பிஎம்டபுள்யூ குறிப்பிட்ட சில டீலர்ஷிப் மையங்களில் 360 டிகிரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
modified on செப் 01, 2015 12:37 pm by nabeel
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது. இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் 360 டிகிரி என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். வாடிக்கையாளர் தனக்குத் ஏற்ற சரியான பிஎம்டபுள்யூ வாகனத்தை தேர்ந்தெடுக்க இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டமானது சரியான மாடல், நிதி ஒப்பந்ததிற்கான காலம் மற்றும் உங்களது ஒரு வருடத்திய மைலேஜ் தேவைகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அதற்கேற்ப சரியான காரை தேர்ந்தெடுக்க உதவுகிறது. ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வாடிக்கையாளர் தன் காரை வாங்கிய அதே டீலரிடம் கொடுத்து விடவோ அல்லது முழு தொகையையும் செலுத்தி காரை வாங்கிக்கொள்ளவோ முடியும். அப்படி இல்லையேல் மீண்டும் ஒரு முறை ஒப்பந்தம் செய்து கொள்ளவோ அல்லது அதைவிட மேம்படுத்தப்பட்ட வேறு மாடல் வாகனத்துக்காக இதை மாற்றி கொள்ளவோ இந்த திட்டம் மூலம் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. வேறு பிஎம்டபுள்யூ வாகனத்திற்கு இந்த வாகனத்தை மாற்றிக்கொள்ள முடிவு செய்யும் பட்சத்தில் அந்த ஒப்பந்த வாகனத்தின் மதிப்பு திரும்ப வாங்கிக்கொள்ள குறிக்கப்பட்ட உத்தரவாத தொகையை விட அதிகமாக இருத்தல் இந்த திட்டத்தில் அவசியமாகிறது. இந்த திட்டம் வெகு நேர்த்தியாக வருடாந்திர மைலேஜ் தேவையை பொறுத்து உருவாக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்கள் ஓட்டிய கிலோமீட்டருக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது. தற்போது இந்த திட்டம் பிஎம்டபுள்யூ 3 சீரீஸ், 5-சீரிஸ் மற்றும் X3 வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட சில டீலர்ஷிப் மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகளைத் தவிர பிஎம்டபுள்யூ நிறுவனம் குறைந்த முன்பணம், எக்ஸ்சேன்ஜ் போனஸ், மூன்று வருட இலவச சர்வீஸ் மற்றும் மெய்ண்டனன்ஸ், நிதி ஒப்பந்தத்தின் முடிவில் கண்டிப்பாக திரும்ப வாகனத்தை குறித்த தொகைக்கு வாங்கி கொள்வதாகவோ மீண்டும் ஒப்பந்தத்தை புதிப்பித்து கொள்வதாகவோ வேறு புதிய மாடலுக்காக இந்த மாடலை மாற்றிக்கொள்வதாகவோ பிஎம்டபுள்யூ நிறுவனம் இந்த திட்டம் மூலம் உறுதியளிக்கிறது.
இந்த திட்டம் பற்றி பிஎம்டபுள்யூ இந்தியா லிமிடட் தலைவர் பிலிப் வான் சாஹர், “
360 டிகிரி திட்டத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு BMW வாகனத்தை வாங்கிய பின் எதிர் காலத்தில் கார் எத்தகைய விலைக்கு விற்குமோ அல்லது காரின் மதிப்பு கூடுமோ? குறையுமோ? போன்ற எந்த ஒரு கவலையும் இருக்காது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மன நிம்மதியை தரும் வகையில் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது " என்று கூறினார்.
ஜெய்பூர்: 360 டிகிரி திட்டம் நடைமுறையில் உள்ள டீலர்ஷிப் பட்டியல்
இடம் டீலர்ஷிப்
டெல்லி தாய்ச்சி மோட்டாரீன்
மும்பை இன்பினிட்டி மோட்டார்ஸ் மற்றும் நவ்னீத் மோட்டார்ஸ்
சென்னை கேயுஎன் எக்ஸ்குளூசிவ்
ஹைதராபாத் கேயுஎன் எக்ஸ்குளூசிவ்
பெங்களுரு நவ்னீத் மோட்டார்ஸ்
குர்காவுன் பேர்ட் ஆட்டோமோடிவ்
அஹமதாபாத் பர்சோலி மோட்டார்ஸ்
ஜெய்பூர் சங்கி கிளாசிக்
ராய்பூர் முனிச் மோட்டார்ஸ்
நாக்பூர் முனிச் மோட்டார்ஸ்