பஜாஜ் RE60: இன்று அ றிமுகமாகிறது
பஜாஜ் qute க்காக செப் 25, 2015 03:29 pm அன்று konark ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: நாட்டின் முதல் குவாட்ரிசைக்கிளான RE60-யை பஜாஜ் நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இந்த வாகனத்தில் 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு, 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைந்து செயல்படுகிறது. 20 bhp ஆற்றலை வெளியிடும் இந்த வாகனம், லிட்டருக்கு சராசரியாக 35 கி.மீ மைலேஜ் வரை அளிக்கிறது. இந்த வாகனத்தை வாங்குவோர் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதன் சராசரி மைலேஜ் அமைந்துள்ளதால், இதை வாடகை வாகனமாகவும் (டெக்ஸி) பயன்படுத்தலாம்.
இந்த வாகனத்தில் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டுடன் எழுந்த பல பொது நல வழக்குகளை, இந்நிறுவனம் எதிர்கொண்ட பிறகு மிகவும் சிரமப்பட்டு இதை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் நீண்ட முயற்சிக்கு பிறகு, நகர்ப்புற வர்த்தக வாகன பிரிவு பட்டியலின் கீழ் அந்த வாகனத்தை கொண்டுவந்துள்ளது. 3 சக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு, இந்த வாகனத்தின் அறிமுகம் ஒரு கெட்ட செய்தியாக இருக்கும். ஏனெனில் RE60 எல்லா வகையிலும், அவற்றை விட சிறப்பாக தோற்றம் அளிக்கிறது. இதுவரை நிலைத்தன்மை குறைந்த மூன்று சக்கர வாகனங்களை நம்பி இருக்கும் பயணிகளுக்கு, RE60 நிச்சயம் அதிக பாதுகாப்பை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்திற்கு ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் தனியார் பதிப்பு குறித்த தகவல்களையும், இன்றைய அறிமுகத்தின் போது அந்நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தாலும், பின்னர் அறிமுகம் செய்யப்பட உள்ள டாடா மேஜிக்கை நினைத்து சற்று பயப்படுகின்றனர். அதன்மூலம், இந்த வாகனம் கடும் போட்டியை சந்திக்க நேரிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.