BMW M4 போட்டியை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது
published on பிப்ரவரி 09, 2016 12:17 pm by manish for பிஎன்டபில்யூ எம் சீரிஸ்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான BMW நிறுவனத்தினர் தங்களது மிக பிரபலமான M4 கூப் கார்களை நடைபெற்று வரும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக புகழ் பெற்ற ஸ்போர்ட்ஸ் செடான் M3 கார்களின் இரண்டு கதவுகள் கொண்ட வெர்ஷன் தான் இந்த M4 கூப் பெர்பார்மன்ஸ் கார்கள். இந்திய சந்தையில் ரூ. 1.21 கோடிக்கு (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் அதீத வசதி படைத்த மேல்தட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கிறது. BMW நிறுவனத்தின் ஸ்டேண்டர்ட் 3 - சீரிஸ் கார்கள் ரூ.1.19 கோடிகளுக்கு கிடைக்கும் நிலையில் , இந்த அசுரத்தனமான 2 கதவு கொண்ட பெர்பார்மன்ஸ் காரின் விலை 3 - சீரிஸ் கார்களை விட சில லட்சங்களே கூடுதல் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த கார் 3.0லிட்டர் 24V M பவர் V6 பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்பட்டு 431 பிஎச்பி அளவு சக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. . இந்த கார்களின் முக்கிய போட்டியாக கருதப்படும் ஆடி நிறுவனத்தின் RS5 கார்களை இந்த கார்களை விட கூடுதல் சக்தியை (444 பி எச்பி ) சக்தியை வெளியிடுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. . அதே சமயத்தில் இந்த BMW M4 கார்கள் , ஆடி RS5 கார்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான அளவே சக்தியை உற்பத்தி செய்தாலும் ஆடி கார்களை விட குறைவான எடையையே கொண்டுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இரண்டு கார்களின் சக்தி - எடையின் விகிதத்தை ஒப்பிட்டு பார்த்தாலும் கூட, ஆடியின் (0.271 ) சதவிகிதத்தை விட BMW வின் (0.24 ) சதவிகிதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. . அதுமட்டுமின்றி ஆடி RS5 கார்களின் விலை BMW M4 வாகனங்களை விட ரூ. 10 லட்சம் குறைவாகும். எப்படி இருந்தாலும் , ஸ்போர்ட்ஸ் கூப் என்று வரும் போது , இந்த புள்ளி விவரங்களை விட எத்தகைய உணர்வை இந்த வாகனங்கள் தருகின்றன என்று பார்ப்பதே முக்கியம். இந்த M - சீரிஸ் கார்கள் பெருமையுடன் சிகப்பு வண்ண ரேசிங் ஸ்ட்ரைப்ஸ்களை( கோடுகள் ) தன மீது படர விட்டு தனித்துவமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது..
0 out of 0 found this helpful