அபார்த் 595 காம்பெட்டிசியோன் – மினி கூப்பர் எஸ் இடையே போட்டி
published on ஆகஸ்ட் 05, 2015 01:46 pm by raunak
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
நவீன மறுவெளியீடுகளான காரல் அபார்த்தின் பியட் 500 – அபார்த் 595 காம்பெட்டிசியோன் மற்றும் ஜான் கூப்பரின் மினி – 2015 மினி கூப்பர் எஸ் ஆகியவை நம் மண்ணில் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன.
ஜெய்ப்பூர்: இந்தியாவில் தனது வெற்றி வேட்கை கொண்ட 500 – 595 காம்பெட்டிசியோனை ரூ.29.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புதுடெல்லி) விலையில் பியட் அறிமுகப்படுத்தி உள்ளது. இது கடந்த 2009 ஆம் ஆண்டு நம் நாட்டில் 1.3-லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினின் பங்கு வடிவத்துடன் வெளியிடப்பட்ட 500-இன் மறுவெளியீடு ஆகும். நம் நாட்டிலேயே அதிக விலையுள்ள பியட் காரான இது, இந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட அட்டகாசமான மினி – 2015 கூப்பர் எஸ் உடன் போட்டியிடுகிறது. இந்த உயர்தர வாகனங்களின் சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டு பார்ப்போம்.
விலையை பொறுத்த வரை, மினியை விட பியட் ரூ.5 லட்சம் விலைக் குறைவாக உள்ளது. ஆனால் என்ஜினை ஒப்பிட்டால், பியட்டின் ஏஎம்டி-யை விட, மினி 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டு இயங்கும் பெரிய மற்றும் சக்தி வாய்ந்த என்ஜினை பெற்றுள்ளது. மேலும் அடிப்படையில் கூப்பர் எஸ்ஸில் இன்னது என்றில்லை, ஏறக்குறைய எல்லாமே விருப்பத்திற்கேற்ப அளிக்கப்பட்டுள்ளதால், அதன் பட்டியலுக்கு முடிவில்லை. விருப்பத்திற்கேற்ப என்பதில், சின்னமாக உள்ள மினி கோடுகள் மற்றும் அழகான சன்ரூப் ஆகியவையும் அடங்கும். அபார்த் 595 காம்பெட்டிசியோன் உடன் ஒப்பிடும் போது, மினியின் விலை அதிகமானது என்றாலும், நடைமுறைக்கு மிகவும் ஏற்ற காராக உள்ளது. தற்போதைய 3வது தலைமுறை மினி, தனது அளவிலும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மறுபுறம் டிடிசி (டார்க் டிரான்ஸ்பர் கன்ட்ரோல்), எப்எஸ்டி (பிரிக்வென்ஸி செலக்டிவ் டம்பிங்) தொழிற்நுட்பம் கொண்ட கோப் முன்புற சஸ்பென்ஸன்ஸ், கோனி பின்புற சஸ்பென்ஸன்ஸ், சப்பெல்ட் அளிக்கும் அபார்த் கார்ஸா பெப்ரிக் ரெய்ஸிங் இருக்கைகள், 7-இன்ச் டிஎப்டி கலர் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உட்பட பல சிறப்பு அம்சங்களை அபார்த் 595 காம்பெட்டிசியோனில் கிடைக்கிறது. முடிவில் இவ்விரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கு, நம் விருப்பமும், தனிப்பட்ட முக்கியத்துவமும் மட்டுமே பதில் அளிக்கும். மேற்கண்ட இரண்டில் எதை தேர்ந்தெடுத்தாலும், நமக்கு ஏமாற்றம் மட்டும் ஏற்படாது.