இந்தாண்டு நிசான் GT-R இந்தியாவிற்கு வருவது உறுதி
நிசான் ஜிடிஆர் க்காக செப் 05, 2015 11:21 am அன்று cardekho ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த வாகனத்திற்கு உலகமெங்கும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கும் நிலையில், காட்ஸ்வில்லா என்ற செல்லப் பெயரை பெற்று, நிசான் இந்தியாவிற்கு ஒரு ஒளிரும் தயாரிப்பாக விளங்க போகிறது.
ஜெய்ப்பூர்: இந்தாண்டு நிசான் GT-R கார் இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது என்ற ஒரு வதந்தி பரவி வந்த நிலையில், தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நிசான் மோட்டார் கம்பெனி லிமிடேட்டின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கான மேலாண்மை குழுவின் தலைவரும், மூத்த துணை தலைவருமான திரு.கிறிஸ்டியன் மார்டரஸ், ஜப்பானின் யோகோஹாமாவில் கார்டிக்கோவின் பேட்டி ஒன்றில் உறுதிபடுத்தினார். இந்த கார் பெரும்பாலும் இந்தாண்டின் இறுதியில் இந்தியாவிற்கு வரும் என்று தெரிகிறது. இக்காரின் விலை ரூ.2 கோடியை ஒட்டி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு CBU (முழுமையடைந்த தயாரிப்பு) ஆக நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது. ஏற்கனவே நிசான் நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான 370Z இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தோடு அதுவும், X-ட்ரெயிலும் கைவிடப்பட்டது. மேலும் டீனா-வும் எந்த முன்அறிவிப்புமின்றி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த காட்ஸ்வில்லா, 3.8-லிட்டர் ட்வின் டர்போ V6 மூலம் இயக்கப்பட்டு, 3799 cc மோட்டாரில் இருந்து 550 PS @ 6400 rpm பெறப்படுகிறது. மேலும் 3200-வில் இருந்து 5800 rpm–க்குள் அதிகபட்ச முடுக்குவிசையாக 632 Nm-யை அளிக்கிறது. இந்த AWD கூபே-யின் சிறப்பான என்ஜினை, ஜப்பானில் ‘டாகுமி’ என்று அழைக்கப்படும் 4 நிபுணர் கைவினை கலைஞர்களை மட்டுமே கொண்ட குழுவால் கூட்டி இணைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு கூடுதல் தகவலாக தெரிவிக்கிறோம். ஒரு தனிப்பட்ட டிரான்ஸாக்சில் 4WD உடன் கூடிய 6-ஸ்பீடு இரட்டை கிளெட்ச் டிரான்ஸ்மிஷன் மூலம், இந்த மோட்டார் ஆற்றலை அளிக்கிறது. இதில் LSD-யையும் (லிமிடேட் சிலிப் டிஃபரன்டியல்) கொண்டுள்ளது. GT-R-ல் முன்புறத்தில் டபுள் விஸ்போர்ன் மற்றும் பின்புறம் மல்டி-லிங் சஸ்பென்ஸன் செட்டப் உடன் அதிர்வு தாங்கி அமைப்பான அடாப்டீவ் டம்ப் டிரோனிக் (அடாப்டீவ் டம்பர்ஸ்) ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 255/40 ZRF 20 மற்றும் பின்புறத்தில் 285/35 ZRF 20 என்ற அளவிலான டயர்களை கொண்டு இந்த கார் பயணிக்கிறது.