அடுத்து வரும் மாருதி பெலினோவை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்
published on செப் 30, 2015 12:19 pm by nabeel for மாருதி வைஆர்ஏ
- 16 Views
- 17 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஒரு நியாயமான விலை நிர்ணயிக்கும் கார் தயாரிப்பாளர் என்ற தனது உருவத்தை மாற்றி, பிரிமியம் கார் தயாரிப்பாளராக வெளிகாட்டிக் கொள்ள மாருதி நிறுவனம் கடந்த ஒரு வருடமாக கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக பிரத்யேகமான வரிசையில் அமைந்த நிக்ஸா ஷோரூம்களை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தி, அதில் உயர்தர பிரிமியம் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. S-கிராஸை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம், அதன் மற்றொரு பிரிமியம் காரான சமீபகால ஹாட்ச்பேக்காக அறியப்படும் பெலினோ-வை கொண்டு வர தயாராகி வருகிறது. இந்த கார் குறித்த செய்திகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதலே வெளிவர துவங்கி, பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-இல் உலகிற்கு முழுமையாக காட்டப்பட்டது. அது முதல் இந்திய ஆட்டோமோட்டிவ் தளத்தில் ஒரு பேசப்படும் முக்கிய தலைப்பாக இருந்து, பார்வைக்கு சிறப்பாக உள்ள இந்த காரை வாங்குவதற்கு எதிர்கால வாடிக்கையாளர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
எனவே, இந்த ஆண்டு மாருதி நிறுவனத்திடம் இருந்து வரும், அதிக காத்திருப்பிற்குள்ளான இந்த காரை குறித்த 8 விஷயங்களை தெரிந்துக் கொள்வோம்.
1. தோற்றம்
மாருதியை பொறுத்த வரை, வாடிக்கையாளர்களை கவர அதிக கவனம் செலுத்தும் முதல் விஷயமே, காரின் தோற்றம் தான். பெலினோவில் புதிய V-வடிவிலான கிரிலில் காணப்படும் கிரோம் வரிகள், பார்ட்டியல் ஃப்ளோட்டிங் ரூஃப் மற்றும் வலிமை மிகுந்த வீல் ஆர்ச்சுகள் ஆகியவை காரின் குணநலன்களுடன் சேர்ந்து, மிக நேர்த்தியான வெளித்தோற்றத்தை கொண்டுள்ளது. பார்வைக்கு சுசுகியின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், வேறு எதிலும் இல்லாத முதலீடுகளை காண முடிகிறது. டேடையிம் ரன்னிங் LED-களை சூழப்பெற்று, உள்ளிறங்கிய நிலையில் காணப்படும் ஹெட்லெம்ப் கிளெஸ்டர் அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் கீழே மிகச்சிறிய வட்ட வடிவிலான ஃபெக் லெம்ப்களை கொண்டு, பெலினோ பெரிய காரை போல தோற்றம் அளிக்கிறது.
2. பிராண்டிங்
மாருதியின் சமீபகால தயாரிப்பு, ஒரு பிரிமியம் ஹாட்ச்பேக் என்று அழைக்கப்படுகிறது. மேலும், பெலினோ என்ற பெயரிலான இந்த கார், மாருதியின் பிரத்யேகமான வரிசையில் அமைந்த நிக்ஸா ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும். இந்த ஷோரூம்களில், மாருதி சுசுகி நிறுவனம் அளிக்கும் விருந்தோம்பலின் ஒரு புதிய அனுபவத்தை பெறலாம் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
3. உட்புற அமைப்பியல்
ஒரு பிரிமியம் காரின் மிக முக்கிய பகுதி என்பது, பயன்படுத்துபவர் காருக்குள் சென்றவுடன் ஒரு சிறப்பான உணர்வை அளிக்க வேண்டும் என்பதாகும். இந்த பணியை பெலினோ கார் சிறப்பாக செய்கிறது. காரின் கேபின் சிறப்பாக ஒழுங்குபடுத்தி, எளிய அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இது முழு கருப்பு நிற தீம்மை கொண்டு, அதன்மீது சில்வர் வரிகள் மற்றும் கிரோம் மேல்வரிகள் காணப்படுகின்றன. டேஸ்போர்டின் நடுவே அமைக்கப்பட்டுள்ள 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், காருக்கு கூடுதல் அழகை பெற்று தருகிறது. இந்த அமைப்புகளை S-கிராஸ் மற்றும் சியஸ் கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. இதயம்
