ஒப்பீடு: மஹிந்த்ராவின் TUV 300, ஃபோர்டின் எக்கோ ஸ்போர்ட்டை எப்படி சமாளிக்கப் போகிறது?
published on ஆகஸ்ட் 28, 2015 10:05 am by அபிஜித்
- 21 Views
- 7 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
வாகன சந்தையில், இப்பொழுது கச்சிதமான SUV பிரிவில் தாராளமாக தேர்தெடுக்கும் வண்ணம் ஐந்து விதமான மாடல்கள் கிடைக்கின்றன. எக்கோ ஸ்போர்ட், ஹுண்டாய் கிரேட்டா, S – க்ராஸ், டஸ்டர் மற்றும் டெர்ரானோ ஆகிய அனைத்தும் குறுகிய காலத்தில் தங்களது மதிப்பையும், முத்திரையையும் வெகுவாக உயர்த்தியுள்ளன. இத்துடன் முடிந்துவிடவில்லை, சமீபத்தில் அறிமுக காட்சியால் பிரபலமான, மஹிந்த்ராவின் புதிய TUV 300 மாடல், இந்த பிரிவில் இணைந்து நமக்கு மேலும் ஒரு விருப்ப தெரிவாக இருக்கப் போகிறது. இது 4 மீட்டருக்கு உள்ளடங்கிய கார் வகையாக இருக்கும். இந்த வகையில் உள்ள மற்றொரு வலிமை வாய்ந்த வாகனமான எக்கோ ஸ்போர்ட் காருடன் போட்டியிட என்னென்ன உத்திகளை, இந்த கார் தன்னகத்தே கொண்டுள்ளது என்றும் நாம் அறிந்து கொள்ளலாம்.
வெளித்தோற்றம்: உண்மையான SUV ரக காரா?
எக்கோ ஸ்போர்ட்ஸ் காரைப் பற்றி பார்க்கும் போது, அதன் ஸ்டைலான வெளிப்புற தோற்றமும், மிகப் பிரம்மாண்ட தோரணையையும் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே. இதன் SUV வகை தோற்றத்தை மேம்படுத்தும் வகையில், மிக உயர்ந்த இயந்திர மூடி (பானேட்), மிரட்டும் முகப்பு விளக்குகள், பரந்த அறுங்கோண கம்பி வலை ஆகியன சிறப்பாக அமைந்துள்ளன. இதன் பக்க தோற்றம், அழுத்தமான சக்கர வளைவுகளையும், நுட்பமான தோள்பட்டை வரிகளையும், நுண்ணிய வளைவை கொண்ட பின்புற கண்ணாடி (ரியர் விண்ட் ஸ்கிரீன்) சற்றே பக்கவாட்டு இறுதி வரை வந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் வளைவான, நேர்த்தியான பின்புற விளக்குகள் மற்றும் உபரி சக்கர பொருத்தி ஆகியன இதன் தோற்றத்திற்கு கூடுதல் கம்பீரத்தைக் கொடுக்கிறது. இவை தவிர, தரை இடைவெளி (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) 200 mm கொண்ட எக்கோ ஸ்போர்ட் இப்பிரிவில் உள்ள அனைத்து கார்களையும் விட உயரமான தோற்றத்தை உடையதாக உள்ளது. இது பார்பதற்கு உண்மையான SUV போல உள்ளதா? ஆம், ஆனால் 4 மீட்டருக்கு உள்ளடங்கிய கார் என்ற விதி முறையால் கிரேட்டா மற்றும் டஸ்டர் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது சற்று சிறியதாக தென்படுகிறது.
TUV மாடலைப் பொருத்தவரை, மஹிந்திரா எந்த ஒரு தெளிவான உண்மையான படத்தையும் வெளியிடவில்லை, ஆனால் இதன் அறிமுக திரை காட்சியில் வரும் உருவ படம், SUV மாடலின் சிறந்த மூலகமான பெரிய உருவ அமைப்பை பெற்றுள்ளது. இதன் சதுர வடிவம், இதற்கு முன் வெளிவந்த பொலிரோவை நினைவுபடுத்துகிறது. மற்றும் இதன் குட்டையான முகப்பு, தூக்கலான பின்புறமும் பந்தைய காரின் தோற்றத்தில் உள்ளது. இந்த கார் மஹேந்திராவின் தனித்துவ கம்பி வலை (கிரில்), செவ்வக வடிவ முகப்பு விளக்கு மற்றும் அதே வடிவ பின்புற விளக்குகளையும் கொண்டுள்ளது. எக்கோ ஸ்போர்ட் போலவே, TUV 300 மாடலும் 200 mm தரை இடைவெளியுடனும், பின்புற உபரி சக்கர தாங்கியும் பொருத்தி வரவுள்ளது. மற்ற வெளிப்புற சிறப்புகளான பெரிய சன்னல்கள், இந்த தயாரிப்பாளர்களின் அனைத்து வாகனங்களிலும் உள்ளது போலவே அமைக்கபட்டுள்ளது. மேலும் இதன் அறிமுக திரை காட்சியில் வரும் உருவ படத்தில் உள்ள புடைப்பான டயர்கள் SUV மாடலின் உன்னத தன்மையை வெளிபடுத்துகிறது.
உட்புறதோற்றம்: எக்கோ ஸ்போர்ட் நிறைய சிறப்புகளை பெற்றுள்ளது!
மஹிந்திரா நிறுவனம், உயர்தர உட்புற அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. இந்த வாகனங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், ஒருசில பயன்பாட்டுத் தன்மை (எர்கோனாமிக்) மற்றும் தரம் சம்மந்தமான சிக்கல்களை கொண்டுள்ளது. மறுபுறம் பார்க்கும் போது, ஃபோர்ட் நிறுவனம் அதன் பயன்பாட்டுத் தன்மை மற்றும் உறுதி வாய்ந்த கட்டமைப்புக்கு பேர் போனதாக உள்ளது. எக்கோ ஸ்போர்ட் காரும் இதற்கு விதி விலக்கு இல்லை. மேலும், பயணத்தை எளிதாக்குவதற்கு ஏற்றவாறு பல்வேறு சிறு கருவிகள் எக்கோ ஸ்போர்ட் காரில் அருமையாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரின் இருக்கைகளை மிதமாகவும், இதமாகவும், 5 பேர் வசதியாக அமர்ந்து நிலை கொள்ள வசதியாகவும் அமைத்துள்ளனர். ஆனால், இதில் பெரிய குறை என்னவென்றால், கிரேட்டா, S கிராஸ் மற்றும் டஸ்டர் கார்களில் உள்ளது போல, வாடிக்கையாளர்கள் விரும்புகின்ற தொடு திரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு இந்த காரில் பொருத்தப்படவில்லை.
இத்தகைய குறையை TUV 300 மிகவும் எளிதாக சமாளித்துவிடும் என்று தெரிகிறது. ஏனெனில், ஸ்கார்பியோ அல்லது XUV 500 காரில் உள்ளது போல தொடு திரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பை, மஹிந்திரா நிறுவனம் இதில் பொறுத்தவிருக்கிறது. மேலும், உளவு பார்த்து வெளிவந்த TUV 300 –இன் உருவப்படமும், சமீபத்தில் வந்த அறிமுக படத்திலும் உள்ள சக்கர திருப்பி (ஸ்டியரிங் வீல்) மற்றும் இதன் மத்திய இணைமையம் (சென்ட்ரல் கன்சோல்) போன்றவை, மஹிந்திரா நிறுவனம் உண்மையிலேயே கடுமையான போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. மேம்பட்ட உட்புற கருவிகளையும், போதுமான வசதிகளையும் TUV தன்னகத்தே கொண்டு சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நுட்பங்கள்:
எக்கோ ஸ்போர்ட்டின் நுட்பங்களை கவனிக்கையில், இது கச்சிதமான SUV ரக கார்களின் வழக்கமான அம்ஸமான முன்புற சக்கரங்களின் மூலம் இயங்கும் அமைப்பு, மற்றும் அனைத்தும் மோனோகோக் அடிச்சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இது இந்த காருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. மேலும், ஃபோர்டின் பேரொலி எழுப்பும் சஸ்பென்சன் மற்றும் அடிச்சட்டத்துடன் ஒப்பிடும் போது, எக்கோ ஸ்போர்ட் கையாளுவதற்கு மிகவும் அருமையான அமைப்புகளைக் கொண்டுள்ளது. DCT தானியங்கியுடன் கூடிய 5 Ti- VCT பெட்ரோல் இஞ்ஜின், மிகவும் பிரபலமான 1.5 TDCi டீசல் இஞ்ஜின் மற்றும் மிகச் சிறந்த 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இஞ்ஜின் என்ற மூன்று விதமான இஞ்ஜின் தெரிவுகளில் இந்த கார் கிடைக்கிறது.
இன்று வரை, மஹிந்த்ரா நிறுவனம் TUV 300 காரின் ட்ரைவ் டிரைன் பற்றியோ இதன் அடிச்சட்டத்தை பற்றியோ மூச்சு விடவில்லை. எனினும், இதன் அமைப்பு ஏணி போன்ற கட்டமைப்பையே சார்ந்திருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. ஒரு வேளை, ஸ்கார்பியோ காரில் உள்ள ஹைட்ரோ ஃபார்ம்ட் அடிச்சட்ட அமைப்பை கொண்டும் அமைக்கப்படலாம். அப்படி அமைந்தால், இதன் சாலை திறனை நிச்சயமாக மேலும் ஒரு படி உயர்த்தும். மேலும், இந்த கார் பின் சக்கர இயக்க முறையில் குவாண்டோ கார் போல, எக்கோ ஸ்போர்ட்டை விட, கடினமான பகுதிகளில் மேற்கொள்ளும் பயணங்களை, மிகவும் எளிதாக சமாளிக்க உதவும். இதன் செயல்திறன் சக்தியை குவாண்டோ காரில் உபயோகப்படுத்திய அதே 1.5 லிட்டர் mHawk 80 மோட்டாரிலிருந்து பெறுகிறது. ஆனால், 80 bhp முடுக்கு விசையை தரவல்லதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை?
மஹிந்த்ரா நிறுவனம், உள்நாட்டு உற்பத்தியாளர் என்பதால் வாகனங்களின் விலை எப்போதுமே எளிதாக வாங்கக்கூடிய வகையில் இருக்கும். ஸ்கார்பியோவின் விலை கச்சிதமான SUV ரக கார்களை ஒத்து இருந்தது போல, TUV காரின் அடிப்படை ரகம், எக்கோ ஸ்போர்ட்டின் அடிப்படை டீசல் வகை காரின் விலையை விட குறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 out of 0 found this helpful