Hyundai Creta EV 2025 ஆண்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதற்கான காரணங்கள் இங்கே
ஹூண்டாய் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கான தனது விலை குறைவான எலக்ட்ரிக் எஸ்யூவியின் தொடர் உற்பத்தியைத் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
-
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மேலும் ஐந்து EV மாடல்களை தயாரிக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
-
2021 ஆண்டில் இந்தியாவிற்கான உள்ளூர்மயமாக்கப்பட்ட மற்றும் விலை குறைவான EV -க்கான திட்டங்களை ஹூண்டாய் முதலில் அறிவித்தது.
-
இது ஏற்கனவே சில முறை சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள கிரெட்டா EV ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கிரெட்டா EV -யின் பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது 400 கி.மீக்கு மேல் கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்சை கொண்டிருக்கலாம்.
-
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்படலாம்; விலை ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் இந்திய அலுவலகங்களுக்கு வருகை தந்திருந்தனர். மேலும் அவர்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்தியாவுக்கான எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய விவரங்களையும் வெளியிட்டனர். குறிப்பாக EV களை பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் சென்னை உள்ள தொழிற்சாலையில் உள்ளூர்மயமாக்கப்பட்ட எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் தொடர் உற்பத்தியைத் தொடங்கும் என ஹூண்டாய் உறுதிப்படுத்தியிருந்தது. அது என்ன மாடலாக இருக்கும் என்பதை கார் ஹூண்டாய் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் அது ஹூண்டாய் கிரெட்டா EV கார் ஆக இருக்கலாம் நாங்கள் நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளன. எங்களுடைய ஊகத்தின் அடிப்படையில் கார் ஹூண்டாய் ஏற்கனவே தனது கொரியாவில் எலக்ட்ரிக் எஸ்யூவியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது மற்றும் சில சோதனைக் கார்களை இந்திய சாலைகளிலும் பார்க்க முடிந்தது.
ஹூண்டாயின் முதல் உள்ளூர்மயமாக்கப்பட்ட EV
2019 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கோனா எலக்ட்ரிக் மூலமாக ஹூண்டாய் ஓரளவுக்கு விலை குறைவான காரை வழங்கும் மாஸ் மார்க்கெட் நிறுவனமாக மாறியது. இருப்பினும் அது பகுதியளவு இறக்குமதி செய்யப்பட்ட உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்படும் யூனிட் என்பதால் அது இன்னும் சற்று விலை உயர்ந்தததாகவே உள்ளது. டாடா நெக்ஸான் EV 2028 ஆம் ஆண்டிற்குள் 6 EV களுடன் 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரிதும் உள்ளூர்மயமாக்கப்பட்ட EV -க்கான திட்டங்களை ஹூண்டாய் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பட்டியலில் ஹூண்டாயின் வெற்றிகரமான ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல்களுக்கு இணையாக EV மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைவான விலை சப்-4மீ எலக்ட்ரிக் எஸ்யூவியை வழங்குவதில் டாடா வெற்றி பெற்றுள்ளதால், ஹூண்டாய் அதே விலையில் அறிமுகப்படுத்தப்படும் வென்யூ EV உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறோம். எப்படியிருந்தாலும் அந்த அளவீடுகளுக்குள் EV -களுக்கு எந்த வரிச் சலுகையும் இல்லை என்பதால் ஹூண்டாய் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தும் பிரிவான காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கவனம் செலுத்துவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.
ஏற்கெனவே தெரிந்த ரகசியம்: இந்தியாவிற்கான கிரெட்டா EV
ஹூண்டாய் இந்தியாவில் எலக்ட்ரிக் எஸ்யூவியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் என்பதை உறுதிப்படுத்தும் இந்த சமீபத்திய அறிவிப்பில் கூட அது எந்த மாடலை என்ற தகவலை வெளியிடவில்லை. இருப்பினும் இந்தியா மற்றும் கொரியாவில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் இது நிச்சயமாக ஆல் எலக்ட்ரிக் ஹூண்டாய் கிரெட்டா பதிப்பாக இருக்கும் என தெரிய வருகின்றது.
இந்தியாவில் வென்யூ காருக்கு பதிலாக ஹூண்டாய் கிரெட்டாவை அறிமுகப்படுத்த முடிவு செய்ததற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியாவிற்கான அதன் முதல் உள்ளூர் மயமாக்கப்பட்ட EV. முதலாவதாக, கிரெட்டா கார் வென்யூவை விட அதிகமான ரசிகர்களைப் கொண்டுள்ளது மேலும் மிகவும் பிரபலமானதும் கூட மற்றும் சப்-4m எஸ்யூவியை விட விலையுயர்ந்ததாக இருந்தாலும் அதிகமாக விற்பனையாகின்றது. 'கிரெட்டா' பிராண்ட் இப்போது கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாக இந்திய சந்தையில் உள்ளது. ஹூண்டாய் கிரெட்டாவின் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்றுள்ளது.
டாடா நெக்ஸான் EV ஏற்கனவே ரூ. 15 லட்சத்திற்கு கீழ் ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கான சந்தையை பிடித்துவிட்டதால் ஹூண்டாய் தனது சப்-4m எலக்ட்ரிக் எஸ்யூவியை போட்டி விலையில் அறிமுகப்படுத்துவது மிகவும் சவாலானதாக இருந்திருக்கும். ஆனால் கிரெட்டா EV உடன் எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி இடத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் ஹூண்டாய் அதன் வெகுஜன சந்தை போட்டியாளர்களை எதிர்கொள்ள முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் டாடா கர்வ்வ் EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றின் வருகையுடன் அடுத்த 12 மாதங்களில் இந்த பிரிவும் விரிவடையும். இந்த காலகட்டத்தில் சிட்ரோனில் இருந்து ஒரு சிறிய எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்படலாம்.
கிரெட்டா EV ஆனது, ICE-பவர்டு பதிப்பில் நவீன ஸ்டைலிங் மற்றும் ஏராளமான பிரீமியம் வசதிகளுடன் முழுமையான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதாலும் எனவே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்போகும் உண்மையான மாற்றம் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் மட்டுமே.
மேலும் பார்க்க: Hyundai Creta EV -யின் இன்ட்டீரியர் படம் பிடிக்கப்பட்டுள்ளது, புதிதாக ஸ்டீயரிங் மற்றும் டிரைவ் செலக்டரை பெறுகின்றது
எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
கிரெட்டா EV -யின் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய சரியான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கிரெட்டா EV ஆனது 400 கி.மீ -க்கு மேல் கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பல ஹூண்டாய் EV உலகளாவிய மாடல்கள் மற்றும் இந்தியாவில் அதன் சில EV போட்டியாளர்களைப் போலவே இது பல பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறலாம்.
இந்த ஹூண்டாய் EV ஆனது அயோனிக் 5 போன்ற புதிய ஹூண்டாய் EV -களில் பயன்படுத்தப்படும் அதே E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வாய்ப்பில்லை.
விலை எவ்வளவு இருக்கும் ?
ஹூண்டாய் கிரெட்டா EV -யின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். கிரெட்டா EV ஆனது எம்ஜி ZS EV -க்கு போட்டியாக இருக்கும் மற்றும் டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400க்கு பிரீமியம் மாற்றாக இருக்கும். வரவிருக்கும் போட்டியாளர்களை பொறுத்தவரையில் டாடா கர்வ்வ் EV (2024 முதல் பாதியில் அறிமுகப்படுத்தப்படலாம்) மற்றும் மாருதி eVX (2025 -ன் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) ஆக இருக்கும்.
கிரெட்டா EV -யை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் EV -கள் 2030-க்குள் இந்தியாவில் மேலும் 5 EV மாடல்களை உருவாக்கும் திட்டத்தை இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா ஆன் ரோடு விலை