• English
  • Login / Register

ஒரு சிறிய ரக EV உட்பட நான்கு புதிய கார்களை இந்தியாவில் Nissan நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது

published on ஜூலை 19, 2024 06:21 pm by shreyash

  • 92 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த நான்கு மாடல்களில், நிஸான் மேக்னைட்டும் இந்த ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட உள்ளது.

 

நிஸான் சமீபத்தில் தனது நான்காம் தலைமுறை எக்ஸ்-ட்ரெயிலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முழு அளவிலான எஸ்யூவி ஆனது கம்ப்ளீட்லி பில்ட் யூனிட்டாக  (CBU) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2024 நிஸான் எக்ஸ்-ட்ரெய்ல் உடன், ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் இந்தியாவில் நான்கு கூடுதல் மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களை அறிவித்தார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அதன் தற்போதைய மாடல்களில் ஒன்றின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனும் மற்றும் வரும் ஆண்டுகளில் ஒரு சிறிய ரக EV ஆகியவை இதில் அடங்கும். இந்தியாவில் வரவிருக்கும் நிஸான் கார்களை பற்றி இன்னும் விரிவாக ஆராய்வோம்.

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நிஸான் மேக்னைட்

 

 

எதிர்பார்க்கப்படும் அறிமுகம்

 

 

அக்டோபர் 2024

 

 

எதிர்பார்க்கப்படும் விலை

 

 

ரூ.6 லட்சம்

டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற மாடல்களுடன் போட்டியிடும் வகையில், நிஸான் மேக்னைட் இந்தியாவில் டிசம்பர் 2020-இல் அறிமுகமானது. செக்மென்ட்டில் அதன் சில போட்டியாளர்களைப் போல எதிர்பார்த்த வெற்றியை இது அடையவில்லை என்றாலும். இந்திய சந்தையில் நிசானை போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதில் மேக்னைட் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது ​​மேக்னைட்டின் குறிப்பிடத்தக்க அப்டேட் செய்வதற்கான திட்டங்களை நிஸான் உறுதிப்படுத்தியுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட், திருத்தப்பட்ட முன்பக்க கிரில், ட்வீக் செய்யப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் “L” வடிவ LED DRL-களுடன் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட் ஹவுசிங் உள்ளிட்ட நுட்பமான டிசைன் அப்டேட்களை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சென்டரில் காணப்பட்டது. எஸ்யூவி-யின் புதிய முன்பக்கம் அதன் புதிய தோற்றத்தை அதிகாரப்பூர்வமாகப் பெறுகிறது. 8 இன்ச் டச்ஸ்கிரீன், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் போன்ற அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடும். மேலும் வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற புதிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்.

2024 மேக்னைட் அதன் தற்போதைய வெர்ஷனிலும் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை தக்கவைத்துக் கொள்ளும்:

 

 

இன்ஜின்

 

 

1-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

 

 

1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

 

 

பவர்

 

 

72 PS

 

 

100 PS

 

 

டார்க்

 

 

96 Nm

 

 

160 Nm வரை

 

 

டிரான்ஸ்மிஷன்

 

 

 5-ஸ்பீட் MT,  5-ஸ்பீட் AMT

 

 

நிஸான் காம்பாக்ட் எஸ்யூவி / மிட்சைஸ் 3-ரோ எஸ்யூவி

 

 

நிஸான் காம்பாக்ட் எஸ்யூவி

 

 

மிட்சைஸ் 3-ரோ எஸ்யூவி

 

 

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் - மார்ச் 2025

 

 

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் - செப்டம்பர் 2025

 

 

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ. 10 லட்சம்

 

 

எதிர்பார்க்கப்படும் விலை - ரூ. 12 லட்சம்

New Renault and Nissan C-segment SUVs teased

கிரெட்டாவுக்கு போட்டியாக ஒரு காம்பாக்ட் எஸ்யூவி-யை, அதன் 7-சீட்டர் வெர்ஷனுடன், வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதையும் நிஸான் உறுதிப்படுத்தியுள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி ஆனது CMF-B இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும், இது இந்தியாவில் புதிய ரெனால்ட் டஸ்ட்டரை ஆதரிக்கும். நிசானின் வரவிருக்கும் எஸ்யூவி பற்றிய பல விவரங்கள் வெளியிடவில்லை என்றாலும், இது புதிய டஸ்ட்டரின் அதே இன்ஜின் ஆப்ஷன்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நிஸான் எஸ்யூவி பற்றி மேலும் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

காம்பாக்ட் எஸ்யூவி இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுடன் போட்டியிடும், அதே சமயம் 7-சீட்டர் வெர்ஷன்களான மஹிந்திரா XUV700, 2024 ஹூண்டாய் அல்கஸார் மற்றும் MG ஹெக்டர் பிளஸ் ஆகியவற்றின் 7-சீட்டர் வேரியன்ட்களுக்கு சவால் விடும்.

சிறிய ரக EV

 

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் 

 

மார்ச் 2026

டாடா டியாகோ EV மற்றும் MG காமெட் EV ஆகியவற்றுடன் போட்டியிடும் நோக்கத்துடன் இந்தியாவில் என்ட்ரி-லெவல் EV சந்தையில் நுழைய நிஸான் திட்டமிட்டுள்ளது. நிஸான் அதன் வரவிருக்கும் EV பற்றிய விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் இது 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய EV-யின் ரேஞ்ச் சுமார் 300 கி.மீ இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கார்கள் தொடர்பான அப்டேட்களுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • எம்ஜி windsor ev
    எம்ஜி windsor ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: செப, 2024
  • க்யா ev9
    க்யா ev9
    Rs.80 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
  • மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
    மெர்சிடீஸ் eqs எஸ்யூவி
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: அக்ோபர், 2024
×
We need your சிட்டி to customize your experience