• English
  • Login / Register

2023 ஹுண்டாய் வெர்னாவின் புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் காரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

modified on மார்ச் 02, 2023 08:10 pm by shreyash for ஹூண்டாய் வெர்னா

  • 39 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2023 மார்ச் மாதம் 21 ஆம் தேதி புதிய தலைமுறை வெர்னா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது, புக்கிங்குகள் தொடங்கிவிட்டன.

New Hyundai Verna side design sketch

 

  • புதிய தலைமுறை வெர்னா காரை  முன்பண பதிவுத்தொகையாக ரூ.25,000 -க்கு முன்பதிவு செய்யலாம்.

  • ஸ்பை போட்டோக்கள் மற்றும் டீசர்கள் வழியாக அறிமுகமாக உள்ள செடானின் வடிவமைப்பு பற்றி தகவல்கள் ஏற்கனவே தெரிய வந்திருக்கின்றன.

  • ஹீண்டாய் இரு என்ஜின் ஆப்ஷன்களில் செடானை வழங்குகிறது. 1.5-லிட்டர் T-GDi (டர்போ) பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் MPi (நேச்சுரலி ஆஸ்பையர்டு) பெட்ரோல் என்ஜின்.

  • .வெர்னா கார்கள் இனி டீசல் இன்ஜினுடன் கிடைக்காது.

  • ADAS போன்ற கூடுதலான ப்ரீமியம் அம்சங்களைப் பெற்றுள்ளது.

ஹுண்டாய்  இந்தியா புதிய அம்சங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய  புதிய தலைமுறை வெர்னாவை களம் இறக்க தயாராக உள்ளது. ஏற்கனவே உள்ள 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பையர்டு (MPi) பெட்ரோல் என்ஜினுடன் புதிய 1.5லிட்டர் T-GDi டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மாடலும் இந்த செடானுடன் கிடைக்கவிருக்கிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னரே புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் மூலம் வழங்கப்படும் திறன் மற்றும் டார்க் பற்றிய விவரங்களையும் நாம் தெரிந்து கொண்டோம். இந்த இன்ஜின் புதுப்பிக்கப்பட்ட அல்கசாருடனும் கிடைக்கிறது.

விவரக் குறிப்புகள்

1.5-லிட்டர் டர்போ

1.5-லிட்டர் NA

ஆற்றல்

160PS

115PS

முறுக்கு விசை

253Nm

144Nm

பரிமாற்றங்கள்

6-வேக MT/7-வேக DCT

6-வேக MT/ CVT

வரவுள்ள BS6 இரண்டாம் கட்ட விதிமுறைகளுடன் மேற்குறிப்பிடப்பட்ட இரு என்ஜின்களும் இணக்கமாக உள்ளன, மேலும் அவை E20 எரிபொருளிலும் கூட இயங்கக் கூடியவை( 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல்) மேலும்  செடானிலிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனையும் ஹூண்டாய் வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்கவும்: புதிய ஹுண்டாய் சப்காம்பாக்ட் SUV ஸ்பைடு மற்றும் அதன் போட்டியாளர் டாடா பஞ்ச்

புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் போன்ற ஆற்றல் மிக்க பிரிவில் மட்டுமே வெர்னா கார்கள் போட்டிக்கு வரவில்லை, நல்ல தரமான எரிபொருள் சிக்கனத்தையும் உறுதி செய்கிறது. பெரிய மற்றும் அகலமான அல்கசாரில் ( 18 கிமீ/ லி வரை) மைலேஜை தரும் இந்த இன்ஜின், சிறிய மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்கைக் கொண்ட வெர்னாவில் அது  20 கிமீ/ லி வரை மைலேஜை கொடுக்கும்.

கண்கவரும் புதிய தோற்றங்கள்

New Hyundai Verna front design sketch

டீசர்கள் மற்றும் ஸ்பை ஷாட்டுகளின் மூலமாக புதிய தலைமுறை வெர்னாவின் வடிவமைப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. செடானின் முன்புறத்தில் LED DRL-இன் நீண்ட பட்டையுடன் கூடிய’ பாராமெட்ரிக் நகை’ வடிவமைப்பும் கொண்டுள்ளன.

பக்கவாட்டிலிருந்து சாய்ந்த ரூஃப்லைன் கூர்மையாக தெரிகின்றன, மேலும் உலகளவில் பிரபலமான எலன்ட்ராவின் வடிவமைப்புடன் இதன் நிழல் வடிவம் பொருந்திப்போகிறது. புதிய வெர்னாவின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகள் உள்ளன.

மேலும் படிக்க: ஹுண்டாய் புதுப்பிக்கப்பட்ட அல்கசார் டர்போ-பெட்ரோல் என்ஜினை வழங்குகிறது, புக்கிங்குகள் தொடங்கியுள்ளன

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

2023 Hyundai Verna Connected Tail Lamps

புதிய உட்பொருத்தப்பட்ட ஸ்கிரீன் செட்அப்( இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கானது) கொண்டதாக புதிய வெர்னா கார் இருக்கக்கூடும். ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் அசிஸ்ட் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் கருவி போன்ற ADAS(அட்வான்ஸ்ட் டிரைவர்-அசிஸ்டென்ட் சிஸ்டம்ஸ்) ஆகியவற்றின் முழுத் தொகுப்பையும் இந்தக் கார் கொண்டிருக்கலாம். இது வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ட்யூயல் சோன் கிளைமேட் கன்ட்ரோல் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பிரீமியம் ஒலி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலைகள் & போட்டியாளர்கள்

மார்ச் 21 ஆம் தேதி புதிய வெர்னா காரின் விலையை ஹுண்டாய் வெளியிட உள்ளது மேலும் அதன் விலை ரூ.10 இலட்சம் (எக்ஸ் ஷோரூம்) முதல் தொடங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்ட உடன் அது  ஸ்கோடா ஸ்லாவியா , வோல்க்ஸ்வேகன் வர்சுஸ், மாருதி சியாஸ்  மற்றும்  ஃபேஸ்லிஃப்டட் ஹோண்டா சிட்டி  உடன் போட்டியிடும்.

was this article helpful ?

Write your Comment on Hyundai வெர்னா

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஸ்கோடா ஆக்டிவா RS
    ஸ்கோடா ஆக்டிவா RS
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூல, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஆகஸ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா டைகர் 2025
    டாடா டைகர் 2025
    Rs.6.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஸ்கோடா சூப்பர்ப் 2025
    ஸ்கோடா சூப்பர்ப் 2025
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மெர்சிடீஸ் eqe செடான்
    மெர்சிடீஸ் eqe செடான்
    Rs.1.20 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    டிச்பர், 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience