ஹூண்டாய் கிரெட்டா 2020 வை விடக் கூடுதலாக 6 அம்சங்களை கியா செல்டோஸ் வழங்குகிறது
published on மார்ச் 12, 2020 12:42 pm by sonny for க்யா Seltos 2019-2023
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
செல்டோஸின் அம்ச பட்டியலானது புதிய கிரெட்டாவிற்கும் பொருந்துவது சிரமம்
2019 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டோஸ், அதன் விற்பனையில் உச்ச நிலையை அடைந்து, இந்தியாவில் சிறிய எஸ்யூவிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது. காம்பாக்ட் எஸ்யூவிகளின் விற்பனையில் சாம்பியனான ஹூண்டாய் கிரெட்டா தனது சிம்மாசனத்தை அதிரடியாக செல்டோஸிடம் இழந்திருக்கிறது. இருப்பினும், ஹூண்டாய் தனது சிம்மாசனத்தை மீட்டெடுப்பதற்காக இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்துகிறது, மேலும் இதன் முந்திய மாதிரியை விடக் கூடுதல் பிரீமிய அம்ச புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது. புதிய கிரெட்டா இன்னும் கியாவுடன் பொருந்தவில்லை என்று கூறலாம். 2020 கிரெட்டாவில் செல்டோஸ் வழங்கும் சில சிறப்பம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
360 டிகிரி காரை நிறுத்த உதவும் கேமரா
இந்த பிரிவில் கியா செல்டோஸ் இந்த பிரிவில் 360 டிகிரி காரை நிறுத்த உதவும் கேமராவை வழங்கிய முதல் காம்பாக்ட் எஸ்யூவி இல்லை என்றாலும் கூட, ஒரு சில வகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பிரீமிய அம்சம் நெரிசலான பாதைகள் மற்றும் சிறிய அளவில் இருக்கக்கூடிய கார் நிறுத்தும் இடம் போன்ற நெரிசலான இடமாக இருந்தாலும் இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது.
கைமுறை இயக்கம் கொண்ட டர்போ-பெட்ரோல்
செல்டோஸ் மற்றும் 2020 கிரெட்டா இரண்டும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல், மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் ஆகிய ஒரே மாதிரியான பிஎஸ்6 இயந்திரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. கியா டர்போ-பெட்ரோல் இயந்திரத்தை 6-வேகக் கைமுறை மற்றும் 7-வேக டிசிடி ஆட்டோவுடன் தேர்வு செய்யும் போது, ஹூண்டாய் அதைத் தானியங்கி விருப்பத்துடன் மட்டுமே வழங்குகிறது. டர்போ-பெட்ரோல் இயந்திரத்தின் கைமுறை வகை ஒரு பற்சக்கர-மாற்றத்தை விரும்பும் ஆர்வலர்களுக்கு இது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய எளிமையான ஒன்றாகும்.
ஓட்டுனரின் கண்களுக்குப் புலப்படாதவைகள் குறித்த கண்காணிப்பு
இந்த பிரிவில் முதன் முதலில் இந்த அம்சம் கியாவில்தான் பொருத்தப்பட்டுள்ளது. இது ஓஆர்விஎம் க்குள் வைக்கப்பட்டுள்ள கேமராவைப் பயன்படுத்துகிறது மேலும் இது ஓட்டுநரின் கருவி தொகுப்பில் இருக்கும் 7 அங்குல திரையில் காட்சிகளைக் காண்பிக்கும். இந்த சிறப்பம்சமானது, ஓட்டுனர் முன்னால் சாலையில் இருந்து கண்களை எடுக்காமல், பின்புறத்தில் யார் வருகிறார்கள், அவர்கள் குறிகாட்டியை எந்த பக்கத்தில் செல்வதற்குக் குறிப்பிடுகிறார்கள் என்பதைச் சரிபார்க்க அனுமதிக்கிறது. குறிப்பாக இது பாதைகளை மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முன்புற காட்சியைப் படம் பிடிக்கும் 8-அங்குல திரை
இந்தப் பிரிவில் முதன் முதலில் முன்புற காட்சியைப் படம்பிடிக்கும் திரையை கியா செல்டோஸ் வழங்குகிறது. இந்த 8 அங்குல அலகு தற்போதைய வாகன வேகத்தையும், ஓட்டுநருக்கு முன்னால் செல்லும் சாலையை பார்க்காமலேயே வழிசெலுத்தல் புதுப்பிப்புகளையும் காண்பிக்க முடியும். இது ரூபாய் 30 லட்சத்துக்கும் அதிகமான விலை கொண்ட பிரீமியம் கார்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட ஒரு சிறப்பம்சம் மட்டுமல்லாமல் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவமாகவும் அமைகிறது.
பல வண்ண மனோநிலை ஒளி விளக்குகள்
செல்டோஸ் காரில் சுற்றுப்புற விளக்குகள் மற்றும் எல்ஈடி மனோநிலை விளக்குகள் ஆகியவை இருக்கிறது, இது காரின் ஒலிபெருக்கி அமைப்பிலிருந்து வரக்கூடிய இசைக்கு ஏற்ப ஒத்திசைகிறது. இது ஒளிபரப்பு அமைப்பு வழியாக நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய பல்வேறு வண்ணங்களில் முன்புற முகப்பு பக்கத்தை ஒளிரச் செய்யலாம். இதற்கிடையில், 2020 கிரெட்டா நீல நிற சுற்றுப்புற விளக்குகளை மட்டுமே வழங்குகிறது.
காரை நிறுத்த உதவும் முன்புற உணர்விகள்
கியா செல்டோஸை முன்-புறமாகக் காரை நிறுத்தும் உணர்விகளுடன் உயர் சிறப்பம்ச மாதிரியில் பொருத்தியுள்ளது, இது புதிய தலைமுறை கிரெட்டாவில் இல்லாத ஒரு பாதுகாப்பு அம்சமாகும். முன் புற உணர்விகள் காரை நெரிசலான இடங்களில் உள்ளேயும் வெளியேயும் நிறுத்துவதை எளிதாக்குகின்றன.
2020 கிரெட்டா இந்த பிரீமியம் அம்சங்களை இழக்கக்கூடும் என்றாலும் செல்டோஸில் இல்லாத சிலவற்றை இது பெறுகிறது. இதனைப் பற்றி இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : இறுதி விலையில் கியா செல்டோஸ்
0 out of 0 found this helpful