செவ்ரோலெட் க்ரூஸ்: சாதக பாதகங்களின் விரிவான பட்டியல்
modified on ஜனவரி 18, 2016 04:45 pm by sumit for செவ்ரோலேட் க்ரூஸ்
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரினால்ட் ஃ
ப்ளூயன்ஸ் மற்றும் வோல்க்ஸ்வகேன் ஜெட்டா ஆகிய கார்களின் மேல் மக்களுக்கு இருக்கும் மோகத்தை வென்று, செவ்ரோலெட் க்ரூஸ் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை நிறுவ சில காலங்கள் எடுத்துக் கொண்டாலும், சமீபத்தில் உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 2016 க்ரூஸ் மாடல் அறிமுகமாவதற்கு முன்பே, வாகன சந்தையில் ஒரு எதிர்பார்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது. நாம் இந்த காரை பற்றிய சாதக பாதக அம்சங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, அவற்றின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்.
சாதகமான அம்சங்கள் பட்டியல்:
- செவெரோலேட் க்ரூஸ்ஸின் சிறப்பான செயல்திறனுக்குக் காரணம், , அதன் அபாரமான தரமே என்றால் அது மிகை ஆகாது. சக்திவாய்ந்த இஞ்ஜின் பொருத்தப்பட்டு இருப்பினும், இதன் ஆக்செலரேஷன் நீல்ச்சியாகவே (லீனியர்) உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நகரத்திற்குள் இந்த காரை ஓட்டுவதற்கு மிகவும் எளிதாக உள்ளது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. செவ்ரோலெட் க்ரூஸ் பிரிவில் உள்ள மற்ற கார்களோடு ஒப்பிடும் போது, இதன் கிளட்ச் அமைப்பை கையாளுவது மிகவும் எளிதாகவும், மென்மையாகவும் உள்ளதால், ஓட்டுனர்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றனர் என்பது உண்மை.
- செவெரோலேட் தனது புதுபிக்கப்பட்ட மாடல்களில் உள்ள ஒரு வெர்ஷனில், க்ரூஸ் இஞ்ஜினை (2.0 லிட்டர்) மேம்படுத்தி பொருத்தியுள்ளது. புதிய இஞ்ஜின் அதிகபட்சமாக 164 bhp சக்தி மற்றும் 380 Nm டார்க்கை உற்பத்தி செய்யவல்லது. இத்தகைய மேம்படுத்தப்பட்ட திறனுடன் வருவதால், க்ரூஸ் காரே இந்த பிரிவில் மிக சக்தி வாய்ந்த காராக திகழ்கிறது. செவெரோலேட்டின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
- அமெரிக்க காரான செவ்ரோலெட் க்ரூஸின் உட்புறத்தில், ஆடம்பர வசதிகளான, பார்ஷியலி பவர்ட் டிரைவர் சீட், பின்புற பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குஷன் மற்றும் பல சுவாரஸ்யமான அம்சங்களும் பொருத்தப்பட்டு, பயணத்தை களைப்பற்றதாக்குகின்றன. இது தவிர, க்ரூஸ் காரின் பின் இருக்கையில் மேம்படுத்தப்பட்ட ஹெட்ரூம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில், க்ரூஸ் தனித்தன்மை வாய்ந்த காராகத் திகழ, இந்த ஹெட்ரூம் உறுதுணையாக இருக்கிறது.
- க்ரூஸ் கார் பிரிவில், ஒலி மாசு ஏற்படுத்தாமல் சத்தமின்றி செல்லும் கார்களில் இதுவும் ஒன்று. அது மட்டுமல்லாமல், இது சிறந்த மைலேஜ் (17.3 kmpl மேனுவல் வகையில்) தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதகமான அம்சங்கள்:
மேற்சொன்ன, பல வகை சாதகமான அம்சங்கள் இருந்தாலும், ஒரு சில விஷயங்களைப் பார்க்கும் போது, இந்த அமெரிக்க கார் தயாரிப்பாளர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று எண்ணம் ஓங்குகிறது என்பதே உண்மை.
- அதிக செயல்திறன் வாய்ந்த க்ரூஸ் மாடலின் இஞ்ஜினால், எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்படும் ஆரம்ப நிலை பிக்அப் வேகத்தைத் தர முடியவில்லை. முக்கியமாக, குறைந்த வேகத்தில் பயணம் செய்யும் போது இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. அதே நேரம், அதிக வேகத்தில் செல்லும் போது, திருப்பங்களில் இதமாக திரும்ப முடியாமல் ஓட்டுனரைத் தடுமாறச் செய்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள சாஃப்ட் ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு நகர சூழலுக்கு மட்டுமே ஏற்றவாறு உள்ளன.
- க்ருஸின் போட்டி கார்கள் அனைத்தும் வலுவான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அவற்றைப் பார்க்கும் போது க்ருஸின் உரிமையாளருக்கு சற்றே ஏக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
- க்ருஸிசின் உட்புறத்தில் பல இடங்களில் நெகிழி ஃபினிஷ் காணப்படுகிறது. எனவே, ஆடம்பர அம்சங்கள் பல இருந்தாலும், இது ஒட்டுமொத்த கேபின் தரத்தைக் குறைக்கிறது.
- பின்புறத்தில் உள்ள பயணிகளுக்கு AC வெண்ட்கள் இல்லை.
முடிவுரை
செவ்ரோலெட் க்ரூஸ் கம்பீரமான தோற்றத்தில் உள்ளதால், சக்தி மற்றும் வசதி ஆகிய இரண்டும் ஒரு சேர வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இது சரியான தீர்வாக இருக்கும். நகரத்தில் உள்ள அதிகப்படியான போக்குவரத்தை எளிதில் சமாளிக்க க்ரூஸ் உதவுகிறது. அதே சமயத்தில், வெளியே உள்ள இரைச்சல், உள்ளமர்ந்து பயணம் செய்பவர்களை பாதிக்காத அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கால்களை சவுகர்யமாக வைப்பதற்குத் தேவையான இட வசதி உள்ளது. ஒரு கார் வாங்க நினைப்பவரைக் கவர்ந்திழுக்கும் அளவிற்கு, ஏராளமான ஆடம்பர வசதிகளை இந்த காரில் செவ்ரோலெட் நிறுவனம் பொருத்தி உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து விஷயங்களிலும் சிறந்த முறையில் இயங்குகின்ற இந்த க்ரூஸ், நிச்சயமாக உங்களின் பணத்திற்கு மதிப்பு தரும் வகையில் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றே கூற வேண்டும்.
மேலும் வாசிக்க
- செவர்லே இந்தியா தன் டீலர் நெட்வொர்கை இழக்கிறது.
- ஒப்பீடு: டாடா ஜிக்கா vs. செவ்ரோலெட் பீட் vs. ஹுண்டாய் i10 vs. மாருதி செலேரியோ
ரினால்ட் ஃப்ளூயன்ஸ் மற்றும் வோல்க்ஸ்வகேன் ஜெட்டா ஆகிய கார்களின் மேல் மக்களுக்கு இருக்கும் மோகத்தை வென்று, செவ்ரோலெட் க்ரூஸ் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை நிறுவ சில காலங்கள் எடுத்துக் கொண்டாலும், சமீபத்தில் உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 2016 க்ரூஸ் மாடல் அறிமுகமாவதற்கு முன்பே, வாகன சந்தையில் ஒரு எதிர்பார்ப்பு அலையை ஏற்படுத்தி உள்ளது. நாம் இந்த காரை பற்றிய சாதக பாதக அம்சங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்து, அவற்றின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம்.