அல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது

published on பிப்ரவரி 18, 2016 06:05 pm by manish for ஆடி ஏ4 2015-2020

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

பல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் குவாட்ரோ சிஸ்டத்தின் ஒரு மேம்பட்ட பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் மூலம் அதிகம் தேவைப்படும் AWD சிஸ்டம் மற்றும் நிரந்தரமான 4X4 கட்டமைப்பு ஆகியவற்றின் இடையே ஒரு முழுமையான சமநிலை உண்டாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆடி குவாட்ரோ உடன் கூடிய அல்ட்ரா டெக்னாலஜி என்ற புனைப்பெயரை கொண்ட இந்த அமைப்பு, சென்ஸர்களின் ஒரு வரிசையை கொண்டுள்ளது. இந்த சென்ஸர்கள் 4 வீல்களிலும் பொருத்தப்பட்டு, தகவல்களை ஒரு பிராஸசருக்கு அளிக்கின்றன. அது தகவல்களை மொத்தமாக தொகுத்து 4 வீல்களுக்கும் தகுந்த முறையில் ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும். எடுத்துக்காட்டாக, இந்த காரை FWD ஆக இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கட்டமைக்க, காரின் எடை குறைவாக இருப்பதாக இது உணர்ந்து, காரின் இழுவை இழக்க துவங்கினால், உடனே இந்த அமைப்பு பின்புற ஆக்ஸிலை பணியில் ஈடுபடுத்த துவங்கிவிடும். இந்த சென்ஸர்களின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களில், டிரைவரின் ஓட்டும் திறன், ஸ்டைல் மற்றும் சாலையின் நிலவரம் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த அல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய ஆடி குவாட்ரோவின் மூலம் காரின் ஒட்டுமொத்த எரிபொருள் சிக்கனம் அதிகரிக்கிறது. ஒரு குவாட்ரோ பொருத்தப்பட்ட ஆடியின் எரிபொருள் பயன்பாட்டில் 0.3 லிட்டர்/100 கி.மீ குறைவு ஏற்படும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த கண்டுபிடிப்பை குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகம் கூறுகையில், “செயல்திறனுக்கு உகந்ததாக இருந்தாலும், இழுவை மற்றும் டிரைவிங் டைனாமிக்ஸ் போன்ற நிரந்தர அமைப்புகளில் கவனிக்கத்தக்க எந்த வேறுபாடுகளும் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் காரின் ஒட்டுமொத்த கையாளும் திறன்களும் மேம்படுவது மட்டுமின்றி, அதன் செயல்திறனும் மேம்படுகிறது. மேலும் ஆடி குவாட்ரோ உடன் கூடிய அல்ட்ரா தொழிற்நுட்பம் மூலம் காரின் மாசுப்படுத்தும் அளவு கணிசமான குறைந்து, காரின் ஃபுட்பிரின்ட் குறைக்க உதவுகிறது. ஆடியின் தாய் நிறுவனமான வோல்க்ஸ்வேகனின் ஒரு தந்திரமான சந்தர்ப்பத்தின் மூலம் டீசல்கேட் சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து, இது ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மேற்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட புத்திசாலித்தனமான நடவடிக்கை ஆகும்.

மேலும் வாசிக்க 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஆடி ஏ4 2015-2020

Read Full News
Used Cars Big Savings Banner

found ஏ car you want க்கு buy?

Save upto 40% on Used Cars
  • quality பயன்படுத்திய கார்கள்
  • affordable prices
  • trusted sellers
view used ஏ4 in புது டெல்லி

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience