• English
  • Login / Register

ரூ.1.17 கோடி விலையில் ஃபேஸ்லிப்டட் Audi Q8 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது

published on ஆகஸ்ட் 22, 2024 04:43 pm by dipan for ஆடி க்யூ8

  • 119 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய ஆடி Q8 காரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்ஜினில் எந்த மாற்றமுமில்லாமல் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அதே V6 டர்போ-பெட்ரோல் பவர்டிரெயினுடன் தொடர்கிறது.

2024 Audi Q8 launched

  • 2024 ஆடி Q8 ஆனது ஃபேஸ்லிஃப்ட் முன் மாடலை விட ரூ.10 லட்சம் கூடுதல் விலையில் வெளியிடப்பட்டது.

  • பம்பர்களின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கிரில் மற்றும் புதிய LED லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • டிரைவர்ஸ் டிஸ்ப்ளே -வுக்கான அப்டேட்டட் UI உடன், டச் ஸ்கிரீன் மற்றும் கேபினில் முன்பு இருந்த அதே செட்டப் உள்ளது.

  • பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

  • 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் V6 மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜின் ஆகியவை -பேஸ்லிஃப்ட் மாடலில் இருந்தவையாகும்.

2020 ஆண்டில் ஆடி Q8 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது அதன்பின்னர் இப்போது வரை காருக்கு விரிவான அப்டேட் வழங்கப்படாமல் இருந்து வந்தது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஃபிளாக்ஷிப் Q8 எஸ்யூவி ஆனது 2023 ஆண்டில் உலகளவில் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் இப்போது இந்தியாவில் ரூ. 1.17 கோடியில் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பழைய ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலை விட புதிய Q8 ரூ.10 லட்சம் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

வெளிப்புறம்

2024 Audi Q8 gets 21-inch alloy wheels

ஆடி Q8 -ன் மிட்லைஃப் அப்டேட் ஆனது நுட்பமான மற்றும் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு அப்டேட்கள் உடன் வருகிறது. முன்புறத்தில், அப்டேட்டட் கிரில், பம்பர் மற்றும் ஹெட்லைட்கள் உள்ளன. பெரிய எண்கோண கிரில்லில் இப்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பம்பரின் ஏர் இன்டேக்குகளின் வடிவமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் மிகவும் குறிப்பிடத்தக்க அப்டேட் ஆகும். இதில் ஹை பீம் -க்கான ஹை-பவர் லேசர் டையோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹை பீம் லேசர் ஒளியானது 70 கி.மீ வேகத்துக்கு மேல் கார் செல்லும் போது தானாகச் செயல்படும். LED DRL -கள் வேறுபட்ட வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இது நான்கு கஸ்டமைஸபிள் லைட் சிக்னேச்சர் உடன் கிடைக்கும்.

2024 Audi Q8 tail lights

பின்புறத்தில் OLED தொழில்நுட்பத்தை கொண்ட LED டெயில் லைட்ஸ் கஸ்டமைஸபிள் லைட்டிங் சிக்னேச்சரை வைத்துக் கொள்ள அனுமதிக்கின்றன. வாகனம் 2 மீட்டருக்குள் வரும்போது டெயில் லைட்ஸ் தானாகச் செயல்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது எஸ்யூவி நிலையாக இருக்கும்போது அதன் பாதுகாப்பை அதிகரிக்கிறது.

புதிய ஆடி Q8 கார் 8 எக்ஸ்ட்டீரியர் வண்ணங்களில் கிடைக்கிறது: சாகிர் கோல்ட், வைட்டோமோ புளூ, மித்தோஸ் பிளாக், சாமுராய் கிரே, கிளேசியர் ஒயிட், சாட்டிலைட் சில்வர், டாமரிண்ட​ பிரவுன் மற்றும் விக்குனா பெய்ஜ்.

மேலும் படிக்க:  Rs 1.10 கோடி விலையில் இந்தியாவில் மெர்சிடிஸின் GLC 43 Coupe, CLE கேப்ரியோலெட் கார்கள் வெளியாகியுள்ளன

இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

New Audi Q8 interiors

புதிய சீட் அப்ஹோல்ஸ்டரி ஸ்டிச், டேஷ்போர்டில் உள்ள டிரிம் இன்செர்ட்டுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உட்புற கலர் ஸ்கீம்கள் ஆகியவற்றில் அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும் கூட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆடி Q8 -ன் உட்புறம் முந்தைய மாடலில் இருந்து பெரிய அளவில் மாறாமல் உள்ளது.

2024 Audi Q8 centre console

3 டிஜிட்டல் ஸ்கிரீன்கள் (டச் ஸ்கிரீன் -க்கான 10.1-இன்ச் யூனிட், 12.3-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஒரு க்ளைமேட் கண்ட்ரோல் டிஸ்ப்ளே) மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் முந்தைய காரில் உள்ளதை போலவே உள்ளன. 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் ஃபங்ஷன் உடன் கூடிய ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், அத்துடன் 17-ஸ்பீக்கர் பேங் & ஓலுப் சென் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் காரில் உள்ளன. 

2024 Audi Q8 rear seats

பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமராவுடன் கூடிய முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவையும் உள்ளன.

பவர்டிரெய்ன்

ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்ததை போலவே 3-லிட்டர் டர்போ-பெட்ரோல் V6 இன்ஜினுடன் (340 PS/500 Nm) 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் சக்தி நான்கு சக்கரங்களுக்கும் (AWD) அனுப்பப்படுகிறது. Q8 ஆனது 0 முதல் 100 கி.மீ வேகத்தை 5.6 வினாடிகளில் கடந்து 250 கி.மீ வேகத்தை எட்டும்.

போட்டியாளர்கள்

2024 ஆடி Q8 ஆனது சொகுசு எஸ்யூவி -களான பிஎம்டபிள்யூ X7 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLS ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

வாகன உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: ஆடி Q8 ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Audi க்யூ8

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience