2015 நவம்பர் மாத விற்பனையில் ஹுண்டாய் கிராண்ட் i10 மாடல் மாருதி ஸ்விஃப்ட்டை முந்தியது
published on டிசம்பர் 09, 2015 07:02 pm by sumit for ஹூண்டாய் கிராண்டு ஐ10
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
2015 நவம்பர் மாத விற்பனையில், B செக்மெண்ட் ஹாட்ச்பேக் பிரிவில் மிகச் சிறப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த மாருதி ஸ்விஃப்ட் காரை பின் தள்ளி, ஹுண்டாய் கிராண்ட் i10 கார் முந்தியிருப்பது, ஒரு சாதனையாக கருதப்படுகிறது. ஸ்விஃப்ட்டின் சரிவிற்கு (34 சதவிகித விற்பனை சரிவு) பலீனோ காரின் அறிமுகம் முக்கியமான காரணமாக இருந்தாலும், கிராண்ட் i10 கார் இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, முன்னேறியுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய விவரமாகும். 2013 –ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த தென் கொரிய கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், கடந்த நவம்பர் மாதத்தில்தான் இதன் விற்பனை 54 சதவிகிதம் முன்னேறி, முதல் முறையாக ஸ்விஃப்ட் காரை முந்தியுள்ளது. 2015 நவம்பர் மாதம் விற்பனையான பயணிகள் கார்களில் முதல் 10 கார்களின் பட்டியல்:
எப்போதும் போலவே, முதல் 10 கார்களின் பட்டியலில் (பயன்பாட்டு வாகனங்களைச் சேர்க்காமல்) மாருதி சுசுகி நிறுவனமே ஆதிக்கம் செய்கிறது. 10 இடங்களில் 6 இடங்களை இந்நிறுவனம் பிடித்துள்ளது. அவற்றில், அல்டோ, டிசயர் மற்றும் வேகன் R கார்கள் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை முறையே வகிக்கின்றன. அல்டோ மாடல் விற்பனையில் 9 சதவிகிதம் சரிவைக் கண்டிருந்தாலும், கடந்த மாதம் மட்டும் 21,995 அல்டோ கார்களை மாருதி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. டிசயர் கார் அருமையான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதை புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 18,826 டிசயர் கார்கள் விற்பனை ஆகி உள்ளன, ஆனால் சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 12,020 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தன. இவற்றில் புது முகமான பலீனோ மாடலில் (6-வது இடத்தில் உள்ளது) மட்டும், 9,074 கார்கள் விற்பனை ஆகி உள்ளது. அதுவும், அறிமுகமாகி ஒரு மாத காலத்திற்குள் ஒன்பது ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. மாருதியின் செலேரியோவும் ஏற்றம் கண்டுள்ளது. அதாவது, பத்தாவது இடத்தில் இருந்து ஒன்பதாவது நிலைக்கு சென்றுள்ளது. கடந்த மாதத்தை ஒப்பிட்டால், இந்த மாத செலேரியோவின் விற்பனை 43 சதவிகிதம் அதிகம் ஆகி உள்ளது. இயோன் ரேங்க்கில் எந்த முன்னேற்றம் இல்லை என்றாலும், விற்பனை 8 சதவிகிதம் அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாருதி பலீனோவின் வளர்ந்து வரும் புகழால், ஹுண்டாய் எலைட் i20 காரின் விற்பனையும் சற்றே சரிந்துள்ளது. இதன் விற்பனை 22 சதவிகிதம் சரிந்து, இரண்டு நிலைகள் கீழே இறங்கி உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் நிர்வாக ஆற்றலால், கடந்த முறை ஆறாவது இடத்தில் இருந்த சிட்டியை டாப் 10 பட்டியலில் இருந்து நழுவ விடாமல், பத்தாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
விரைவில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ஜிக்கா மாடல், மேற்கூறிய அனைத்து கார்களுக்கும் ஒரு சவாலாக அமையும். இந்திய சந்தையில் மீண்டும் தனது பெயரை நிலை நாட்ட, ஜிக்கா மாடலையே டாடா நிறுவனம் முழுமையாக நம்பி இருப்பதால், இதன் விலை மிகவும் சகயாமாக இருக்கும்.
பின் குறிப்பு: எந்த குறிப்புகளும் இல்லாத பட்சத்தில், பொதுவாக விற்பனை ஒப்பீடுகளில், நடப்பு விற்பனையை கடந்த ஆண்டு அதே காலகட்டத்தில் நடந்த விற்பனையுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.
ஆதாரம்: ET Auto
மேலும் வாசிக்க
ஹயுண்டாய் இந்தியாவில் நான்கு மில்லியன் கார்களை விற்றுள்ளது !