Rs 1.10 கோடி விலையில் இந்தியாவில் மெர்சிடிஸின் GLC 43 Coupe, CLE கேப்ரியோலெட் கார்கள் வெளியாகியுள்ளன
published on ஆகஸ்ட் 08, 2024 03:12 pm by dipan
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
CLE கேப்ரியோலெட் மெர்சிடிஸ் நிறுவனத்தின் மூன்றாவது ஓப்பன்-டாப் மாடல் ஆகும். மற்றொரு காரான AMG GLC 43 ஆனது GLC வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.
-
ஏஎம்ஜி CLC 43 கூபே மற்றும் CLE கேப்ரியோலெட்டின் விலை ரூ. 1.10 கோடி (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
AMG GLC 43 ஆனது வழக்கமான GLC போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் AMG என்பதை காட்டும் பனோரமிக்கானா கிரில் மற்றும் அலாய் வீல்களுடன் வருகிறது.
-
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வரும் மூன்றாவது ஓப்பன்-டாப் மாடல் ஆக CLE கேப்ரியோலெட் இருக்கிறது. மேலும் இது C-கிளாஸ் மற்றும் வரவிருக்கும் E-கிளாஸ் ஆகியவற்றிலிருந்து நிறைய விஷயங்களை பெறுகிறது.
-
இரண்டு கார்களும் 11.9 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
-
ஏஎம்ஜி CLC 43 கூபே 2-லிட்டர் எலக்ட்ரிக் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. அதே சமயம் CLE கேப்ரியோலெட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் 2 லிட்டர் இன்ஜினுடன் வருகிறது.
2024 மெர்சிடிஸ்-பென்ஸ் AMG GLC 43 கூபே மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் ஆகியவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆடம்பர கார்களின் விலை விவரங்கள் இங்கே:
மாடல் |
விலை |
மெர்சிடிஸ்-AMG GLC 43 கூபே |
ரூ.1.10 கோடி |
மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் |
ரூ.1.10 கோடி |
விலை, எக்ஸ்-ஷோரூம் ( பான் இந்தியா )
இந்த புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள் CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்) ஆக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த கார்களை பற்றி விரிவாக பார்ப்போம்:
மெர்சிடிஸ்-AMG GLC 43 கூபே
வெளிப்புறம்
GLC 43 கார் ஆனது ஒரு எஸ்யூவி-கூபே என்பதால் முன் வடிவமைப்பு ஆனது CLC எஸ்யூவி போன்று உள்ளது. இதில் எல்இடி டிஜிட்டல் ஹெட்லைட்கள், பெரிய ஏர் இன்லெட்டுகள் மற்றும் கிரில்லில் வெர்டிகல் ஸ்லேட்டுகள் உள்ளன. கூபே அதன் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேம்படுத்தும் பாடி கலர்டு வீல் ஆர்ச்கள் , ஏஎம்ஜி பக்க ஓரங்கள் மற்றும் ஏஎம்ஜி-ஸ்பெக் ரியர் டிஃப்பியூசர் ஆகியவற்றுடன் தனித்து தெரிகிறது. தனித்துவமான AMG டச்கள் என்று சொல்லும்போது பனோரமிக்கானா கிரில், முன்பக்கம் ஒரு ஸ்போர்ட்டியர் பம்பர், ஒரு லிப் ஸ்பாய்லர், குவாட் எக்ஸாஸ்ட் டிப்ஸ் ஆகியவை உள்ளன. இது 9 நிறங்களில் கிடைக்கிறது. இது 21-இன்ச் AMG-ஸ்பெசிபைடு பிளாக்-அவுட் அலாய் வீல்களையும் பெறுகிறது.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
டேஷ்போர்டு தளவமைப்பை பார்க்கும் போது வழக்கமான GLC -லிருந்து எதுவும் மாறவில்லை. ஆனால் டிரிம் இப்போது பின்ஸ்ட்ரைப்களுக்கு பதிலாக கார்பன் ஃபைபர் கொடுக்கப்பட்டுள்ளது. இது AMG-ஸ்பெசிபைடு ஸ்டீயரிங் வீல் மற்றும் அதன் ஸ்போர்டியர் தன்மையை பூர்த்தி செய்ய இருக்கைகள் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. இது அதே 11.9-இன்ச் வெர்டிகல் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீனை பெறுகிறது. ஆனால் காரின் டிரைவ் செட்டப்களை மாற்ற AMG பட்டன் கொடுக்கப்பட்டுள்ள்ளது.. மேலும் 12.3- இன்ச் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை வசதிகள் இந்த காரில் உள்ளன.
பவர்டிரெய்ன்
இன்ஜின் |
2-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
421 PS |
டார்க் |
500 Nm |
டிரான்ஸ்மிஷன் |
9-ஸ்பீடு ஏடி |
டிரைவ்டிரெய்ன் |
AWD* |
*AWD = ஆல் வீல் டிரைவ்
மேலும் படிக்க: Mercedes-Benz இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது
மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட்
CLE-கேப்ரியோலெட் என்பது உலகளவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புத்தம் புதிய கார் ஆகும். இது கூபே மற்றும் கேப்ரியோலெட் பதிப்புகளில் கிடைக்கிறது. இருப்பினும் இந்தியாவில், காப்ரியோலெட் பதிப்பு மட்டுமே கிடைக்கிறது. இது E-கிளாஸ் கேப்ரியோலெட் மற்றும் SL ரோட்ஸ்டருக்கு பிறகு கார் தயாரிப்பாளரின் மூன்றாவது ஓப்பன்-டாப் மாடல் ஆகும்..
வெளிப்புறம்
மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் நீண்ட வீல்பேஸ் மற்றும் லோ-ஸ்லங் சுயவிவரத்துடன் நேர்த்தியான, ஸ்போர்ட்டி வடிவமைப்பை கொண்டுள்ளது. இது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது. முன்புறத்தில் ஒரு சி-கிளாஸ் செடான் காரின் வடிவமைப்பில் இருந்து ஈர்க்கப்பட்ட பெற்ற கிரில் மற்றும் மல்டி பீம் எல்இடி ஹெட்லைட்கள், ஆப்ஷனலான அடாப்டிவ் ஹை-பீம் அசிஸ்ட், ஏர் இன்டேக்ஸை உள்ளடக்கிய ஸ்போர்ட்டி பம்பர் ஆகியவை காரில் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் வடிவம் பிரேம்லெஸ் டோர்கள் மற்றும் கூரை ஆகியவை ஹைலைட்ஸ் ஆகும். பக்கவாட்டில் நுட்பமான கோடுகள் மஸ்குலர் டச்சை காருக்கு கொடுக்கின்றன. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் லைட்ஸ் உள்ளன, அவை மையத்தில் பிளாக்டு-அவுட் எலமென்ட் உள்ளது. இது 19 இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. , மெர்சிடிஸ் பென்ஸ் பிளாக் மற்றும் ரெட் ஆகிய இரண்டு ஷேடுகளுக்கு இடையே ஒரு ஆப்ஷனை சாஃப்ட்-டாப் பகுதிக்காக வழங்குகிறது. சாஃப்ட்-டாப் 20 வினாடிகளில் அதாவது 60 கி.மீ வேகத்தில் திறந்து மூடுகிறது.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் காரின் வசதிகளின் தொகுப்பில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் 11.9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. முன் இருக்கைகள் வென்டிலேட்டட் ஃபங்ஷன் மற்றும் மேம்பட்ட வசதிக்காக 7 ஜோன் மசாஜ் ஃபங்ஷனை கொண்டுள்ளன. இது டால்பி அட்மோஸ் உடன் 17-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது. மற்றும் முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்கள் சத்தத்தை நீக்குவதற்கான ஸ்பீக்கர்களை பெறுகின்றன. பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 10 ஏர்பேக்குகள் மற்றும் (ADAS) தொகுப்பைப் பெறுகிறது, இதில் டிரைவர் அட்டென்ஷன் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
பவர்டிரெய்ன்
மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் இந்தியாவில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் உடன் இது வழங்கப்படுகிறது:
இன்ஜின் |
2-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 48V மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் |
பவர் |
258 PS |
டார்க் |
400 Nm |
டிரான்ஸ்மிஷன் |
9-ஸ்பீடு ஏடி |
போட்டியாளர்கள்
இந்தியாவில் மெர்சிடிஸ்-AMG GLC 43 4Matic போர்ஷே மகான் நேரடியாக போட்டியிடும். மெர்சிடிஸ்-பென்ஸ் CLE கேப்ரியோலெட் -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. என்றாலும், ஆனால் BMW Z4 காருக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் GLC ஆட்டோமெட்டிக்