இந்த காரின் இதயப் பகுதியில் துடிக்கும், ஒரு 1.2-லிட்டர் VVT பெட்ரோல் என்ஜினை கொண்டு, 83bhp ஆற்றலையும், 115Nm முடுக்குவிசையையும் பெற முடிகிறது. டீசல் மாடலை பொறுத்த வரை, பெலினோவில் 1.3-லிட்டர் DDiS200 என்ஜினை கொண்டு, அதன்மூலம் 90bhp ஆற்றலையும், 200Nm முடுக்குவிசையையும் பெற முடிகிறது. இந்த காரின் ஐரோப்பிய மாடல்களில் தற்போது காணப்படும் 1.0-லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர் ஜெட் பெட்ரோல் என்ஜினும் கொண்டு வரப்படலாம். இதன்மூலம் 92bhp ஆற்றலையும், 170Nm முடுக்குவிசையையும் பெறலாம். இதன் டீசல் வகையில் மட்டும், சிறந்த மைலேஜ் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பணிகளுக்காக, சுசுகியின் புதிய SHVS தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.
5. உருவ அமைப்பு
புதிய பெலினோவிற்கும், அதன் முன்னோடி கார்களுக்கும் இடையே ஏறக்குறைய பொதுவான விஷயங்கள் எதுவும் இல்லை என்றே கூறலாம். இதை மாருதி-சுசுகி நிறுவனத்தின் ஒரு புத்தம் புதிய பிளாட்பாமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பழைய பிளாட்பாமை விட 10% எடை குறைவாகவும், அதிக திடமானதாகவும் காணப்படுகிறது. இதே பிளாட்பாமை இனி வரவுள்ள ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் சேடன் ஆகிய மற்ற மாருதி கார்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
6. தொழில்நுட்பம்
தற்போது சியஸ் காரில் பயன்பாட்டில் உள்ள சுசுகியின் SHVS தொழில்நுட்பத்தை, பெலினோவிலும் காண முடிகிறது. ஒரு இன்டிக்ரேட்டேட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டரை (ISG) அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் பை சுசுகி (SHVS), என்ஜினின் ஸ்டார்ட் / ஸ்டாப் செயல்பாடுகளின் போது வேலை செய்கிறது. அதேபோல, பிரேக் எனர்ஜி ரிக்கவரி சிஸ்டம் என்ற அம்சத்தை கொண்டுள்ள இந்த அமைப்பு, பிரேக் போடும் போது உருவாகும் ஆற்றலை கொண்டு பேட்டரியை சார்ஜ் செய்கிறது. இந்த புதிய தொழில்நுட்பம், அமைதியாக நிற்கும் போது வாகனத்தை ஆப் செய்வதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கிறது.
7. போட்டி
நீங்கள் எந்த நிறுவனத்தை சுற்றி வருகிறீர்களோ, அதை குறித்து அதிகம் எடுத்துரைப்பீர்கள். அதுபோல, YRA என்றும் அறியப்படும் பெலினோ தனது பிரிவை தெளிவாக காட்டியுள்ளதால், எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும். எலைட் i20 உடன் போட்டியிடுவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், பெலினோவில் காணப்படும் சில குணநலன்களால் அது சாத்தியமே. மேலும் அது தற்போதைய பிரிமியம் ஹாட்ச்பேக் பிரிவில் கடினமாக உழைத்து வருமானத்தை ஈட்ட உள்ளது.
8. விலை
எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றுடன் இந்த ஹாட்ச்பேக் போட்டியிட போவதால், இதன் விலை நிர்ணயத்தில் மாருதி நிறுவனம் அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிக்ஸா வரிசையில் அமைந்த ஷோரூம்களின் மூலம், இந்த கார்களை விற்பனை செய்ய உள்ளதால், இதன் விலை ரூ.5.5 - 8.5 லட்சத்திற்கு உட்பட்டு காணப்படும் என்று ஊகிக்கலாம்.
0 out of 0 found this helpful