• English
 • Login / Register

இந்தியாவில் BMW X3 M Sport Shadow எடிஷன், ரூ.74.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது

published on மே 16, 2024 08:41 pm by samarth for பிஎன்டபில்யூ எக்ஸ்3

 • 41 Views
 • ஒரு கருத்தை எழுதுக

ஷேடோ எடிஷனில் காஸ்மெட்டிக் டீடெயில்கள் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ள்ளன. இது ஸ்டாண்டர்ட் வேரியன்ட்டை விட 2.40 லட்ச ரூபாய் கூடுதலாக இருக்கின்றது.

BMW X3 M Sport Shadow Edition

 • புதிய ஷேடோ பதிப்பு X3 xDrive20d M ஸ்போர்ட் வேரியன்ட்டை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.

 • புரூக்ளின் கிரே மற்றும் கார்பன் பிளாக் ஆகிய புதிய வண்ணங்களில் கிடைக்கிறது 

 • பிளாக் அவுட் கிரில் மற்றும் பிஎம்டபிள்யூ லேசர் லைட் ஹெட்லைட்கள் ஸ்போர்ட்டியர் லுக் கிடைக்கின்றது.

 • புதிய 19-இன்ச் M-ஸ்பெக் அலாய் வீல்கள் மற்றும் அனைத்து டூயல்-டோன் லெதர் அப்ஹோல்ஸ்டரியும் கிடைக்கிறது.

 • இன்ஜினில் எந்த எந்த மாற்றமும் இல்லை. 2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும் (190 PS/ 400 Nm).

BMW X3 ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பாளரின் ஷேடோ எடிஷன் ட்ரீட்மென்ட்டை பெற்றுள்ள சமீபத்திய மாடல். இது டாப்-ஸ்பெக் டீசல்-பவர்டு வேரியன்டை அடிப்படையாகக் கொண்டது மற்றும் X3 xDrive20d M ஸ்போர்ட் ஷேடோ பதிப்பு ரூ. 74.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வருகின்றது. வழக்கமான X3 டீசல் M ஸ்போர்ட் வேரியன்ட்டை விட ரூ.2.40 லட்சத்துக்கு கூடுதலாக  என்ன கிடைக்கும் என்று பார்ப்போம்.

வெளிப்புறம்

BMW X3 M Sport Shadow Edition

பெயர் குறிப்பிடுவது போல ஷேடோ எடிஷனில் பிஎம்டபிள்யூவின் சிக்னேச்சர் கிட்னி வடிவ கிரில்லில் கிளாஸி பிளாக் ட்ரீட்மென்ட்டை உட்பட வெளிப்புறத்தில் சில பிளாக் அவுட் எலமென்ட்கள்  உள்ளன. இது ஹை-கிளாஸ் பிளாக் விண்டோ கிராபிக்ஸ், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் பின்புற டெயில்லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த புதிய X3 வேரியன்ட் BMW -வின் லேசர் லைட் ஹெட்லைட்களுடன் புளூ கலர் ஆக்ஸன்ட்களுடன் வருகிறது.

BMW X3 M Sport Shadow Edition

ஷேடோ எடிஷன் 19-இன்ச் M அலாய் வீல்களுடன் சில்வர் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. BMW X3 -ன் இந்த ஸ்பெஷல் எடிஷன் 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: புரூக்ளின் கிரே மற்றும் கார்பன் பிளாக்.

மேலும் பார்க்க: BMW 3 Series Gran Limousine M ஸ்போர்ட் புரோ எடிஷன் அறிமுகம், விலை ரூ.62.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

உட்புறங்கள்

BMW X3 M Sport Shadow Edition Interiors

ஷேடோ எடிஷனுக்கான பிளாக்-ஸ்பெக் ட்ரீட்மென்ட்டையானது கேபினிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பிளாக் தீம் மற்றும் லெதர் வெர்னாஸ்கா அப்ஹோல்ஸ்டரியை பெறுகிறது.

BMW X3 M ஸ்போர்ட்டுடன் வழங்கப்படும் மற்ற வசதிகளில் பனோரமிக் சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, 3-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பின்புற சன்பிளைண்ட்ஸ், ஆம்பியன்ட் லைட்ஸ், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் செட்டஒ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், ABS, டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் 360-வியூ கேமராவுடன் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் ஆகியவை உள்ளன.

காரிலுள்ள ஆக்ஸசரீஸ்கள்

காரிலுள்ள ஆக்ஸசரீஸ்கள்

 

பிளாக் எடிஷன் தொகுப்பு

கார்பன் எடிஷன் தொகுப்பு

 

M பெர்ஃபாமன்ஸ் ரியர் ஸ்பாய்லர்

கார்பன் பைபரில் கொடுக்கப்பட்டுள்ள கியர் லீவர்

 

M சைடு ஸ்ட்ரிப் இன் பிளாக்

கார்பன் பைபரில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்கஃப் பிளேட்ஸ் 

 

M சைடு லோகோ இன் கிளாஸி பிளாக்

   

இவை புதிய BMW X3 M ஸ்போர்ட் ஷேடு பதிப்பில் கிடைக்கும் கூடுதலான காஸ்மெட்டிக் அப்டேட் ஆகும்.

பவர்டிரெய்ன்

ஹூட்டின் கீழ் எந்த மாற்றமும் இல்லை. X3 M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் அதே 2-லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 190 PS ஆற்றலையும் 400 Nm டார்க்கையும் உருவாக்குகிறது, இது 8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. xDrive ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த இந்தியா-ஸ்பெக் டீசல்-இன்ஜின் X3 ஆனது 0 முதல் 100 கி.மீ வரை தூரத்தை வெறும் 7.9 வினாடிகளில் எட்டும். மேலும் அதிகமாக 213 கிமீ/மணி வேகத்தில் செல்லக்கூடியது.

போட்டியாளர்கள்

BMW X3 காரின் டீசல் வேரியன்ட்கள் ஆடி Q5 மற்றும் Mercedes-Benz GLC ஆகிய கார்களுடன் போட்டியிடுகின்றன. மேலும் ஒரு ஸ்போர்ட்டி X3 M40i வேரியன்ட் ரூ. 87.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை -யில் உள்ளது.

மேலும் படிக்க: BMW X3 ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது பிஎன்டபில்யூ எக்ஸ்3

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

 • டிரெண்டிங்கில் செய்திகள்
 • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience