு வைத்தது

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience