ஃபோர்டு எகோஸ்போர்ட் எண்டேவர் ஃபோர்டு பாஸ் என்றழைக்கப்படும் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை விரைவில் பெறவுள்ளது
published on பிப்ரவரி 07, 2020 02:04 pm by rohit for போர்டு இண்டோவர் 2015-2020
- 30 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்டு பாஸ் மூலம் உங்கள் வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அதைத் தொலை தூரத்திலிருந்து இயக்கலாம், பூட்டலாம் / திறக்கலாம்
-
இந்த எண்டேவர் புதிய இணைய அணுகல் கார் தொழில்நுட்ப அம்சத்தைப் பெறுகின்ற முதல் ஃபோர்டு மாதிரியாக இருக்கும்.
-
இயந்திர தடுப்பான் மற்றும் இடத்தையும் கண்டறியும் அமைப்பு போன்ற பொதுவான சிறப்பம்சங்களை இந்த ஃபோர்டு பாஸ் பெற்றுள்ளது.
-
தொலைதூர இயந்திர இயக்கி மற்றும் குளிர்சாதன இயக்கி (காரின் உட்புறத்தை முன்பே குளிரூட்டும் அமைப்பு) முதலிய அம்சங்களையும் பெற்றுள்ளது.
-
இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் வருகிற பிற கார்களில் க்யா செல்டோஸ், ஹூண்டாய் வென்யூ மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவை அடங்கும்.
-
ஃபிகோ, அஸ்பயர் மற்றும் ஃப்ரீஸ்டைல் போன்ற சிறிய கார்களில் இவை கிடைக்க வாய்ப்பில்லை.
புதிய 2.0-லிட்டர் டர்போ-டீசல் இயந்திரத்துடன் கூடிய பிஎஸ்6 இணக்கமான எண்டேவர் மார்ச்சில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . புதுப்பிப்புடன் கூடிய இந்த எஸ்யூவி ‘ஃபோர்டு பாஸ்’ என்றழைக்கப்படும் ஃபோர்டின் புதிய இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும். இது ஃபோர்டு எகோஸ்போர்ட்டையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஃபோர்டானது இந்த இரு எஸ்யூவிக்களின் அனைத்து வகைகளிலும் நிலையான அதன் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு இசிம் அமைப்பையும் வழங்க வாய்ப்புள்ளது, இந்த அமைப்பு ஃபோர்டு பாஸ் ஆப் வழியாக வாகனங்களைத் தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்த உரிமையாளர்களை அனுமதிக்கும். இதன் மூலம், உரிமையாளர்கள் கீழே குறிப்பிடப்பட்ட பல்வேறு இயக்கங்களை மேற்கொள்ளலாம்:
-
உங்கள் வாகனத்தைக் கண்டுபிடி - இந்த அமைப்பு உங்கள் கார் நிறுத்தப்பட்டுள்ள இடத்தை கண்டறிய உதவுகிறது.
-
நாட்காட்டியுடன் கூடிய தொலைதூர இயக்கி – எந்நாளிலும், எந்நேரத்திலும் தொலைதூர இயக்கியை அமைக்கலாம்.
-
பூட்டு மற்றும் திற
-
வாகன நிலையைச் சரிபார் – இந்த அமைப்பு எரிபொருளின் அளவு, வரம்பு மற்றும் அடுத்த சேவை குறித்த விவரங்கள் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
-
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு செயலி சேமிப்பகங்களிலும் கிடைக்கிறது.
இது மட்டுமல்லாது, இது தொலைதூர குளிர்சாதன இயக்கி அமைப்பையும் (காரின் உட்புறத்தை முன்பே குளிரூட்டும் அமைப்பு) பெற்றுள்ளது, இது பொதுவாகத் தானியங்கி வகைகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஃபோர்டு ஃபிகோ மற்றும் அஸ்பயர் ஆகிய மாதிரிகளில் தானியங்கி வகைகள் நிறுத்தப்பட்டதால், அவைகளில் இந்த அமைப்பு காணப்படுவதில்லை.
ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவி, க்யா செல்டோஸ், மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகியவை இந்தியாவில் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்துடன் வரும் மற்ற கார்களாகும். வென்யூ, செல்டோஸ் மற்றும் நெக்ஸான் இவி ஆகிய கார்கள் எஸ்ஓஎஸ் எச்சரிக்கை, இயந்திர தடுப்பான் மற்றும் இடத்தை கண்டறியும் அமைப்பு போன்ற கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ளது.
மீண்டும் விற்பனைக்கு வரும் பிஎஸ்6 எண்டேவர், 10-வேகத் தானியங்கி பொருத்தப்பட்ட 2.0-லிட்டர் டர்போ-டீசல் இயந்திரத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற அமைப்பைப் பெறும் கார் இது மட்டும் தான். இது மஹிந்திரா அல்ட்டுராஸ் ஜி4, டொயோட்டோ ஃபார்ட்டியூனர், ஸ்கோடா கோடியா மற்றும் இசுஸூ எம்யு-எக்ஸ் போன்றவைகளுடனான தனது போட்டியை மீண்டும் தொடரும்.
மேலும் படிக்க : எண்டேவர் டீசல்
- Renew Ford Endeavour 2015-2020 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful