• English
  • Login / Register

எக்ஸ்க்ளூஸிவ்: Carens ஃபேஸ்லிஃப்ட்டோடு சேர்த்து Kia Carens காரும் விற்பனையில் இருக்கும்

published on ஜனவரி 24, 2025 06:10 pm by shreyash for க்யா கேர்ஸ்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கியா கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் -டின் வடிவமைப்பை பொறுத்தவரையில் உள்ளேயும் வெளியேயும் மாற்றங்கள் இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Carens

  • கேரன்ஸ் 2022 ஆண்டு முதல் விற்பனைக்கு வந்தது. அதன் முதல் பெரிய அப்டேட்டை விரைவில் பெறவுள்ளது.
     

  • ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கும் போது புதிய கேரன்ஸ் புதிய வடிவிலான முன்பக்கம், புதிய அலாய் வீல்கள் மற்றும் அப்டேட்டட் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்களை கொண்டிருக்கும்.
     

  • கேபின் அமைப்பு புதிய வடிவிலான ஏசி வென்ட்கள் மற்றும் புதிய வடிவிலான சென்டர் கன்சோலுடன் புதிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் தற்போதுள்ள கேரன்ஸில் இருந்து வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் வரலாம.
     

  • ஃபேஸ்லிஃப்டட் கேரன்ஸ் 360 டிகிரி கேமராவை கொண்டிருக்கும், மேலும் லெவல் 2 ADAS ஐ கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

  • தற்போதுள்ள கேரன்ஸில் இருப்பதை போன்றே 1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்த வாய்ப்புள்ளது:.
     

  • கியா கேரன்ஸின் தற்போதைய பதிப்பின் விலை ரூ.10.60 லட்சம் முதல் ரூ.19.70 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).
     

  • புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸ் காரின் விலை ரூ. 11.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
     

இந்தியாவில் முதன்முதலில் 2022 ஆண்டில் கியா கேரன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது கேரன்ஸ் ஒரு அப்டேட்டுக்கு தயாராகியுள்ளது. அதே நேரத்தில் தற்போதுள்ள ஃபேஸ்லிப்டட் கேரன்ஸ் கியா கேரன்ஸ் உடன் இணைந்து விற்பனையில் இருக்கும் என்ற தகவல் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. இரண்டு தலைமுறைகளான ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா போன்ற கார்களில் இந்த உத்தியை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட்டிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

வடிவமைப்பில் உள்ள அப்டேட்கள்

Kia Carens facelift front end spied

முந்தைய ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் பார்க்கையில் 2025 கியா கேரன்ஸ் ஆனது புதிய வடிவிலான ஹெட்லைட்கள், புதிய வடிவிலான LED DRL -கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட முன்பக்கத்தை கொண்டிருக்கும். MPV-யின் ஒட்டுமொத்த நிழற்படமானது தற்போதைய கேரன்ஸ் -ல் இருந்து மாறாமல் இருக்கும். அதே வேளையில் அது புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களை கொண்டிருக்கும். புதிய LED டெயில்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர் உட்பட, பின்புற பகுதி குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்கும்.

மேலும் பார்க்க: ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் மாருதி இ விட்டாரா: ஒப்பிடும்போது முக்கிய விவரங்கள்

கேபினில் உள்ள அப்டேட்கள்

Kia Carens cabin

வெளியில் இருப்பதைப் போலவே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கேரன்ஸ் உள்ளேயும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் கன்சோல் வடிவமைப்பும் மாற்றம் செய்யப்படலாம். மேலும் இது கான்ட்ராஸ்ட் கலர் சீட் செட்டப்பை பெறலாம். இரண்டு 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் உட்பட, தற்போதுள்ள கேரன்ஸ் பதிப்பிலிருந்து வசதிகளை இது கடன் வாங்கலாம். 

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும். முந்தைய ஸ்பை ஷாட்டில் பார்த்தது போல, இது 360 டிகிரி கேமராவைப் பெறும் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றின் முழுமையான தொகுப்புடன் வரலாம். இது இப்போது கியா இந்தியாவின் விற்பனையில் உள்ள எல்லா மாடல்களிலும் கிடைக்கிறது.

இன்ஜின் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படவில்லை

கேரன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் அதன் தற்போதைய காரை போலவே அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பயன்படுத்தும். விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.5 லிட்டர் N/A பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT

6-ஸ்பீடு iMT, 7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

N/A - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்

iMT - கிளட்ச் லெஸ் மேனுவல் டிரான்ஸ்மிஷன்

DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா கேரன்ஸ்

ஃபேஸ்லிஃப்ட் இல்லாத கியா

ரூ.10.60 லட்சம் முதல் ரூ.19.70 லட்சம்

ரூ.11.5 லட்சம் முதல் (எதிர்பார்க்கப்படுகிறது)

அனைத்து விலை விவரங்களும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் -க்காவை ஆகும்

கியா கேரன்ஸ் மாருதி எர்டிகா, மாருதி XL6 மற்றும் டொயோட்டா ரூமியான் ஆகியவற்றுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும். மேலும் இது மாருதி இன்விக்டோ, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஆகியவற்றுக்கு ஒரு மாற்றாக இருக்கும்.

was this article helpful ?

Write your Comment on Kia கேர்ஸ்

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf9
    vinfast vf9
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience