• English
  • Login / Register

இந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்கான சோதனை ஓட்டம் செய்யப்பட்டது

published on மார்ச் 04, 2020 03:09 pm by rohit for ஹோண்டா சிட்டி 2020-2023

  • 38 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Fifth-gen Honda City Spied Emission Testing In India

  • மார்ச் 16 ஆம் தேதி ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான சிட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது.

  • இது உலகளாவிய முறையில் 2019 நவம்பரில் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

  • பெட்ரோல் மாதிரிகளுடன் 6-வேக எம்டி மற்றும் டீசல் மாதிரிகளுடன் சிவிடி பற்சக்கர பெட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • காற்றோட்ட அமைப்பு உடைய இருக்கைகள், இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கருவி தொகுப்பு போன்ற புதிய சிறப்பம்சங்களுடன் ஹோண்டா இந்த செடானை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தற்போதைய தலைமுறையான சிட்டியை காட்டிலும் இதன் விலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • முக்கிய போட்டி கார்களில் மாருதி சுசுகி சியாஸ் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை அடங்கும்.

ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டி மார்ச் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் மாசு உமிழ்வுக்கான சோதனை செய்யப்பட்டது உட்பட செடானை காட்சிப்படுத்துகிற சமீபத்திய புகைப்படங்கள் அனைத்தும் இப்போது எங்களிடம் உள்ளது.

ஹோண்டா புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை சிட்டியிலிருந்து பெறப்பட்ட பெட்ரோல் இயந்திரம் இதில் இருக்கும் நிலையில், வரவிருக்கும் மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இயந்திரமும் மேம்படுத்தப்படும். பிஎஸ்6 இணக்கமான 1.5-லிட்டர் பெட்ரோல் இயந்திரம் நான்காவது தலைமுறை சிட்டியில் 119 பிஎஸ் ஆற்றலையும் 145 என்எம் முறுக்கு திறனையும் உருவாக்குகிறது.

Fifth-gen Honda City Spied Emission Testing In India

ஹோண்டா பெட்ரோல் இயந்திரத்தில் இயங்கக்கூடிய சிட்டியை 5-வேக எம்டி மற்றும் சிவிடி உடன் வழங்குகிறது, அதே போல் டீசல் இயந்திரம் பொருத்தப்பட்ட மாதிரியானது 6-வேக எம்டி பற்சக்கர பெட்டி அமைப்புடன் மட்டுமே கிடைக்கிறது. எனினும், கார் தயாரிப்பு நிறுவனம் அமேஸைப் போலவே ஐந்தாவது தலைமுறை சிட்டியில் டீசல்-சிவிடி விருப்பத்தை வழங்கியுள்ளது. புதிய சிட்டியின் பெட்ரோல் மாதிரி 6-வேக எம்டியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா 2021 ஆம் ஆண்டில் செடானின் பெட்ரோல்-கலப்பின மாதிரியையும் வழங்கும்.

தொடர்புடையது: லிட்டருக்கு 30 கி.மீ வேகத்துக்கும் அதிகமாக வழங்கும் ஜாஸ் கலப்பினத்தின் அதே தொழில்நுட்பத்தை ஹோண்டா சிட்டி கலப்பினம் பெறும்!

இந்திய-சிறப்பம்சம் பொருந்திய ஐந்தாவது-தலைமுறை சிட்டியானது இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை என்றாலும், தாய்லாந்து-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியில் வழங்கப்பட்டதைப் போன்ற சிறப்பம்சங்கள் இதில் குறைந்த பட்சமாவது இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களில் டிஜிட்டல் கருவித் தொகுப்பு, காற்றோட்ட அமைப்புடைய இருக்கைகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் கூடிய புதிய 8-அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு மற்றும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். தானியங்கி முறையிலான குளிர்சாதன வசதி, சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை, தானியங்கி முறையிலான எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய கேமரா போன்ற சிறப்பம்சங்கள் அடுத்த-தலைமுறை மாதிரிக்கும் கொண்டு செல்லப்படலாம். பாதுகாப்பு சிறப்பம்சங்களில் ஆறு காற்றுப்பைகள், பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவக்கூடிய உணர்விகள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் ஆகியவை அடங்கும்.

Fifth-gen Honda City Spied Emission Testing In India

ஏப்ரல் 2020 இல் ஹோண்டா நிறுவனமானது இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை சிட்டியை அறிமுகப்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போதைய சிட்டியின் விலை ரூபாய் 9.91 லட்சத்திலிருந்து ரூபாய் 14.31 லட்சம் வரை (எக்ஸ்ஷோரூம் டெல்லி) இருக்கும், அடுத்த-தலைமுறை சிட்டியின் விலை தற்போதைய மாதிரியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி சியாஸ், டொயோட்டா யாரிஸ், வரவிருக்கும் ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட், வோக்ஸ்வாகன் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்றவற்றுடனான இதன் போட்டியைத் தொடரும்.

பட ஆதாரம்

மேலும் படிக்க: ஹோண்டா சிட்டி டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Honda சிட்டி 2020-2023

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience