இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது BYD eMAX 7
modified on அக்டோபர் 08, 2024 07:04 pm by ansh for பிஒய்டி emax 7
- 61 Views
- ஒரு கருத்தை எழுதுக
55.4 kWh மற்றும் 71.8 kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வருகிறது. இது 530 கி.மீ வரை NEDC கிளைம்டு ரேஞ்சை கொடுக்கும்.
-
BYD eMAX 7 -ன் விலை ரூ. 26.90 லட்சம் முதல் ரூ. 29.90 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
பிரீமியம் மற்றும் சுப்பீரியர் என்ற 2 வேரியன்ட்களில் கிடைக்கிறது.
-
12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை உள்ளன.
-
6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட அமைப்பில் இந்த கார் கிடைக்கும்.
இந்தியாவில் இமேக்ஸ் பிஒய்டி 7 கார் ரூ.26.90 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பிஒய்டி e6 எலக்ட்ரிக் எம்பிவியின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பாகும். அப்டேட்டட் பதிப்பு மிகவும் நவீன வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. இந்த MPV -க்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன. BYD eMAX 7 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே:
விலை
அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் விலை |
|
பிரீமியம் 6 சீட்டர் |
ரூ.26.90 லட்சம் |
பிரீமியம் 7 சீட்டர் |
ரூ.27.90 லட்சம் |
சுப்பீரியர் 6 சீட்டர் |
ரூ.29.30 லட்சம் |
சுப்பீரியர் 7 சீட்டர் |
ரூ.29.90 லட்சம் |
ஒரே வேரியன்ட்டில் கிடைத்த e6 உடன் ஒப்பிடும்போது eMAX 7 இரண்டு டிரிம்களில் கிடைக்கும். மேலும் ஆரம்ப விலை ரூ.2.25 லட்சம் குறைவாக உள்ளது.
வடிவமைப்பு
eMAX 7 -ன் முன்பக்கம் புதுப்பிக்கப்பட்ட நேர்த்தியான LED ஹெட்லேம்ப்கள் மற்றும் அட்டோ 3 போன்ற கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்பின் உள் லைட் எலமென்ட்களுடன் பம்பரும் இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தோற்றமும் e6 போலவே உள்ளது. ஆனால் இது புதிய 10-ஸ்போக் 17-இன்ச் அலாய் வீல்கள் டூயல்-டோன் ஷேடில் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் இது கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப்புடன் இது வருகிறது. மேலும் பழைய e6 உடன் ஒப்பிடும்போது, eMAX 7 -ன் பின்புற முனையில் ஸ்லீக்கரான அகலம் கொண்ட குரோம் ஸ்ட்ரிப் மற்றும் ஸ்லீக்கரான பம்பர் உள்ளது.
குவார்ட்ஸ் ப்ளூ, காஸ்மோஸ் ப்ளூ, கிரிஸ்டல் ஒயிட் மற்றும் ஹார்பர் கிரே என இது 4 நிறங்களில் வழங்கப்படுகிறது:
மேலும் படிக்க: எனது புதிய ரெனால்ட் க்விட் -க்கு BH நம்பர் பிளேட்டை (பாரத் சீரிஸ்) பெறும்போது நான் எதிர்கொண்ட சவால்கள்
கேபின்
இது டூயல்-டோன் பிளாக் மற்றும் பிரவுன் கேபின் தீமுடன் வருகிறது. டாஷ்போர்டு ஆல் பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் அகலம் முழுமைக்கும் குரோம் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. BYD இந்த காரை 6- மற்றும் 7-சீட் அமைப்பில் வழங்குகிறது. மேலும் இருக்கைகள் பிரெளவுன் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் கவர் செய்யப்பட்டிருக்கும். டோர் பேடுகளில் சாஃப்ட் டச் லெதரெட் பேடிங்க் உள்ளது.
ஸ்டீயரிங் புதியது மற்றும் அதில் குரோம் இன்செர்ட்கள் உள்ளன. இந்த குரோம் ஆக்ஸென்ட்கள் ஏசி வென்ட்கள் மற்றும் டோர்களிலும் இடம்பெற்றுள்ளன. டோர்களில் ஆம்பியன்ட் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
12.8-இன்ச் ரொட்டேடிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம். , ஒரு எலக்ட்ரிக் டெயில்கேட் மற்றும் வெஹிகிள் -2-லோட் டெக்னாலஜி ஆகியவை உள்ளன. 6 வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் உள்ளது. அதே சமயம் கோ டிரைவர் சீட் 4 வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடியது.
பாதுகாப்புக்காக eMAX 7 ஆனது 6 ஏர்பேக்ஸ் (ஸ்டண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS), 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ) ஆகியவை உள்ளன. லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளும் உள்ளன.
மேலும் படிக்க: மாருதி இந்த பண்டிகைக் காலத்தில் அரீனா கார்களுக்கு ரூ.62,000 -க்கு மேல் தள்ளுபடி கிடைக்கும்.
பேட்டரி பேக் & ரேஞ்ச்
பேட்டரி பேக் |
55.4 kWh |
71.8 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் பவர் |
163 PS |
204 PS |
எலக்ட்ரிக் மோட்டார் டார்க் |
310 Nm |
310 Nm |
NEDC* - கிளைம்டு ரேஞ்ச் |
420 கி.மீ |
530 கி.மீ |
0-100 கி.மீ/மணி நேரம் |
10.1 வினாடிகள் |
8.6 வினாடிகள் |
* NEDC - புதிய ஐரோப்பியன் டிரைவிங் சைக்கிள்
இது 115 kW வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. சிறிய பேட்டரி பேக் DC 89 kW வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இரண்டு பேட்டரி பேக்குகளும் 7 kW வரை ஏசி சார்ஜிங்கை சப்போர்ட் செய்கின்றன.
போட்டியாளர்கள்
BYD eMAX 7 -க்கு இந்திய சந்தையில் நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஆனால் இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா போன்ற கார்களுக்கு ஆல் எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.