இந்தியாவை தனது கோட்டையாக மாற்ற டாட்சன் விருப்பம்: CEO சூசகம்
டட்சன் ரெடி-கோ 2016-2020 க்காக நவ 02, 2015 06:13 pm அன்று அபிஜித் ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
டாட்சன் நிறுவனத்தின் தலைவர் வின்சென்ட் கோபீ கூறுகையில், உலக வரைபடத்தில் அந்நிறுவனத்தின் கால்தடத்தை விரிவாக்கும் பணியில், இந்தியா மிகப்பெரிய பங்கை வகிக்கும், என்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த பிராண்ட்டை இந்தியாவில் இருந்து துவங்கி உலகம் முழுவதும், நிசான் நிறுவனம் மூலம் மறுஅறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் அந்நிறுவனத்திற்கு அவ்வளவு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்கால ஏற்றுமதிக்கான தனது கோட்டையாக, இப்போதும் இந்தியாவையே அது கருதுகிறது.
இதையும் படியுங்கள்: 2015 டோக்கியோ மோட்டார் ஷோ நேரடி: டாட்சன் கோ கிராஸ் தொழில்நுட்பம், உலக அரங்கேற்றம் பெற்றது!
இனி வரும் ஆண்டுகளில் தனது இலக்கில், சார்க் நாடுகள் கூட்டமைப்பு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றில் உட்பட்ட நாடுகளை முக்கிய இலக்காக அந்நிறுவனம் வைத்துள்ளது. சாத்தியமான சந்தைகளை குறித்து திரு.கோபீ சுட்டிக்காட்டி கூறுகையில், “ஒரு குறுகிய கால அளவில், குறைந்தபட்சம் 10-15 நாடுகளை, நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆப்பிரிக்காவில் நான் டாட்சன் கோ-வை விற்பனை செய்தால், அது இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்கும். சென்னையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 10-20 நாடுகளுக்கு டாட்சனை ஏற்றுமதி செய்ய முடியும் என்பதை நியாயமற்றது என்று கருத முடியாது. இந்தியாவும் வளரும், ஏற்றுமதியும் வளரும். ஒரு சிறந்த சமநிலை என்பது மூன்றில் இரண்டு பாகம் மற்றும் மூன்றில் ஒரு பாகம் ஏற்றுமதியாவது ஆகும்” என்றார்.
நிசான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்த எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் முடிவிலி உறுதிபடுத்தும் தன்மை (இன்ஃபினிட்டி ரீஇன்ஃபோர்ஷ்மெண்ட்கள்) ஆகியவற்றில், டாட்சன் எப்படி முக்கியத்துவம் வகித்தது என்பதை அவர் விளக்கினார். அவர் கூறுகையில், “ஒரு புதிய பிரதேசத்தை புவியியல் அளவையின்படி, நடுத்தர வர்க்கத்தினரை சார்ந்து, சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் ஏறக்குறைய 10,000 டாலர் என்பது மிகவும் போட்டியிடுவதற்குரிய விலை நிர்ணயமாக இருக்கும் நிலையில், அதற்குள் நிசான் நிறுவனம் இடம் பெறுவது இல்லை என்பதால், புவியியல் விரிவாக்கத்தை டாட்சன் நிறுவனம் தான் இயக்க உள்ளது. இதற்கான ஒரு சீரான மற்றும் தெளிந்த மூலோபாயம் உள்ளது” என்றார்.
இதையும் படியுங்கள்: டாட்சன் கோ மற்றும் கோ+ ஆகியவற்றில் டிரைவர் பக்கவாட்டு ஏர்பேக்குகள் அளிக்கப்படுகிறது
தற்போது இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் டாட்சன், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 50,000 வாகனங்களை விற்பனை செய்தது. இந்தியாவில் தற்போது கோ மற்றும் கோ+ ஆகியவற்றை டாட்சன் விற்பனை செய்து வரும் நிலையில், 2016 ஆம் ஆண்டு பாதியை ஒட்டி, இதனோடு கோ கிராஸ் காரும் விற்பனையில் இணைய உள்ளது.
மேலும் படிக்க: அடுத்தாண்டு டாட்சன் ரெடி கோ, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது