• English
  • Login / Register

Mercedes-Benz இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் மேலும் 4 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது

published on ஜூலை 11, 2024 06:32 pm by dipan for மெர்சிடீஸ் இ-கிளாஸ்

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மெர்சிடிஸ் பென்ஸ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் EQA எலக்ட்ரிக் எஸ்யூவியில்  தொடங்கி ஆறு கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

  • EQA மற்றும் EQB ஃபேஸ்லிஃப்ட்களின் சமீபத்திய அறிமுகங்களைத் தொடர்ந்து, மேலும் நான்கு மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் 2024-இன் இரண்டாம் பாதியில் வரவிருக்கிறது.

  • AMG செயல்திறன் வெர்ஷனோடு, புதிய இ-கிளாஸ் லாங் வீல்பேஸ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிமுகங்களில் ஒன்றாக இருக்கும்.

  • பிராண்டின் முதன்மை எலக்ட்ரிக் எஸ்யூவியான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் EQS எஸ்யூவியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • ஓபன்-டாப் மெர்சிடிஸ் பென்ஸ் AMG CLE கேப்ரியோலெட்டும் கார் தயாரிப்பாளரால் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • எலக்ட்ரிக் ஜி-கிளாஸ் எஸ்யூவிக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளன. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த கார் அறுமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் பிற்பாதியில் ஆறு புதிய கார்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது, அவற்றில் மூன்று எலக்ட்ரிக் கார்கள். EQA மற்றும் EQB ஃபேஸ்லிஃப்ட் ஆகிய இரண்டு எலக்ட்ரிக் எஸ்யூவிகளை முதலில் அறிமுகப்படுத்துகிறது. மீதமுள்ள நான்கு மாடல்களை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது பற்றி அறிவித்த போதிலும் அறிமுக தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தியாவில் அறுமுகப்படுத்தப்படவுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் பற்றிய தகவல்கள் இதோ:

மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் LWB

Mercedes-Benz E-Class LWB

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அதன் ஆறாவது தலைமுறை இ-கிளாஸ் LWB இந்தியாவில் வரவிருக்கும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ. 80 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்). இந்த குறிப்பிட்ட மாடலுக்கான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், வழக்கமான வீல்பேஸ் மாடலில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது: 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 255 PS மற்றும் 295 Nm டார்க்கை உருவாக்குகிறது மற்றும் 3.0-லிட்டர் பிளாட்-ஆறு பெட்ரோல் இன்ஜின். 375 PS மற்றும் 369 Nm டார்க்கை உருவாக்குகிறது, இரண்டும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய இ-கிளாஸ் 14.4-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்களைக் கொண்டுள்ளது-ஒன்று டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் மற்றொன்று பயணிகளுக்கான, மல்டிகலர் சுற்றுப்புற விளக்குகள், 21-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி. இந்த அம்சங்களில் எது இந்திய-ஸ்பெக் இ-கிளாஸில் சேர்க்கப்படவுள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மெர்சிடிஸ் பென்ஸ் AMG C 63 S E செயல்திறன்

Mercedes-Benz India To Launch 4 More Models By End Of 2024

மற்றொரு பிளக்-இன் ஹைப்ரிட் AMG மாடலான மெர்சிடிஸ்- AMG C 63 S E பெர்ஃபார்மன்ஸ், 2024-இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஃப்ரண்ட் ஆக்ஸில் பொருத்தப்பட்ட 2.0-லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரியர் ஆக்ஸில், 690 PS மற்றும் 1,020 Nm  டார்க்கை வழங்குகிறது. இந்த வாகனம் 13 கிமீ வரை எலக்ட்ரிக் மோடில் மட்டுமே வழங்குகிறது மற்றும் 3.7 கிலோவாட் AC சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும்.

