பிரேக்கிங் நியூஸ்: இந்தியாவுக்கு திரும்பி வருகிறதா ஃபோர்டு நிறுவனம் ?
published on செப் 16, 2024 06:59 pm by shreyash for போர்டு இண்டோவர்
- 69 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்டு தனது சென்னை உற்பத்தி ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பக் கடிதம் (LOI) மூலம் தமிழ்நாடு அரசுக்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும் உற்பத்தி செய்யும் கார்கள் ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆன்லைன் ஊகங்களுக்குப் பிறகு, ஃபோர்டு மோட்டார் சென்னையில் தனது உற்பத்தி ஆலையை மீண்டும் தொடங்குவதன் மூலம் இந்தியாவில் மீண்டும் வர முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த திட்டம் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நிறைந்த வாகனச் சந்தையில் குறைந்த விற்பனை மற்றும் நிதி இழப்புகள் காரணமாக ஃபோர்டு முன்னதாக 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்தியது. இருப்பினும், ஃபோர்டு நிறுவனம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அரசாங்கத்தின் 20 பிராண்டுகளுக்கான PLI ஊக்கத் திட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டபோது, ஃபோர்டு இந்தியாவிற்கு திரும்பி வரப்போகிறது என்ற ஊகங்கள் வேகமெடுத்தது. இப்போது, அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபோர்டு எவரெஸ்ட் இந்தியாவில் காணப்பட்டபோது உற்சாகம் பெருக்கெடுத்தது.
இந்தச் சந்தர்ப்பத்தில், "புதிய உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை செய்ய தமிழ்நாட்டில் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளதால், இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது", என்று ஃபோர்டு இன்டர்நேஷனல் மார்க்கெட்ஸ் குழுமத்தின் தலைவரான திரு. கே ஹர்ட் தெரிவித்தார்.
ஃபோர்டு உண்மையில் இந்தியாவில் கார்கள் விற்பனையை தொடங்கப்போகிறதா?
நீங்கள் ஃபோர்டு காரை வாங்குவதாக திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும். ஃபோர்டு, சென்னையில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பக் கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இது தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. M.K. ஸ்டாலின் மற்றும் ஃபோர்டு அதிகாரிகளுக்கிடையே நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் விரைவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள மாடல்கள் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு, ஃபோர்டு நிறுவனம் ஏற்றுமதியில் மட்டுமே கவனம் செலுத்தும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் விற்பனையை மீண்டும் தொடங்கும் எந்த திட்டத்தையும் ஃபோர்டு இன்னும் அறிவிக்கவில்லை.
இந்தியாவில் அதன் பணியாளர்களை அதிகரிக்கத் திட்டமிடுகிறது
ஃபோர்டு தற்போது சென்னையில் தனது உலகளாவிய செயல்பாடுகளுக்கு 12,000 பேரைப் பணியமர்த்தியுள்ளது, மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500 முதல் 3,000 பேரைப் பணியமர்த்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபோர்டுக்கு ஏற்கனவே குஜராத்தில் உள்ள சனந்த் நகரில் ஒரு இன்ஜின் உற்பத்தி ஆலை உள்ளது. மேலும், அது தொடர்ந்து செயல்படும்.
ஃபோர்டு முன்பு கூறியது என்ன?
2021 ஆம் ஆண்டில் ஃபோர்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தியபோது, மஸ்டாங் ஸ்போர்ட்ஸ் கூப், மஸ்டாங் மாட்-E எலக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ரேஞ்சர் பிக்அப் போன்ற மாடல்களை CBU (கம்ப்ளீட்லி பில்ட் யூனிட்) வழியில் இந்தியாவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தது. சமீபத்தில், புதிய தலைமுறை ஃபோர்டு எவரெஸ்ட் (எண்டேவர் எஸ்யூவி) மற்றும் ரேஞ்சர் பிக்அப் இந்தியக் கரைகளில் கண்டறியப்பட்டதால், ஃபோர்டு அவற்றை விரைவில் இங்கே கொண்டு வரலாம் என்று நம்புகிறோம்.
ஃபோர்டு இந்தியாவில் கார்களின் விற்பனையை மீண்டும் துவங்க வேண்டும்மென்று நீங்கள் விரும்புகின்றீர்களா? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பகுதியில் தெரியப்படுத்துங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful