ஒப்பீடு: ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் vs ஸ்விஃப்ட் டிசையர் vs அமேஸ் vs எக்ஸ்சென்ட் vs சிஸ்ட்
published on ஆகஸ்ட் 13, 2015 11:18 am by raunak for போர்டு ஆஸ்பியர்
- 15 Views
- 8 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:அதிக காத்திருப்பை ஏற்படுத்திய 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய ஃபிகோ ஆஸ்பியரை, எதிர்பார்த்த அளவிற்கு அதிர்ச்சி அளிக்கும் விலையில் ஃபோர்டு நிறுவனம் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இப்பிரிவிலேயே முதல் முறையாக 6-ஸ்பீடு இரட்டை-கிளெச் ஆட்டோமேட்டிக் மற்றும் சிக்கனமான சக்தி வாய்ந்த என்ஜின் என்று அதிக சிறப்புகளை கொண்டிருப்பதால், ஃபோர்டு நிறுவனம் இக்காருக்கு நேர்த்தியான போட்டியிடும் விலை நிர்ணயிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனவே, புதிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் எந்தளவுக்கு நம் கவனத்தை கவர்கிறது என்பதை காண்போம். 4 பேருக்கும் மேல் கச்சிதமாக செல்ல கூடிய இப்பிரிவில் அடங்கிய மற்ற கார்களுடன் போட்டியிட்டால், இந்த கார் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்போடு ஒப்பீடு செய்ய உள்ளோம்.
முடிவில், மற்ற எல்லா போட்டியாளர்களையும், ஃபிகோ ஆஸ்பியர் கிட்டதட்ட ஜெயித்துவிட்டது என்ற பட்டத்தை பெற்று, ஆட்சி செய்ய தயாராகிவிட்டது. மேலும் சிறப்பம்சங்களின் பட்டியலில், ஆப்லிங்க் ஸ்மார்ட்போன் இன்டிகிரேஷன் உடன் கூடிய குரல் வழிநடத்துதல் கொண்ட ஃபோர்டின் SYNC சிஸ்டம், தோலால் ஆன திரைச்சீலைகள், மெத்தைகள் ஆகியவற்றின் குழுமம், குறைந்த வகையில் காணப்படும் ஃபோர்டு மைடாக் டாக்கிங் ஸ்டேஷன் ஆகிய சிறப்பம்சங்கள் இப்பிரிவை சேர்ந்த கார்களில், இதில் தான் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்பியரின் விற்பனை எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என்று காத்திருக்கும் அதே நேரத்தில், ஃபோர்டு தன் கையில் ஒரு வெற்றியாளரை வைத்துள்ளது என்றே தோன்றுகிறது.
0 out of 0 found this helpful