சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2025 Skoda Kodiaq இந்தியாவில் வெளியிடப்பட்டது

dipan ஆல் ஏப்ரல் 17, 2025 09:27 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
13 Views

புதிய கோடியாக் ஆனது ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்கே என்ற இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

  • LED ஹெட்லைட்கள், 18-இன்ச் அலாய்ஸ் மற்றும் C- வடிவ இணைக்கப்பட்ட LED டெயில் லைட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.

  • உள்ளே இது 3-ஸ்போக் ஸ்டீயரிங், 12.9-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் இரண்டு வேரியன்ட்களுக்கும் வெவ்வேறு கேபின் தீம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • மற்ற அம்சங்களில் 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் ஆகியவை கிடைக்கும்.

  • பாதுகாப்புக்காகக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் TPMS ஆகியவை உள்ளன.

  • 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் (204 PS/320 Nm) 7-ஸ்பீடு DCT உடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்பு பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 2025 ஸ்கோடா கோடியாக் இப்போது இந்தியாவில் ரூ. 46.89 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: ஸ்போர்ட்லைன் மற்றும் செலக்ஷன் எல்கே (லாரின் மற்றும் க்ளெமென்ட்), இவற்றின் விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

2025 ஸ்கோடா கோடியாக் விலை

பழைய ஸ்கோடா கோடியாக் விலை

ஸ்போர்ட்லைன்

ரூ.46.89 லட்சம்

கிடைக்கவில்லை

செலக்‌ஷன் எல்கே

ரூ.48.69 லட்சம்

ரூ.39.99 லட்சம்

விலை விவரங்கள் எக்ஸ்-ஷோரூம் (அறிமுகம்), பான்-இந்தியா -வுக்கானவை

இப்போது, ​​2025 ஸ்கோடா கோடியாக் வழங்கும் அனைத்தையும் பார்ப்போம்:

வெளிப்புறம்

ஸ்கோடா கோடியாக்கின் இரண்டு வேரியன்ட்களின் வெளிப்புற ஷேடு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. இரண்டிலும் நேர்த்தியான LED ஹெட்லைட்கள், சிக்னேச்சர் ஸ்கோடா பட்டர்ஃபிளை கிரில் மற்றும் இணைக்கப்பட்ட C- வடிவ எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவை அதன் நவீன தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

இருப்பினும் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. ஸ்போர்ட்லைன் வேரியன்ட் ஒரு பிளாக்-அவுட் கிரில் உடன் வருகிறது. இது ஒரு ஸ்போர்ட்டியர் தோற்றத்தை அளிக்கிறது. அதே நேரத்தில் டாப்-ஸ்பெக் செலக்ஷன் எல்கே டிரிம் அதிக பிரீமியத்துக்காக கிரில் மீது குரோம் மற்றும் சில்வர் இன்செர்ட்களை கொண்டுள்ளது. கூடுதலாக எல்கே வேரியன்ட்டில் உள்ள கிரில் எல்இடி லைட் பார் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது குறிப்பாக இரவில் அதன் கவர்ச்சியை அதிகரிக்கிறது.

ORVM -கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவற்றுடன் வேரியன்ட் தொடர்கிறது. இவை ஸ்போர்ட்லைன் வேரியன்ட்டில் பிளாக் நிறத்தில் உள்ளன. அதே சமயம் LK -ல் அதிக பிரீமியம் தோற்றத்திற்காக பாடி கலரில் சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வேரியன்ட்களிலும் 18-இன்ச் அலாய் வீல்கள் தனித்துவமான வடிவமைப்புகளுடன் உள்ளன.

மேலும் பார்க்கவும்: இந்தியா-ஸ்பெக் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கலர் ஆப்ஷன்கள் மே 2025 -க்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது

இன்ட்டீரியர்

வெளிப்புறத்தைப் போலவே ஸ்கோடா கோடியாக்கின் இரண்டு வேரியன்ட்களிலும் உட்புற அமைப்பு ஒன்றுதான். ஸ்போர்ட்லைன் ஆல் பிளாக் கேபினை பெறுகிறது. அதே சமயம் செலக்ஷன் எல்கே டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது..

ஸ்கோடா எழுத்துகளுடன் கூடிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 12.9-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் 10.25-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும். இரண்டு வேரியன்ட்களும் பிஸிக்கல் ஹேண்டில்களுடன் வருகின்றன. அவை பல-செயல்பாட்டு மற்றும் இன்ஃபோடெயின்மென்ட், டிரைவ் மோடுகள் மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை இயக்க பயன்படுத்தப்படலாம்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

ஸ்கிரீன்கள், டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், பனோரமிக் சன்ரூஃப், பின்புற வென்ட்களுடன் கூடிய 3-ஜோன் ஆட்டோ ஏசி, பல வண்ண சுற்றுப்புற விளக்குகள், 13-ஸ்பீக்கர் கேன்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் வென்டிலேஷன், ஹீட்டட் மற்றும் மசாஜ் செயல்பாடுகளுடன் பவர்டு முன் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது.

பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360-டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட் கண்ட்ரோல், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பார்க் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றை வழங்குகிறது. இருப்பினும் இது எந்த அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வரவில்லை.

பவர்டிரெய்ன்

2025 ஸ்கோடா கோடியாக் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது இப்போது அதிக பவரை கொடுக்கிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின்

பவர்

204 PS (+14 PS)

டார்க்

320 Nm (முன்பு போலவே)

டிரான்ஸ்மிஷன்

7-ஸ்பீடு DCT

கிளைம்டு மைலேஜ்

14.86 கி.மீ

டிரைவ்டிரெய்ன்

ஆல்-வீல் டிரைவ் (AWD)

போட்டியாளர்கள்

2025 ஸ்கோடா கோடியாக் மற்ற முழு அளவிலான எஸ்யூவி -களான டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் போது எம்ஜி மெஜஸ்டர் காருக்கும் போட்டியாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Skoda கொடிக்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை