• English
  • Login / Register

செவர்லே இந்தியா நிறுவனம் தன்னுடைய வலைத்தளத்தில் புதிய ட்ரெயில்ப்ளேசர் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது

published on அக்டோபர் 12, 2015 06:45 pm by raunak for செவ்ரோலேட் ட்ரையல்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கேப்டிவா வாகனத்திற்கு பிறகு பிரிமியம் SUV பிரிவில் ஓர் இடத்தைப் பிடிக்க ஜிஎம் இந்தியா நிறுவனம் செய்யும் இரண்டாவது முயற்சியாக ட்ரெயில்ப்ளேசர் அறிமுகம் பார்க்கப்படுகிறது.

Chevrolet trailblazer

செவர்லே இந்தியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள ட்ரெயில்ப்ளேசர் SUV வாகனங்களை தனது வலைத்தளத்தில் காட்சிபடுத்தி உள்ளது. இந்த மாதம் 21 ஆம் தேதி இந்த வாகனம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. டொயோடா பார்சூனர் ,மிட்சுபிஷி பெஜிரோ ஸ்போர்ட் மற்றும் விரைவில் அறிமுகமாக உள்ள புதிய போர்ட் எண்டீவர் (https://www.cardekho.com/india-car-news/endeavour-now-featured-on-ford-india-website-16388.htm ) ஆகிய வாகனங்கள் தான் இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களுக்கு முக்கிய போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த புதிய ட்ரெயில்ப்ளேசர் வாகனங்கள் CBU முறையில் ( முற்றிலும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு இங்கே இறக்குமதி செய்து உடனே பயன்படுத்தும் விதம் ) இங்கே இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே வெளியாகும் என்றும் எக்ஸ் - ஷோரூம் விலை சுமாராக 29  லட்சங்களை ஓட்டியே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : செவர்லே ட்ரெயில்ப்ளேசர் அக்டோபர் 21 ஆம் தேதி அறிமுகமாகிறது.

2.8 லிட்டர் ட்யூராமேக்ஸ் மோட்டார் தான் இந்த SUVயின் அதிமுக்கிய அம்சமாக விளங்குகிறது. 3600 rpm -ல், 200  PS அளவு சக்தியையும், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள இந்த வகையை சேர்ந்த SUV வாகனங்களிலேயே 2000rpm - ல் மிக அதிக அளவு 500  nm அளவுக்கு ட்விஸ்டை வெளியிடக்கூடிய 2.8 லிட்டர் 4 - சிலிண்டர் ஆயில் பர்னர் இந்த ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களை சக்தியூட்டுகிறது. இப்போதைக்கு 4x2  லேஅவுட் உடன் மட்டுமே அறிமுகமாக உள்ள இந்த SUV வாகனத்தில் 6 - வேக தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி செவர்லே நிறுவனத்தின் அதி நவீன பிரத்யேக தயாரிப்பான செவேர்லே மைலிங்க் 7- அங்குல டச்ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் சிஸ்டம் முதல் முறையாக இந்த ட்ரெயில்ப்ளேசர் SUV வாகனத்தின் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இன்போடைன்மென்ட் அமைப்பில் சேட்டிலைட் நேவிகேஷன், சென்சார் உடன் கூடிய ரிவர்ஸ் பார்கிங் கேமரா மற்றும் இன்னும் பல தகவல் தொடர்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன

Chevrolet Trailblazer Interior

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை இரட்டை - முன்புற காற்றுப்பைகள்

மின்னணு ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ட்ரேக்க்ஷன் கண்ட்ரோல் மற்றும் ABS+EBD அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில காலம் கழித்து செவர்லே நிறுவனம் 4x4  வெர்ஷன் மற்றும் மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் அம்சங்கள் இணைக்கப்பட்ட வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க தவறாதீர்கள்

  • செவர்லே ட்ரெயில்ப்ளேசர் மற்றும் ஸ்பின் தகவல்களை வெளியிட்டது; $ 1 பில்லியன் இந்தியாவில் முதலீடு செய்யப்பட உள்ளது.
  • 2016 செவர்லே க்ரூஸ் தகவல்கள் வெளியானது.
was this article helpful ?

Write your Comment on Chevrolet ட்ரையல்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience