சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது BYD Sealion 7 EV

dipan ஆல் ஜனவரி 18, 2025 11:30 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
50 Views

BYD சீலையன் 7 EV ஆனது 82.5 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது.

  • ஆல் LED லைட்ஸ், ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்ஸ் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.

  • உட்புறம் வெள்ளை லெதரெட் இருக்கை அப்ஹோல்ஸ்டரியுடன் கூடிய உயர்மட்ட டாஷ்போர்டை பெறுகிறது.

  • 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை இதில் கிடைக்கும்.

  • பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ADAS மற்றும் TPMS ஆகியவை அடங்கும்.

  • ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷன்களுடன் வருகிறது.

  • விலை ரூ.45 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் BYD நிறுவனத்தின் நான்காவது காராக சீலையன் வேர்ல்ட் 7 EV இந்தியாவில் நடைபெற்று வரும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது.இது ஏற்கெனவே சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இது இந்தியாவில் மார்ச் 2025 -க்குள் அறிமுகப்படுத்தப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் எலக்ட்ரிக் எஸ்யூவி -க்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு மார்ச் 7, 2025 அன்று டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே BYD சீலையன் 7 EV பற்றி விரிவாகப் பார்ப்போம்:

வெளிப்புறம்

சீல் EV -யில் உள்ள அதே ஹெட்லைட் யூனிட்கள் BYD சீலையன் 7 காரிலும் உள்ளன. ஒரு பிளாங்க்-ஆஃப் கிரில் மற்றும் முன் பம்பரில் ஆக்ரோஷமான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகள் ஆகியவை உள்ளன. கீழ் பகுதி பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டாக கிடைக்கும். ஆனால் நீங்கள் பெரிய 20-இன்ச் யூனிட்களை தேர்வு செய்யலாம். இது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் காரின் நீளம் முழுவதுக்கும் வீல் ஆர்ச்களுக்கு மேலே ஒரு பிளாக் கிளாடிங் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. குறுகலான கூரை இருப்பதால் காருக்கு ஒரு எஸ்யூவி-கூபே தோற்றம் கிடைக்கிறது.

இது பிக்சல் வடிவமைப்பு எலமென்ட்களுடன் கனெக்டட் LED டெயில் லைட்களை பெறுகிறது. பின்புற பம்பர் பிளாக் கலர் பகுதி உள்ளது, இது பின்புற ஃபாக் லைட்ஸை கொண்டுள்ளது இது எஸ்யூவியை மிக அழகாக மாற்றுகிறது.

சீலையன் 7 EV -ன் அளவுகள் இங்கே:

விவரங்கள்

பரிமாணங்கள்

நீளம்

4,830 மி.மீ

அகலம்

1,925 மி.மீ

உயரம்

1,620 மி.மீ

வீல்பேஸ்

2,930 மி.மீ

பூட் ஸ்பேஸ்

520 லிட்டர்

இன்ட்டீரியர்

ஆடியோ மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கன்ட்ரோல்களுக்கு 4-ஸ்போக் ஸ்டீயரிங் கொடுக்கப்பட்டுள்ளது. டாஷ்போர்டில் ஒரு ஏசி வென்ட்டிலிருந்து இன்னொரு ஏசி வென்ட்டிற்கு செல்லும் ஒரு கிளாஸி பிளாக் பேனல் உள்ளது மற்றும் மையத்தில் 15.6-இன்ச் ரொட்டேட்டபிள் டச் ஸ்கிரீன் உள்ளது.

சென்டர் கன்சோலில் டிரைவ் செலக்டர் நாப், டிரைவ் மற்றும் டெரெய்ன் மோடுகளுக்கான பட்டன்கள், இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிட்களுக்கு வெள்ளை நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இருக்கைகளும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுடன் வருகின்றன. பின் இருக்கை பயணிகளுக்கு ஏசி வென்ட்கள் மற்றும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவையும் உள்ளன.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

ரொட்டேட்டபிள் 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), 12-ஸ்பீக்கர் டைனா ஆடியோ சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் உடன் வருகிறது. முன் இருக்கைகள் ஹீட்டட் மற்றும் வென்டிலேஷன் ஃபங்ஷன்களை கொண்டுள்ளன மற்றும் இரண்டு இருக்கைகளும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடியவை. டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வெஹிகிள் டூ லோடிங் (V2L) வசதிகளுடன் இது வருகிறது.

பாதுகாப்புக்காக இது 11 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வருகிறது. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற ADAS அம்சங்களையும் பெறுகிறது.

பேட்டரி பேக், செயல்திறன் மற்றும் ரேஞ்ச்

சீலையன் 7 EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது சர்வதேச சந்தைகளில் சிங்கிள் அல்லது டூயல் மோட்டார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

பிரீமியம்

செயல்திறன்

பேட்டரி பேக்

82.56 kWh

82.56 kWh

எலக்ட்ரிக் மோட்டார்கள் எண்ணிக்கை

1

2

டிரைவ்டிரெய்ன்

RWD

AWD

பவர்

313 PS

530 PS

டார்க்

380 Nm

690 Nm

கிளைம்டு ரேஞ்ச்

567 கி.மீ

542 கி.மீ

சீலையன் 7 காரை 24 நிமிடங்களில் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

BYD சீலையன் 7 -ன் விலை ரூ. 45 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 போன்ற பிரபலமான EV களுக்கு போட்டியாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on BYD சீலையன் 7

M
murlidhar sidar
Jan 19, 2025, 7:43:24 AM

People are interested in 6-7 seater cars. All companies are doing big mistake to understand people. Everyone wants third row folding option. Mostly family have 2+2+2 (husband wife+ kids+parents).

மேலும் ஆராயுங்கள் on பிஒய்டி சீலையன் 7

பிஒய்டி சீலையன் 7

4.73 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை