BMW  M6 கிரான் கூபே கார் இந்தியாவில் 1.71 கோடிக்கு அறிமுகம் (படங்களுடன்)

published on அக்டோபர் 05, 2015 06:04 pm by nabeel for பிஎன்டபில்யூ எம் சீரிஸ்

 • 13 பார்வைகள்
 • ஒரு கருத்தை எழுதுக

BMW M6 Gran Coupe

BMW நிறுவனம், தனது சமீபத்திய வெளியீடான M6 கிரான் கூபே காரை இந்தியாவில் 1.71 கோடி என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், மும்பையில் உள்ள BMW –வின் முதல் M ஸ்டுடியோவான இன்பினிட்டி கார்ஸ் –இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்பினிட்டி கார்ஸ் என்பது, BMW –வின் செயல்திறன் மிகுந்த M ரக கார்களை ரீடைல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரத்தியேகமான BMW ஷோ ரூமாகும். BMW - வின் M ரக கார்களின் வரிசையில், அடுத்ததாக X5 M மற்றும் X6 M ஆகிய கார்கள், இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய M6 கார் முழுமையாக முற்றுபெற்ற விதத்தில் உள்ள CBU   ரகத்தில் சேர்ந்ததாக இருப்பதால், BMW -வின் M ஸ்டுடியோஸ் மூலம், நாடு முழுவதும் சந்தைப்படுத்தப்படும்.

BMW M6 Gran Coupe

மிகவும் சிறந்த வகையில் தயாரிக்கப்பட்ட, 560 குதிரைத் திறனில் ஓடக் கூடிய BMW –வின் இந்த கம்பீரமான ஃபிளாக் ஷிப் காரில், 4.4 லிட்டர் M இரட்டை டர்போ 8 சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 552 bhp  குதிரைத் திறனும், 680 Nm டார்க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த புதிய கார், 7 வேக இரட்டை கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் மூலம், பின்புற சக்கரங்களுக்கு செயல்திறனை அளிக்கிறது. இத்தகைய அபாரமான செயல்திறன் மூலம், லாஞ்ச்  கண்ட்ரோல் பொருத்தப்பட்ட இந்த பிம்மர், கிளம்பிய 4.2 வினாடிகளுக்குள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கிறது. மேலும், மணிக்கு அதிகப்படியாக 250 கிலோ மீட்டர் வேகம் வரை இந்த காரில் செல்ல முடியும். இவை தவிர, சிறந்த எரிபொருள் சிக்கனமாக லிட்டருக்கு 10.1 கிலோ மீட்டர் வரை தருகிறது. மற்றும், சுற்றுச் சூழலை பாதிக்காமல், கிலோ மீட்டருக்கு 232 கிராம் கார்பன்டைஆக்ஸைடை மட்டுமே வெளியேற்றுகிறது. மேலும், இந்த காரின் ஓட்டு சக்கரத்தில் (ஸ்டியரிங் வீல்) இரண்டு M ட்ரைவ் பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் எளிதாக பந்தைய காரின் அமைப்பு அல்லது சொகுசான வசதிகளின் அமைப்பு என்று இரண்டு விதமான அமைப்புகளை, பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி வைத்துக் கொள்வதற்காக, இந்த பட்டன்கள் வைக்கப்பட்டுள்ளன.

