நியூ-ஜென் Renault Duster காரில் உள்ள 7 புதிய தொழில்நுட்ப வசதிகள்
published on பிப்ரவரி 14, 2024 04:21 pm by ansh for ரெனால்ட் டஸ்டர் 2025
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் டிரைவருக்கான டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக ஹைபிரிட் பவர்டிரெய்ன் மற்றும் ADAS அம்சங்களுடனும் வருகின்றது.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இது விரைவில் துருக்கிய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இது டேசியா டஸ்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட பதிப்பு என்பதால் அதை போலவே ஒட்டுமொத்த வடிவமைப்பு, கேபின் மற்றும் அதே வசதிகளை பெறுகிறது. ஒரே ஒரு மாற்றம் ரெனால்ட் பேட்ஜ் மட்டுமே. புதிய டஸ்டர் பல புதிய தொழில்நுட்ப வசதிகளை பெறுகிறது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா-ஸ்பெக் பதிப்பில் கிடைக்கும் வசதிகள் என்ன என்பதைப் பார்க்கவும்:
10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன்
ரெனால்ட் தனது புதிய டஸ்டரை 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வழங்குகிறது, இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் வருகிறது. கனெக்டட் கார் டெக்னாலஜியை தவிர, இந்த ஸ்கிரீன் மூலமாக சீட் வென்டிலேஷன் போன்ற வாகன செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.
டிரைவருக்கான 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே
புதிய டஸ்டர் டிரைவருக்கான 7 இன்ச் முழு டிஜிட்டல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இங்கே, டிரைவ் தகவலைத் தவிர, ஹைப்ரிட் பவர்டிரெய்னின் லைவ் பவர் டெலிவரியையும் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 2024 Renault Duster அறிமுகமானது: என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்
முன்பக்கத்தில் இரண்டு டைப்-சி சார்ஜிங் போர்ட்களைப் பெற்றாலும், புதிய டஸ்டர் சென்டர் கன்சோலில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் வருகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் இதை இணைத்தால், முற்றிலும் வயர்லெஸ் ஆக பயன்படுத்தலாம்.
வென்டிலேட்டட் முன் இருக்கைகள்
புதிய ரெனால்ட் டஸ்டரில் உள்ள மற்றொரு வசதி அம்சம், முன் இருக்கைகளுக்கான வென்டிலேஷன் செயல்பாடு ஆகும், இது டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் கன்ட்ரோல் செய்யலாம். ஆனால் இன்னும் இருக்கை குளிரூட்டும் நிலைகளின் சரியான லெவலை இன்னும் தெரிந்து கொள்ள முடியாது.
மேலும் படிக்க: இந்த பிப்ரவரியில் ரெனால்ட் கார்களில் ரூ.75,000 வரை சேமிப்பைப் பெறுங்கள்
ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்
தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டஸ்டருக்கு மிகப்பெரிய கூடுதலாக புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் உள்ளது. இந்த பவர்டிரெய்ன் டூயல் மோட்டார் செட்டப் அமைப்புடன் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது. இணைந்து, இந்த பவர்டிரெய்ன் 140 PS அவுட்புட்டை கொடுக்கின்றது, மேலும் பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய ரீஜெனரேஷன் பிரேக்கிங்கையும் வழங்குகிறது.
ஆல் வீல் டிரைவ்
புதிய டஸ்டர் ஆல் வீல் டிரைவ் பவர்டிரெய்ன் ஆப்ஷனையும் வழங்குகிறது. இந்த செட்டப் மைல்ட்-ஹைப்ரிட் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கும், மேலும் ஸ்நோ, சேண்ட்,மட், ஆஃப்-ரோடு மற்றும் இகோ ஆகியவற்றிற்கான குறிப்பிட்ட மோட்களுடன் வருகிறது. இங்கே, லேட்டரல் லிஃப்ட், அப்ஹில் மற்றும் டவுன்ஹில் ஷிஃப்ட், மற்றும் முன் மற்றும் பின்புற ஆக்ஸில் எலக்ட்ரிக் டிஸ்ட்ரிபியூஷன் ஆகியவை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் பார்க்க முடியும்.
மேலும் படிக்க: 2024 -க்கான அப்டேட்டை கார்களுக்கு கொடுத்த ரெனால்ட் நிறுவனம் … புதிய வசதிகள் கிடைக்கும், விலையும் குறைந்துள்ளது !
ADAS
கடைசியாக, மற்றொரு பெரிய தொழில்நுட்ப தொகுப்பு அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களின் வடிவத்தில் வருகிறது. புதிய தலைமுறை டஸ்டர் கேமரா அடிப்படையிலான ADAS உடன் வருகிறது (நாம் ஹோண்டா எலிவேட்டில் பார்த்தது போல்) மற்றும் லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், ட்ராஃபிக் சைன் ரெகக்னிஷன் மற்றும் டிரைவர் அட்டென்ஷன் அலர்ட் போன்ற டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை வழங்குகிறது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு & விலை
புதிய ஜெனரல் ரெனால்ட் டஸ்ட்டர் இந்த அனைத்து அம்சங்களுடனும் 2025 ஆம் ஆண்டில் ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்படலாம். வெளியீட்டிற்குப் பிறகு, இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்
0 out of 0 found this helpful