கார்தேக்கோ ஸ்பீக்: திட்டமிடப்பட்டதை விட முன்னரே… 2024 ஆண்டில் வெளியாகிறதா Maruti eVX !
published on டிசம்பர் 11, 2023 07:59 pm by sonny for மாருதி இ vitara
- 108 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி eVX, ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் காட்சிப்படுத்தப்பட்டபோது, இதை 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
-
இது இந்தியாவில் மாருதியின் முதல் EV கார் ஆகும்.
-
மாருதி eVX -ன் பல ஸ்பை ஷாட்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளன.
-
550 கிமீ வரம்பில் 60 kWh பேட்டரி பேக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
AWD உடன் டூயல் மோட்டார் செட்டப் இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
-
முன்பக்கம் மற்றும் பின்புறத்தில் 3-பீஸ் LED லைட்டிங் செட்டப்பை பெறலாம், மற்றும் பெரிய வீல் ஆர்ச்களையும் பெறலாம்.
-
உள்ளே, இது ஒரு இன்டெகிரேட்டட் டிஸ்பிளே செட்டப் மற்றும் ஒரு பவர்டு டிரைவர் சீட்டை பெறும்.
-
விலை ரூ. 22 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
இந்தியாவில் விலை குறைவான மின்சார கார் பிரிவில், தற்போது டாடா நிறுவனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இப்போது ஆட்டோமொபைல் துறையில் முன்னணி நிறுவனமான மாருதி சுஸூகி போட்டியில் இணைவதற்காக காத்திருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 -ல் இந்தியாவிற்கான மாருதியின் முதல் EV -யான eVX கான்செப்ட் முதல் பார்வை நமக்கு கிடைத்தது. முதலில் 2025 -ம் ஆண்டிற்குள் வரவிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிலேயே இது வரும் என்று நம்புவதற்கு சில காரணங்கள் உள்ளன.
முன்கூட்டிய அறிமுகம் ஏன்?
Maruti eVX எலக்ட்ரிக் எஸ்யூவியின் சோதனைக் கார்கள் இந்தியாவில் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளன, அவை பெரிதும் உருவம் மறைக்கப்பட்டிருந்தாலும், அவை உற்பத்திக்குத் தயாராக இருந்து வெகு தொலைவில் இருப்பதை போல தெரியவில்லை. புதிய மாருதி கார்கள் சோதனை தொடங்கியவுடன் ஒரு வருட காலத்திற்குள் விற்பனைக்கு வரும் என்பதால் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது முக்கியமான காரனம். 2024-25 நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் குஜராத்தில் உள்ள அதன் புதிய ஆலையில் eVX தயாரிக்கப்படும் என்று மாருதி உறுதிப்படுத்துகிறது.
இரண்டாவதாக, ஜப்பானில் eVX எஸ்யூவி கான்செப்ட்டின் மிகவும் பரிணாம வளர்ச்சியடைந்த பதிப்பை, வெளிப்புறத்திற்கான மிகவும் யதார்த்தமான வடிவமைப்பு விவரங்களுடன் சுஸூகி வெளியிட்டது.
மூன்றாவதாக, டொயோட்டா சமீபத்தில் புதிய அர்பன் எஸ்யூவி எலக்ட்ரிக் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது இது சுஸூகி eVX (சுஸூகி EV -யை அடிப்படையாகக் கொண்டது) போன்ற ஸ்டைலிங் குறிப்புகளைக் கொண்டுள்ளது, குறிப்பாக பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறம் ஆகியவற்றில் பார்க்க முடிகிறது. 2024 -ம் ஆண்டின் முதல் பாதியில் அதன் உலகளாவிய அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுஸூகி மற்றும் டொயோட்டா இடையேயான உலகளாவிய கூட்டணியின் ஒரு பகுதியாக இது மற்றொரு பகிரப்பட்ட மாடலாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
eVX இந்தியாவில் 2023 -ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானதால், டொயோட்டா பதிப்பு மற்ற சந்தையில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே மாருதி எலக்ட்ரிக் எஸ்யூவி இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதுவரை நாம் அறிந்தவை
Maruti eVX பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் குறைவாகவே தெரிய வந்துள்ளன. கான்செப்ட் வடிவத்தில் அறிமுகமாகும்போது, மின்சார காம்பாக்ட் எஸ்யூவி -யானது 60 kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கும் மேலும் 550 கிமீ தூரம் செல்லகூடும். காரின் செயல்திறன் குறித்து எந்த விவரங்களும் இல்லை, ஆனால் eVX ஆனது ஆல்-வீல்-டிரைவ் அமைப்பிற்காக டூயல்-மோட்டார் ஆப்ஷனையும் பெறும். டொயோட்டாவின் பதிப்பு பல பேட்டரி அளவுகளுடன் முன்-சக்கர டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் இரண்டின் தேர்வையும் பெறும் என்பதால், இது ஒரே பவர்டிரெய்ன் ஆப்ஷனாக இருக்காது.
உள்ளேயும் வெளியேயும் எப்படி இருக்கும்?
வடிவமைப்பைப் பொறுத்தவரை, சமீபத்திய சுஸூகி eVX வெளிப்புறம் மற்றும் உட்புறத்தைப் பற்றி பேசலாம். வெளிப்புறத்தில், இது நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் முக்கோண பாணியில் வடிவமைக்கப்பட்ட DRL -கள் மற்றும் பெரிய பம்பர்களை கொண்டிருக்கும். மற்ற வெளிப்புற வடிவமைப்பு எலமென்ட்களில் விரிந்த சக்கர வளைவுகள், ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லேம்ப் அமைப்பு ஆகியவை அடங்கும்.
eVX -ன் கேபின் ஒரு மினிமலிஸ்ட் அமைப்பையே கொண்டிருக்கும், இதன் சிறப்பம்சங்கள் ஒரு இன்டெகிரேட்டட் டிஸ்பிளே செட்டப், யோக்-ஸ்டைல் ஸ்டீயரிங், நீண்ட வெர்டிகலான ஏசி வென்ட்கள் மற்றும் கியர் தேர்வுக்கான சென்டர் கன்சோலில் ஒரு ரோட்டரி நாப் ஆகியவை இருக்கலாம்.
இதையும் படிக்கவும்: 2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் இன்ஜின் மற்றும் மைலேஜ் புள்ளிவிவரங்கள் விளக்கப்பட்டுள்ளன (ஜப்பான்-ஸ்பெக்)
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
டூயல் டிஸ்பிளே செட்ட்ப் மற்றும் யோக் போன்ற ஸ்டீயரிங் தவிர, eVX 360 டிகிரி கேமரா, பவர்டு டிரைவர் இருக்கை மற்றும் ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் வரை இருக்கலாம். பாதுகாப்பான நெடுஞ்சாலை டிரைவிங்கிற்காக ADAS அம்சங்களுடன் eVX வரும் என நம்புகிறோம்.
விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி eVX காரின் விலை ரூ. 22 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுடன் போட்டியிடும். டாடா நெக்ஸான் EV மற்றும் மஹிந்திரா XUV400 ஆகிய கார்களுக்கு மாற்றாக இருக்கும்.
0 out of 0 found this helpful