BMW M6 Gran Coupe

முதன் முறையாக 2014 –ஆம் ஆண்டில் M6 கிரான் கூபே அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, அதன் உட்புறம் மற்றும் வெளிபுறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சந்தையில் உலா வருகின்றது. வெளிப்புறத்தில் பார்க்கும் போது, BMW –வின் பிரத்தியேகமான தடிமனான இரட்டை பார்களுடன் கூடிய கிட்னி வடிவத்தில் உள்ள கம்பி வலையில் (கிரில்) M சின்னம் பொரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில், புதிய மாற்றி அமைக்கக் கூடிய LED  பல்புகள் பொருத்தப்பட்ட முகப்பு விளக்குகள்; முன்புறம் பொருத்தப்பட்ட பெரிய காற்று (ஏர் இன்டேக்) இழுப்பான்; பின்புற ஏப்ரனில் ஒருங்கிணைக்கப்பட்ட புகை போக்கிகள்; கார்பன் ஃபைபர் மூலம் தயாரிக்கப்பட்ட மேல் விதானம்; 4 புகை போக்கிகள்; 20 அங்குல அலாய் சக்கரங்கள்; சிறிய மாற்றங்களுடன் வரும் பின்புற விளக்குகள்; மற்றும் பூட் மூடியில் உள்ள M சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டு, BMW வின் புதிய M6  மாடல் புதுப் பொலிவுடன் சந்தைக்கு வருகிறது. இதன் உட்புறத்தில் பார்க்கும் போது, BMW – வின் கம்பீரமான M வரிசை காருக்குள் நாம் இருக்கிறோம் என்பதற்கு சாட்சியாக, உபகரண தொகுப்பு (இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர்), மையத்தில் உள்ள இணைமையம் (சென்ட்ரல் கன்சொல்) மற்றும் சாளர அடிக்கடையிலும் (விண்டோ சில்)  பிரத்தியேகமான M சின்னம் பொரிக்கப்பட்டு அம்சமாக இருக்கின்றது.

BMW M6 Gran Coupe

மேலும், இந்த காரில் பந்தைய கார்களில் உள்ளதைப் போல M  ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளதால், ஒரு பந்தைய காரில் செல்லும் உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. இந்த கார் 9 விதமான பளபளப்பான மேட்டாலிக் வண்ணத் தெரிவுகளில் வருகிறது. அதாவது, அல்பைன் வெள்ளை, கருப்பு ஸஃபயர், சில்வர் ஸ்டோன், ஸ்பேஸ் க்ரே, ஜடொபா, சான் மரீனோ நீலம், சாகிர் ஆரஞ்சு, சிங்கப்பூர் க்ரே மற்றும் இம்பீரியல் புளு ப்ரில்லியன்ட் எஃபக்ட் ஆகிய வண்ணகளில் ஒன்றை, தங்களுக்கேற்றவாறு வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்திய BMW குழுமத்தின் தலைவரான திரு. ஃபிலிப் வொன் சக்ர், இந்த புதிய அறிமுகத்தை பற்றி குறிப்பிடுகையில், “மனதைக் கவரும் செயல் திறன், நவீன தொழில்நுட்பம் மற்றும் உண்மையான பந்தைய காரில் செல்வதைப் போன்ற உணர்வு, ஆகிய அனைத்தையும் ஒரு எழுத்தில் சொல்ல வேண்டும் என்றால், அதுவே M.. அனைத்து விதமான M ரக கார்களைப் போலவே BMW –வின் கிரான் கூபே காரும், செயல்திறன், இயக்கவியல், வசதி மற்றும் சொகுசு போன்ற அனைத்து சிறப்பம்ஸங்களின் சரியான கூட்டுக் கலவையாக செயல்பட்டு, ஒரு புதிய தரத்தை வாகன உலகில் நிர்ணயித்துள்ளது. தனித்துவம் மற்றும் பந்தைய கார்களின் மரபணுவுடன் கூடிய சிறந்த கலவையாக புதிய BMW M6 கிரான் கூபே கார் செயல்பட்டு, BMW நிறுவனத்தின் வெற்றி கதையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. BMW  நிறுவனத்தின் M GmbH ரக கார்கள், செயல்திறன் மிக்க ஆடம்பர வகை கார்களில் உயர்ந்த மற்றும் தலைசிறந்தவை என்பதை, புதிய BMW M6 கிரான் கூபே கார் மீண்டும் நிரூபித்துள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது பிஎன்டபில்யூ M Series

Read Full News

trendingசேடன்-

 • லேட்டஸ்ட்
 • உபகமிங்
 • பாப்புலர்
 • டொயோட்டா belta
  டொயோட்டா belta
  Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: jul 2023
 • byd seal
  byd seal
  Rs.60 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: nov 2023
 • எம்ஜி rc-6
  எம்ஜி rc-6
  Rs.18 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: jul 2023
 • ஆடி ஏ3 2023
  ஆடி ஏ3 2023
  Rs.35 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: sep 2023
 • ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் iv
  ஸ்கோடா ஆக்டிவா ஆர்எஸ் iv
  Rs.40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
  அறிமுக எதிர்பார்ப்பு: sep 2023
×
We need your சிட்டி to customize your experience