சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 BMW 3 சீரிஸ் அப்டேட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள்

published on மே 31, 2024 06:02 pm by ansh for பிஎன்டபில்யூ 3 சீரிஸ்

வெளிப்புற டிசைனில் எந்த ஒரு பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் கேபின் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

BMW 3 சீரிஸ் சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு சில அப்டேட்டை பெற்றுள்ளது. இந்த மாற்றங்கள் இந்திய வெர்ஷனிலும் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வழங்கப்பட வாய்ப்பில்லாத ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களில் முக்கிய கவனம் செலுத்துவதன் மூலம் டிசைன் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அப்டேட்கள் குறைவே. புதுப்பிக்கப்பட்ட 3 சீரிஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 3 முக்கிய விஷயங்கள் இதோ.

குறைந்த அளவிலான டிசைன் மாற்றங்கள்

முன்புறத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் சமீபத்திய 3 சீரிஸ்களுக்கும் அதன் முந்தைய எடிஷன்களுக்கும் இடையில் எந்த டிசைன் மாற்றங்களும் இல்லை என்பதை நீங்கள் காண முடியும். பம்பர் ஏர் வென்ட்கள் பானட் மற்றும் லைட் செட்டப் உள்ளிட்ட முன் ப்ரொபைகள் ஒரே மாதிரியாக இருக்கும். இருப்பினும் இந்த அப்டேட்டில் ஆர்க்டிக் ரேஸ் ப்ளூ மெட்டாலிக் மற்றும் ஃபயர் ரெட் மெட்டாலிக் ஆகிய இரண்டு புதிய கலர் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்துகிறது.

அதன் ப்ரொபைலை பொறுத்தவரை 3 சீரிஸ் இப்போது 19-இன்ச் அலாய் வீல்களுக்கான புதிய டிசைனைப் பெறுகிறது இது பிளாக் அல்லது டூயல்-டோன் ஷேடில் கிடைக்கிறது. பின்புற டிசைனிலும் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாமல் உள்ளது.

மேம்படுத்தப்பட்ட கேபின் அப்டேட்கள்

உள்ளே கேபினில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களை மட்டுமே பெற்றுள்ளது 3 சீரிஸில் அடையாளம் காணக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள அப்டேட்டாக இவை உள்ளன. ஒட்டுமொத்த காரில் உள்ள லேஅவுட்டில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படாமல் இருந்தாலும் கார் தயாரிப்பு நிறுவனம் ஏசி வென்ட்களின் டிசைனில் மாற்றங்களை செய்துள்ளது டாஷ்போர்டு மற்றும் சென்டர் கன்சோலில் கார்பன் ஃபைபர் கூறுகளை இணைத்து புதிய பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீலை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவில் BMW 220i M ஸ்போர்ட் ஷேடோ எடிஷன் ரூ.46.90 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது

வசதிகளின் பட்டியல் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. ஆனால் BMW அதன் 14.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது. பிற வசதிகளில் 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே த்ரீ-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள், ஹீட்டட் ஸ்டீயரிங் மற்றும் பார்க்கிங் அஸ்சிஸ்ட் ஆகியவை இதில் அடங்கும்.

மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன்

BMW 3 சீரிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் உட்பட பல்வேறு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்கும் அதே வேளையில் பிளக்-இன் ஹைப்ரிட் எடிஷன் மிகவும் குறிப்பிடத்தக்க அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிளக்-இன் ஹைப்ரிட் வேரியன்ட்களில் 19.5 kWh பேட்டரி பேக்குடன் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியால் இந்த புதிய செட்அப் இப்போது 101 கி.மீ வரை செல்லக்கூடிய EV ரேஞ்சை கொண்டுள்ளது.

மேலும் படிக்க: புதிய Audi Q6 e-Tron-னின் ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் வெளியிடப்பட்டது இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்

இருப்பினும் இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் இந்தியாவில் வழங்கப்படாது. இந்தியா-ஸ்பெக் மாடல் 190 PS 2-லிட்டர் டீசல் யூனிட் 258 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் மற்றும் 374 PS 3-லிட்டர் இன்-லைன் ஆறு பெட்ரோல் இன்ஜின் 48V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் முன்பு இருந்த அதே இன்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும். இந்த இன்ஜின்கள் அனைத்தும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அப்டேட் செய்யப்பட்ட BMW 3 சீரிஸ் வரும் மாதங்களில் இந்திய சந்தையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தற்போதைய வெர்ஷனை விட சற்று அதிக விலையை கொண்டுள்ளது இதன் விலை ரூ.60.60 லட்சத்தில் இருந்து ரூ.72.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். BMW 3 சீரிஸ் மெர்சிடீஸ்-பென்ஸ் C-கிளாஸ் மற்றும் ஆடி A4 ஆகியவற்றுடன் தொடர்ந்து போட்டியிடும்.

மேலும் படிக்க: BMW 3 சீரிஸ் ஆட்டோமேட்டிக்

a
வெளியிட்டவர்

ansh

  • 83 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது பிஎன்டபில்யூ 3 Series

Read Full News

explore similar கார்கள்

பிஎன்டபில்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசைன்

Rs.60.60 - 62.60 லட்சம்* get சாலை விலை
டீசல்19.61 கேஎம்பிஎல்
பெட்ரோல்15.39 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை