A8 L செக்யூரிட்டியை ரூ.9.15 கோடியில், ஆடி அறிமுகம் செய்தது
published on பிப்ரவரி 05, 2016 05:25 pm by saad for ஆடி ஏ8 2014-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆட்டோ எக்ஸ்போவில், தனது A8 L செக்யூரிட்டி கவசம் அணிந்த (ஆர்மர்டு) வாகனத்தை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, கடந்தாண்டு (2015) இந்த காரை பிராங்க்பேர்ட் மோட்டார் ஷோவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இப்போது எக்ஸ்போவில் அமைக்கப்பட்டுள்ள ஆடியின் கூடாரத்தில் உள்ள ஆடி R8 ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் ஆடி ப்ரோலோக் கூபே தொழிற்நுட்பம் ஆகியவற்றுடன் கூட இந்த காரும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, பாதுகாப்பிற்கான எல்லா கட்டமைப்பு அம்சங்களை கொண்ட இந்த கார், தேவைப்படும் இந்தியா நுகர்வோரின் சிறப்பு வேண்டுகோளின் பேரில், ஜெர்மனியில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படும்.
இந்த புதிய ஆடி A8 L செக்யூரிட்டி என்பது A8 லிமவுஸ்சைன் சேடனின் ஒரு கவசம் அணிந்த பதிப்பாகும். ERV 2010 வழிகாட்டுதலுக்கு ஏற்ப அமைந்த VR9 நிலையிலான பாதுகாப்பு தரத்தை எட்டும் வண்ணம், உயர் வெடிமருந்துகளின் தாக்குதலில் நிலைநிற்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் VR7-ன் கடந்த தலைமுறையின் நிலைக்கும் மேலான ஒரு மேம்பாட்டை இதில் காண முடிகிறது. இதன்மூலம் M60 வகையை சேர்ந்த ஆயுதங்களிடம் இருந்து மட்டுமின்றி, லேசான மிஷன்கன் தாக்குதலில் இருந்து கூட பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் குண்டுவெடிப்பு முயற்சிகளில் சிறப்பாக நிலைநிற்கிறது. வலுவான கட்டமைப்பு மற்றும் கவசம் அணிந்த பாதுகாப்பு அளிக்கும் அதே நேரத்தில், வாகனத்தின் எடை அதிகரிக்கப்படவில்லை என்பது இதன் ஒரு ஆச்சரியமூட்டும் காரியம் ஆகும். வாகன சந்தையில் ஒத்த மதிப்பீடுகளை கொண்ட மற்ற கார்களுடன் ஒப்பிடும் போது, இதன் கட்டமைப்பில் அலுமினியம் உள்ளீடுகளின் பயன்பாடு மூலம் மற்ற கார்களை விட, இதை ஒரு எடைக் குறைவான காராக மாற்றி உள்ளது.
இதை தவிர, இந்த கவசம் அணிந்த ஆடம்பர சேடன் பிரிவில் ஆல்-வீல்-டிரைவ் கொண்ட ஒரே கார் இந்த A8 L செக்யூரிட்டி தான் என்பதோடு, குறிப்பாக பாதுகாப்பின் உயர்தர கட்டுபாடுகளை கொண்டிருக்கும் வகையில், இதன் சேஸிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
A8 L செக்யூரிட்டியின் தயாரிப்பில், ஜெர்மனியில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் உயர்-ரகசிய தொழிற்சாலையான நெகார்சுலம் உடன் கூட்டுறவை பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில், இப்பிரிவில் உள்ள BMW 7 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் S-கார்டு ஆகியவற்றுடன் இந்த கார் போட்டியிட உள்ளது. இவை அனைத்தும் தங்களின் பாதுகாப்பு அம்சங்களின் மூலம் குழுவாக இணைந்துள்ளன.
0 out of 0 found this helpful