• English
  • Login / Register

இந்தியாவில் BYD eMAX 7 எப்போது விற்பனைக்கு வரும் தெரியுமா ?

பிஒய்டி emax 7 க்காக செப் 19, 2024 06:40 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இப்போது இமேக்ஸ் 7 என்று அழைக்கப்படும் e6 -ன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

BYD eMAX 7 India launch date out

  • e6 எம்பிவி ஆனது இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் BYD இன் முதல் தனியார் வாகனம் ஆகும்.

  • BYD சர்வதேச சந்தைகளில் இமேக்ஸ் 7 -யை M6 எம்பிவி ஆக வழங்குகிறது.

  • குளோபல் BYD M6 மாடலில் உள்ள வடிவமைப்பு மாற்றங்கள் இமேக்ஸ் 7 காரிலும் இருக்கும்.

  • புதிய LED லைட்ச் மற்றும் அலாய் வீல்களை கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பு, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பனோரமிக் கண்ணாடி ரூஃப் உடன் வரலாம்.

  • சர்வதேச அளவில் BYD ஆனது M6 ஆனது இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது: 55.4 kWh மற்றும் 71.8 kWh, 530 கிமீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.

  • e6 காரை விட இமேக்ஸ் 7 விலை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம். இதன் விலை ரூ 29.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட BYD e6 எம்பிவி ஆனது இமேக்ஸ் வேர்ல்ட் 7 என அழைக்கப்படும். இமேக்ஸ் 7 இந்தியாவில் அக்டோபர் 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை பிஒய்டி இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்புக்கு BYD நிறுவனம் எம்பிவி சர்வதேச சந்தைகளில் 'M6' ஆக விற்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள இந்த காரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே:

வடிவமைப்பில் எதிர்பார்க்கப்படும் அப்டேட்கள்

BYD eMAX 7 Side

BYD இமேக்ஸ் 7 ஆனது ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் e6 எம்பிவி போன்ற பாடி ஷேப் மற்றும் சில்ஹவுட்டை கொண்டுள்ளது. BYD ஆனது இதன் வடிவமைப்பில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இது உலகளவில் விற்பனை செய்யப்படும் M6 -க்கு ஏற்ப இருக்கும். இது ஒரு புதிதாக ஒரு ஜோடி LED ஹெட்லைட்கள் மற்றும் BYD அட்டோ 3 -லிருந்து பெறப்பட்ட புதிய வடிவமைப்பிலான கிரில் ஆகியவை இருக்கலாம். புதிய வடிவிலான அலாய் வீல்கள், பம்பர்கள் மற்றும் LED டெயில் லைட் செட்டப் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேபின் மற்றும் வசதிகள்

இந்தியா-ஸ்பெக் மாடல் 6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வரும் என்று BYD இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் இது BYD M6 -ன் கேபினிலிருந்து எலமென்ட்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச-ஸ்பெக் இமேக்ஸ் 7 ஆனது டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் மேம்படுத்தப்பட்ட டாஷ்போர்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது டாஷ்போர்டில் புதிய பொருட்களையும் கொண்டுள்ளது. ஒரு அப்டேட்டட் சென்டர் கன்சோல் மற்றும் புதிய டிரைவ் மோட் செலக்டர் கொடுக்கப்படலாம்.

BYD eMAX 7 interior

BYD ஆனது இந்தியா-ஸ்பெக் இமேக்ஸ் 7 காரை ஒரு பெரிய 12.8-இன்ச் ரொட்டேட்டபிள் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் M6 -லிருந்து வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் உள்ளிட்ட லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வரலாம்.

மேலும் படிக்க: 2024 பண்டிகை காலத்துக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ள ஸ்பெஷல் எடிஷன் பதிப்பு கார்கள்

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் விவரங்கள்

இமேக்ஸ் 7 ஆனது உலகளவில் 55.4 kWh பேக் மற்றும் பெரிய 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக்குகளின் ஆப்ஷன் உடன் வருகிறது. முந்தையது 163 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்தாலும், பெரிய யூனிட் 204 PS மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. BYD இமேக்ஸ் 7 ஆனது NEDC (புதிய ஐரோப்பிய டிரைவிங் சைக்கிள்) 530 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை பெறுகிறது மற்றும் வெஹிகிள் டூ லோடிங் (V2L) ஃபங்ஷன் உடன் வருகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

BYD eMAX 7 rear

BYD இமேக்ஸ் 7 விலை e6 காரை விட ரூ. 29.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு இந்தியாவில் நேரடி போட்டியாளர்களாக எந்த கார்களும் இல்லை. ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு எலக்ட்ரிக் எம்பிவி ஆப்ஷனாக இருக்கும்.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on BYD emax 7

explore மேலும் on பிஒய்டி emax 7

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
×
We need your சிட்டி to customize your experience