Hyundai Exter -விட சிறப்பாக இருக்க Tata Punch ஃபேஸ்லிஃப்ட்டில் இருக்க வேண்டிய 5 விஷயங்கள்
published on ஏப்ரல் 08, 2024 09:06 pm by ansh for டாடா பன்ச் 2025
- 396 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பிரிவில் சிறந்த வசதிகள் கொண்ட மாடலாக இருக்க பன்ச் EV -லிருந்து சில வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் 2023 இல் அறிமுகமாகும் வரை டாடா பன்ச் இந்தியாவின் முதல் மைக்ரோ-எஸ்யூவி என்ற பட்டியலை நீண்ட காலத்துக்கு வைத்திருந்தது. எக்ஸ்டர் மிகவும் நவீன வடிவமைப்பு கூடுதல் வசதிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் வந்தது. இது சிறந்த வசதிகள் கொண்ட காராக இருந்தது. இப்போது டாடா நிறுவனம் ஃபேஸ்லிப்டட் டாடா பன்ச் காரை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒரு வேளை இந்த கார் பிரிவில் சிறந்த காராக இருக்க விரும்பினால் டாடா பன்ச் EV -யிடம் இருந்து சில வசதிகளை கடன் வாங்க வேண்டியிருக்கும்.
10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
எடுத்துக்காட்டுக்காக டாடா பன்ச் EV -யின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
பஞ்சின் தற்போதைய பதிப்பு 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருகிறது இது எக்ஸ்டரின் 8-இன்ச் யூனிட்டை விட சிறியது. இருப்பினும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பன்ச் EV 10.25-இன்ச் தொடுதிரையுடன் வருகிறது. பெரும்பாலான புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட டாடா மாடல்களில் காணப்படுவது போல் தொடுதிரை அளவு பெரிதாகிவிட்டது மேலும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பஞ்சுக்கும் இதையே எதிர்பார்க்கிறோம்.
வயர்லெஸ் கார் தொழில்நுட்பம்
எடுத்துக்காட்டுக்காக டாடா பன்ச் EV -யின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
இப்போதைக்கு ஹூண்டாய் எக்ஸ்டர் அதன் ஹையர் வேரியன்ட்களில் கூட வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை வழங்குகிறது. பன்ச் ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்டருக்கு முன்னால் இருக்க விரும்பினால் அது இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு அமைப்புகளின் வயர்லெஸ் பதிப்புகளை வழங்க வேண்டும். பன்ச் EV -ன் 10.25-இன்ச் ஸ்கிரீன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றுடன் இணக்கமாக இருப்பதால் இந்த வசதிகளும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். பன்ச் ஃபேஸ்லிஃப்ட் வயர்லெஸ் சார்ஜிங் பேடுடன் வந்தால் அது உதவியாக இருக்கும்
டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்பிளே
எடுத்துக்காட்டுக்காக டாடா பன்ச் EV -யின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
எக்ஸ்டரை விட பன்ச் ஃபேஸ்லிஃப்டை அதிக சிறப்பம்சமாக மாற்றக்கூடிய மற்றொரு வசதி டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே ஆகும். தற்போதைய நிலவரப்படி பன்ச் மற்றும் எக்ஸ்டெர் இரண்டும் செமி-டிஜிட்டல் யூனிட்களுடன் வருகின்றன ஆனால் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா எஸ்யூவி முழு டிஜிட்டல் யூனிட்டை பெறலாம். பன்ச் EV -யில் இருக்கும் 10.25-இன்ச் யூனிட்டை இது கடன் வாங்கலாம்.
360 டிகிரி கேமரா
எடுத்துக்காட்டுக்காக டாடா பன்ச் EV -யின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
பாதுகாப்பைப் பொறுத்தவரை எக்ஸ்டர் தற்போது 6 ஏர்பேக்குகள் வருகின்றது. அதுவும் ஸ்டாண்டர்டாக கிடைக்கின்றது. மேலும் டூயல் கேமரா டேஷ் கேம் பொருத்தப்பட்டிருப்பதால் கூடுதல் வசதிகளை வழங்குகிறது. பன்ச் ஃபேஸ்லிஃப்ட் அதன் காலாவதியான 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டின் மேல் மேம்பட்ட பாதுகாப்பைப் பெற அது 6 ஏர்பேக்குகளுடன் வர வேண்டும். மேலும் எக்ஸ்டரை விட சிறந்ததாக இருக்க வேண்டும். ஆகவே இது பன்ச் EV -யிலிருந்து 360 டிகிரி கேமராவை கடன் வாங்கலாம்.
பிளைண்ட் வியூ மானிட்டர்
எடுத்துக்காட்டுக்காக டாடா பன்ச் EV -யின் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது
360 டிகிரி கேமராவை தவிர குறுகிய சாலைகளில் செல்ல மிகவும் பயனுள்ள அம்சமாக இருக்கும். பன்ச் ஃபேஸ்லிஃப்ட் பன்ச் EV -யிலிருந்து ஒரு பிளைண்ட் வியூ மானிட்டரை பெறலாம். இது நீங்கள் பாதைகளை மாற்றும்போது அல்லது கூர்மையான வளைவுகளில் திரும்பும் போது உங்களுக்கு இது உதவுகிறது. இந்த வசதி இடது பக்க ORVM -லிருந்து கேமரா காட்சியை பிரதான டிஸ்பிளேவில் காண்பிக்க அனுமதிக்கிறது. இது இண்டிகேட்டரை பயன்படுத்தும் போது செயல்படுத்தப்படுகிறது ஓட்டுநரின் பிளைண்ட் ஸ்பாட்டில் பின்னால் யாராவது இருந்தால் உங்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
காரின் அறிமுக விவரங்கள்
டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் ஜூன் 2025 -க்குள் சந்தையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வசதிகளுடன் அப்டேட்களை பெறும் ஹையர் வேரியன்ட்கள் கூடுதல் விலையில் வரக்கூடும். இது ஹூண்டாய் எக்ஸ்டருக்கு நேரடிப் போட்டியாகத் தொடரும். நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர், சிட்ரோன் C3 மற்றும் மாருதி இக்னிஸ் ஆகியவற்றுக்கு மாற்றாகவும் இருக்கும்.
மேலும் படிக்க: பன்ச் AMT
0 out of 0 found this helpful