முற்றிலும் புதிய ஹோண்டா ப்ரியோ 2017 ஆம் ஆண்டு அறிமுகமாகிறது.
published on ஆகஸ்ட் 19, 2015 12:42 pm by nabeel for ஹோண்டா ப்ரியோ
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டா நிறுவனம் தனது முதல் சிறிய ரக காரான ப்ரியோ கார்களை 2011 ஆம் அறிமுகப்படுத்தியது. அந்த காரின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட உள்ளது. அறிமு கமானது முதல் இன்று வரை இந்த கார்கள் சந்தையில் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. சராசரியை விட குறைவாக வசதிகள் கொண்ட உட்புறமும், கால் வைப்பதற்கான இடவசதி குறைவாக இருப்பதும் இதற்கான முக்கியமான காரணங்களாக அறியப்படுகின்றன. மேலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் மட்டுமே உள்ளதால் இதே ஹேட்ச்பேக் பிரிவில் டீசல் என்ஜின் ஆப்ஷனும் உள்ள மாருதி ஸ்விப்ட் மட்டும் ஹயுண்டாய் ஐ 10 க்ரேண்ட் கார்கள் மீது வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியது.
அறிமுகமாக உள்ள ப்ரியோ தொடர்ந்து இதே சிறிய ரக கார் பிரிவில் தொடர்ந்து நீடிக்கும் என்றாலும் இந்த முறை சற்று கூடுதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள ப்ரயோ காரில் உள்ள பெரிய விண்ட்ஸ்க்ரீன் அறிமுகமாகப்போகும் மாடலில் மாற்றப்படுவது மட்டுமன்றி வடிவமைப்பிலும் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதே முந்தைய பிரயோ வின் தயாரிப்பு கோட்பாடு பின்பற்றப்படும் என்றாலும் காரின் உடலமைப்பில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் இருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு எத்தகைய என்ஜின் பயன்படுத்தப்படும் என்பதற்கான தகவல்கள் நம்மிடம் இல்லை. பெரும்பாலும் பெட்ரோல் மாடலில் அதே முந்தைய 1.2 லிட்டர் என்ஜின் தான் பயன்படுத்தப்படும். ஆனால் டீசல் மாடலில் 1.1 மூன்று சிலிண்டர் I – DTEC தீசலேஞ்சிங்கள் பொருத்தப்படலாம் என்று யூகங்கள் உலவுகின்றன. ட்ரேன்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை கைகளால் இயக்கக்கூடிய (மானுவல்) மற்றும் தானியங்கி கியர் அமைப்பு ஆகிய இரண்டு வகைகளுமே இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முற்றிலும் புதிதாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ப்ரியோ கார்களை அறிமுகத்தின் போது ஹோண்டா நிறுவனத்தினர் ப்ரியோ என்ற பெயரையும் மாற்றி புதுப் பெயரையும் தருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிறிய கார் சந்தையில் ஒரு வலுவான இடத்தைப்பிடிக்க ஹோண்டா முயலும். ஆனால் ஏற்கனவே மாருதி யின் ஸ்விப்ட் கார்களும் ஹயுண்டாய் யின் க்ரேண்ட் I 10 காரும் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த பிரிவில் ஹோண்டா சற்று ஜாக்கிரதையாக செயல் பட வேண்டியது அவசியமாகிறது.
தற்போது ப்ரியோ கார்கள் 4.2 லட்சம் முதல் 6. 8 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது
0 out of 0 found this helpful