உட்புறங்களில், 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 14.4 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்ஷனல் 12.3 இன்ச் முன் பயணிகள் டிஸ்ப்ளே மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் ஸ்போர்ட்  சீட்கள் ஆகியவை சர்வதேச கார் மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் AMG CLE 53 கேப்ரியோலெட்

Mercedes-Benz India To Launch 4 More Models By End Of 2024

புதிய மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் CLE53 AMG கேப்ரியோலெட்டை அறிமுகம் செய்வதன் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் அதன் கன்வெர்ட்டிபிள்களின் வரம்பை விரிவுபடுத்த உள்ளது. சர்வதேச அளவில், இந்த மாடலில் 449 PS மற்றும் 560 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 3.0-லிட்டர் ஆறு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது 0-1100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல 4.2 வினாடிகளே எடுத்துக்கொள்கிறது. நான்கு வீல்களுக்கும் 9-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் பவர் அனுப்பப்படுகிறது. நான்கு சீட்டர் கொண்ட CLE 53 AMG ஆனது SL63 AMGக்கு கீழே நிலைநிறுத்தப்படும், இது 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 மற்றும் கண்டிப்பாக இரண்டு சீட்டர் கொண்ட ரோட்ஸ்டரை கொண்டுள்ளது.

வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 11.9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் 12.3 இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 64-கலர் அம்பியன்ட் லைட்டிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், மற்றும் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுப்பை இந்த சர்வதேச மாடல் கொண்டுள்ளது.  

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் EQS எஸ்யூவி

Mercedes-Benz India To Launch 4 More Models By End Of 2024

முதல் எலக்ட்ரிக் மேபேக் மாடலான மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் EQS 680 எஸ்யூவி, இந்த ஆண்டு சுமார் ரூ. 3.80 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இந்தியாவிற்கு வர உள்ளது. இந்த EQS எஸ்யூவி, மெர்சிடிஸீன் EV வரிசையில் விலையுயர்ந்த மாடலானது, 658 PS மற்றும் 950 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இரண்டு ஆக்ஸில்களிலும் டூயல் மோட்டர் செட்டப்பை இயக்கும் 107.8 கிலோவாட் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது 600 கிமீ (WLTP) வரை கிளைம் செய்யப்படும் ரேஞ்ச்ஜைக் கொண்டுள்ளது.

டேஷ்போர்டில் உள்ள டிரிபிள் இன்டக்ரேட்டட் டிஸ்ப்ளேக்களுடன் உட்புறம் வசதிகள் நிறைந்ததாக இருக்கும்: இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிரைவருக்கான டிஸ்ப்ளே மற்றொன்று பயணிகளுக்கான டிஸ்ப்ளே), 17.7 இன்ச் OLED இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12-வே எலக்ட்ரானிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹீட் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்கள், மெமரி செயல்பாட்டுடன் கூடிய ஆட்டோமேட்டிக் ரியர் சீட்கள், ஃபோர்-ஜோன் ஏசி, ஒரு பனோரமிக் சன்ரூஃப் மற்றும் சாஃப்ட் க்ளோஸ் டோர்கள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

EQ தொழில்நுட்பத்துடன் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜீ-கிளாஸ்

Mercedes-Benz India To Launch 4 More Models By End Of 2024

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 580 EQ என அழைக்கப்படும் எலக்ட்ரிக் ஜி-வேகன், தற்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது, டெலிவரிகள் 2025-இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 3 கோடியாக இருக்கலாம் ( எக்ஸ்-ஷோரூம்). பாரம்பரிய ஆஃப்-ரோடர் டிசைனை பின்பற்றி, இது முன் சஸ்பென்ஷனுடன் கூடிய லேடர்-பிரேம் சேஸ் மற்றும் ரியர் ரிஜிட் ஆக்சில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தில் 116 கிலோவாட் பேட்டரி பேக் மற்றும் 587 PS மற்றும் 1,164 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் நான்கு மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். இது 473 கிமீ வரை WLTP-கிளைம் செய்யப்படும் ரேஞ்ச்ஜை வழங்குகிறது மற்றும் வலுவான ஆஃப்-ரோடிங்கிற்கான குறைந்த தூர ட்ரான்ஸ்ஃபர் கேஸை உள்ளடக்கியது.

எலக்ட்ரிக் ஜி-வேகனில் இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே ஒன்று), பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வெளிப்படையான பானட் செயல்பாடு ஆகிய வசதிகள் அடங்கும். இந்த வசதிகள், முன் கேமராக்களால் பிடிக்கப்பட்ட படங்களை இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீனில் வைப்பதன் மூலம், ஆஃப்-ரோடில் எஸ்யூவி சுலபமாக பயணிக்க இது உதவுகிறது.

வரவிருக்கும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களில் எதை நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்? கீழே உள்ள கருத்துகளில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mercedes-Benz இ-கிளாஸ்

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience