அறிமுகம் செய்ய தயாராக உள்ள பஜாஜ் RE60 குவாட்ரிசைக்கிள் உளவுப்படங்களில் சிக்கியது
published on செப் 23, 2015 04:31 pm by manish
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: அறிமுகத்திற்கு தயாராக உள்ள RE60 குவாட்ரிசைக்கிள், புனே நகரில் உள்ள அந்நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வெளியே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட போது, உளவுப்படத்தில் சிக்கியது. RE60 குவாட்ரிசைக்கிள் கொள்முதல் செய்வதற்கான அனுமதியை பெற்றதன் மூலம், இந்திய வாகன தயாரிப்பாளரான பஜாஜ் நிறுவனம் சந்தித்த சட்டம் தொடர்பான தடைகள் நீங்கி, இந்தியாவில் இந்த வாகனத்தை அறிமுகம் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாகனம் வரும் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இந்தியாவில் முதல் முதலாக அறிமுகம் செய்யப்படும் குவாட்ரிசைக்கிளான RE60, 216 cc சிங்கிள்-சிலிண்டர் DTS-i பெட்ரோல் என்ஜினை கொண்டு செயல்படும். இந்த என்ஜின் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குவாட்ரிசைக்கிள் மூலம் சுமார் 20bhp ஆற்றல் அளிக்க முடியும். இது ஒரு பல்சர் NS மற்றும் RS மோட்டார்சைக்கிள் அளிக்கும் ஆற்றலுக்கு அநேகமாக நிகரானதாக இருக்கும். இதில் ஆற்றல் மற்றும் எடைக்கு இடையிலான விகிதம் மிகவும் குறைவாக இருப்பதால், எரிபொருள் சிக்கனம் கூட குறைவாக, லிட்டருக்கு சுமார் 35 கி.மீ மைலேஜ் மட்டுமே அளிக்கிறது.
பஜாஜ் நிறுவனத்தால் ஒரு புதிய வாகன வகையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள RE60-க்கு, இந்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. RE60 குவாட்ரிசைக்கிளின் விற்பனைக்கு, நகர்ப்புற வர்த்தக வாகன வகையின் கீழ் அனுமதி கிடைத்துள்ளது. இந்திய சாலையில் கால்பதிக்க, நாடெங்கிலும் உள்ள பல நீதிமன்றங்களில் தொடரப்பட்ட பல பொது நல வழக்குகளுடன் (பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன்ஸ் – PIL) உடன் RE60 போராட வேண்டியிருந்தது. இந்த பொது நல வழக்குகளில், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் RE60 வாகனத்திற்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வாகனத்தினால் ஆட்டோ ரிக்ஷா டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியிருந்தது. ஏனெனில் RE60, ஒரு நான்கு சக்கர வாகனம் என்பதால், அவர்களின் லைசென்ஸ்களை தரம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் எங்களை பொறுத்த வரை, நிலைத்தன்மை குறைவான மூன்று சக்கரங்களை கொண்ட ஒரு ஆட்டோ ரிக்ஷாவோடு ஒப்பிட்டால், RE60-வில் பயணிகளுக்கு பாதுகாப்பும், உறைவிடமும் அதிகமாகவே கிடைக்கும் என்று நம்புகிறோம். RE60-விற்கு ஏறத்தாழ ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RE60-யின் வியாபார ரீதியான தனிப்பட்ட பதிப்பு ஒன்றை பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையை குறித்து, வாகன அறிமுக தினத்தன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful