டீசல் மாருதி டிசையர், ஸ்விஃப்ட், விட்டாரா பிரீஸ்ஸா, எஸ்-கிராஸ் உடன் இலவச 5 ஆண்டு உத்தரவாதத்தைப் பெறுங்கள்
published on ஆகஸ்ட் 30, 2019 12:25 pm by dinesh for மாருதி டிசையர் 2017-2020
- 67 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரீஸ்ஸா மற்றும் S-கிராஸ் வாங்குபவர்களுக்கு புதிய உத்தரவாத தொகுப்பு கூடுதல் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுகிறது.
-
மாருதியின் பெட்ரோல் கார்களில் 2 ஆண்டு / 40,000 கி.மீ வரை அடிப்படை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
-
இந்த உத்தரவாத தொகுப்பை 5-ஆண்டு/1 லட்சம் கி.மீ வரை நீட்டிக்க முடியும்.
-
மாருதி சுசுகி அதன் டீசல் மாடல்களை ஏப்ரல் 2020 க்குள் நிறுத்த உள்ளது.
-
இருப்பினும், மாருதியின் 1.5 லிட்டர் டீசல் வகை சந்தை தேவையைப் பொறுத்து மீண்டும் வர வாய்ப்புள்ளது.
மாருதி சுசுகி இப்போது தனது சில டீசல் கார்களுக்கு 5 ஆண்டு / 1 லட்சம் கி.மீ வரை அடிப்படை உத்தரவாதத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது. புதிய உத்தரவாதத் திட்டத்துடன் வழங்கப்படும் கார்களின் பட்டியல் ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா பிரீஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் ஆகும்.
எர்டிகா மற்றும் சியாஸிலும் மாருதி டீசல் என்ஜின்களை வழங்குகிறது, ஆனால் மாருதி இந்த மாடல்களுக்கு புதிய உத்தரவாத தொகுப்பை வழங்கவில்லை. இந்த கார்கள் அதே 2 ஆண்டு / 40,000 கி.மீ அடிப்படை உத்தரவாதத்துடன் தொடர்ந்து கிடைக்கும்.
இந்த நடவடிக்கையின் காரணத்தை மாருதி வெளியிடவில்லை என்றாலும், டீசல் மாருதி கார் வாங்குவதிலிருந்து விலகிச் செல்லும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் மாருதி ஏப்ரல் 2020 க்குள் அதன் டீசல் கார்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
-
2020 ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் மூலம் இயங்கும் எஸ்-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரீஸ்ஸா அறிமுகமாக உள்ளது.
எர்டிகா மற்றும் சியாஸ் ஆகியவை மாருதியே உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், மற்ற கார்களோ ஃபியட்டிடம் இருந்து பெறப்பட்ட 1.3 லிட்டர் எஞ்சினுடன் நீண்ட உத்தரவாதத் தொகுப்புடன் வருகிறது. சந்தை தேவையை பொறுத்து 1.5 லிட்டர் டீசலை மேம்படுத்தலுடன் பிஎஸ் 6 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றி மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்பிருப்பதாக நிறுவனம் கூறுகிறது , ஆனால் 1.3 லிட்டர் அலகு நிச்சயம் நிறுத்தப்படவுள்ளது.
இதைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டைப் பாருங்கள்.
மாருதி சுசுகி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான கார்-ஐ சொந்தமாக்கும் அனுபவத்தை வழங்குவதற்காக 5 ஆண்டு, 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. இந்த திட்டத்தில் டீசல் மூலம் இயங்கும் புதிய டிசைய்ர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரீஸ்ஸாவை ஆகியவை மட்டுமே அடங்கும்.
புதுடெல்லி, ஆகஸ்ட் 20, 2019: இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நான்கு டீசல் கார்களான டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவற்றின் 2.9 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டாடும் வகையில் மாருதி சுசுகி விரிவான 5 ஆண்டு, 1 லட்சம் கிமீ உத்தரவாதத்தை நாடெங்கிலும் 1,893 சிறுநகரங்கள் மற்றும் மாநகரங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் அறிவித்துள்ளது. இந்த கார்களை புதிதாக வாங்குபவர்களுக்கு, இந்த திட்டம் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த அறிவிப்பு குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விட்டாரா பிரீஸ்ஸா எங்கள் முதன்மை தயாரிப்புகள், இது மாருதி சுசுகிக்கு மட்டுமல்ல, இந்திய வாகனத் தொழில்துறையையும் மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த முன்னணி தரஅடையாளங்கள் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் விமர்சகர்களால் அவற்றின் செயல்திறனுக்காக விரும்பப்படுகின்றன. இந்த முன்னோடி தரஅடையாளங்கள் எங்கள் எதிர்கால தயாரிப்பு பட்டியலில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும். ”
"ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் இலவச 5 ஆண்டு/ 1 லட்சம் கி.மீ உத்தரவாதத்தை இந்த அனைத்து டீசல் மாடல்கள் மீதும் நாங்கள் வழங்குகிறோம். இது கவலையற்ற வாகன சொந்தமாக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்" என்றார்.
மாருதி சுசுகியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மன அமைதியுடன் சேவை செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு, 1 லட்சம் கி.மீ உத்தரவாதத் திட்டம் விரிவாக பல உதிரி பாகங்களையும் அவற்றின் மாற்றுகளையும் உள்ளடக்கியது. இதில் உயர் அழுத்த பம்ப், கம்ப்ரஸர், எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் மாட்யுல் (ஈசிஎம்), டர்போசார்ஜர் அசெம்பிளி, க்ரிட்டிக்கல் எஞ்சின் மற்றும் பரிமாற்ற பாகங்கள் ஆகியவை அடங்கும். ஸ்டீயரிங் அசெம்பிளி மற்றும் சஸ்பென்ஷன் ஸ்ட்ரட்களும் திட்டத்தில் உள்ளடங்குகின்றன. இந்த மாடல்களுக்கான 5 ஆண்டு, 1 லட்சம் கி.மீ உத்தரவாதம் எங்கள் புதிய வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமுமின்றி கிடைக்கிறது.
மாருதி சுசுகி டீசல் DDiS 190 இன்ஜின் விருப்பத்தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது, இது சிறந்த தரமான எரிபொருள் செயல்திறன் மற்றும் மென்மையான வாகனத்தை இயக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க: மாருதி ஸ்விஃப்ட் டிசையர் AMT
0 out of 0 found this helpful