• English
  • Login / Register

2024 Toyota Camry மற்றும் Skoda Superb: விவரங்கள் ஒப்பீடு

published on டிசம்பர் 12, 2024 09:25 pm by ansh for டொயோட்டா காம்ரி

  • 194 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மிகவும் மலிவு விலையில் இருந்தாலும் கூட கேம்ரி அதன் நெருங்கிய போட்டியாளரை விட அதிக வசதிகளையும் சக்திவாய்ந்த பவர்டிரெய்னையும் வழங்குகிறது.

Toyota Camry vs Skoda Superb: Specifications Compared

புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி வெளிநாட்டில் வெளியிடப்பட்டு ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன ஸ்டைலிங், சக்திவாய்ந்த மற்றும் திறமையான இன்ஜின் மற்றும் பிரீமியம் வசதிகளுடன், இது அதன் நெருங்கிய போட்டியாளரான ஸ்கோடா சூப்பர்ப் இது இன்னும் பழைய அவதாரத்தில் உள்ளது, மேலும் இரண்டில் விலை அதிகம் உள்ளதாகவும் இருக்கிறது. இந்தக் கட்டுரையில் இந்த இரண்டு பிரீமியம் செடான்களின் அனைத்து விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து விலையில் எது அதிகம் வழங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

விலை

2024 Toyota Camry

எக்ஸ்-ஷோரூம் விலை

2024 டொயோட்டா கேம்ரி

ஸ்கோடா சூப்பர்ப்

வித்தியாசம்

ரூ 48 லட்சம்*

ரூ.54 லட்சம்

+ ரூ 6 லட்சம்

* டொயோட்டா கேம்ரி -யின் விலை அறிமுகத்துக்கானது

டொயோட்டா சூப்பர்பை விட கேம்ரி மிகவும் விலை குறைவான கிடைக்கிறது. இவ்வளவு பெரிய விலை இடைவெளி இருப்பதற்கு முக்கியக் காரணம் டொயோட்டா கேம்ரி இந்தியாவில் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதுதான் காரணம். ஸ்கோடா முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக சூப்பர்ப் கொண்டு வரப்படுகிறது. ஆனால் இந்த குறைந்த விலை கேம்ரி -யின் அளவு, செயல்திறன் அல்லது வசதிகளின் அடிப்படையில் சரியாக இருக்குமா ? கண்டுபிடிப்போம்.

அளவுகள்

Skoda Superb

அளவுகள்

2024 டொயோட்டா கேம்ரி

ஸ்கோடா சூப்பர்ப்

வித்தியாசம்

நீளம்

4920 மி.மீ

4869 மி.மீ

+ 51 மி.மீ

அகலம்

1840 மி.மீ

1864 மி.மீ

- 24 மி.மீ

உயரம்

1455 மி.மீ

1503 மி.மீ

- 48 மி.மீ

வீல்பேஸ்

2825 மி.மீ

2836 மி.மீ

- 11 மி.மீ

அலாய் வீல்கள்

18-இன்ச்

18-இன்ச்

வித்தியாசம் இல்லை

அதன் சற்று நீளமான அகலத்தைத் தவிர கேம்ரி அனைத்து அளவுகளிலும் சூப்பர்ப் காரை விட சிறியது. சூப்பர்ப் மேலும் அகலமானது மற்றும் நீண்ட வீல்பேஸை கொண்டிருப்பதால் இது சிறந்த கேபின் இடம் என எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு இரண்டு மாடல்களும் ஒரே அளவிலான 18 இன்ச் அலாய் வீல்களுடன் வருகின்றன.

மேலும் படிக்க: ஸ்கோடா கைலாக் மற்றும் ஹூண்டாய் வென்யூ: அடிப்படை வேரியன்ட்கள் ஒப்பீடு

பவர்டிரெய்ன்

2024 Toyota Camry Engine

விவரங்கள்

2024 டொயோட்டா கேம்ரி

ஸ்கோடா சூப்பர்ப்

இன்ஜின்

2.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பெட்ரோல்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

230 PS (இன்டெகிரேட்டட்)

190 PS

டார்க்

221 என்எம் (இன்ஜின்)

320 Nm

டிரான்ஸ்மிஷன்

e-CVT*

7-ஸ்பீடு DCT*

டிரைவ்டிரெய்ன்

FWD*

FWD*

* e-CVT - எலக்ட்ரானிக் கன்டினியூஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன்

* DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

* FWD - ஃபிரன்ட் வீல் டிரைவ்

இரண்டு மாடல்களும் வெவ்வேறு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகின்றன. ஆனால் இது கேம்ரியின் மிகவும் திறமையானது, இது இரண்டில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது குறைந்த டார்க் அவுட்புட்டை கொண்டிருக்கும் போது, ​​இது ஒரு ஸ்ட்ராங்-ஹைபிரிட் அமைப்புடன் வருகிறது. இது சிறந்த மைலேஜ் திறன் மற்றும் EV மோடு ஆப்ஷனை வழங்குகிறது.

மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ.36,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ரூ.19.94 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

இரண்டுமே ஃபிரன்ட்-வீல் டிரைவ் ட்ரெய்ன்களை கொண்டுள்ளன. ஆனால் டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில் கேம்ரி ஒரு e-CVT யுடன் வருகிறது. இது ஒரு மென்மையான மற்றும் ரீஃபைன்மென்ட் ஆன டிரைவை வழங்குகிறது. அதே சமயம் சூப்பர்ப் DCT உடன் வருகிறது. இது ஸ்போர்ட்டி டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

2024 Toyota Camry Dashboard

வசதிகள்

2024 டொயோட்டா கேம்ரி

ஸ்கோடா சூப்பர்ப்

எக்ஸ்ட்டீரியர்

  • ஸ்பிளிட் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்

  • LED DRLகள்

  • LED டெயில் லேம்ப்ஸ் 

  • LED ஃபாக் லேம்ப்ஸ்

  • 18-இன்ச் அலாய் வீல்கள்

  • ஸ்பிளிட் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்

  • LED DRL -கள்

  • LED டெயில் லேம்ப்ஸ்

  • LED ஃபாக் லேம்ப்ஸ்

  • 18-இன்ச் அலாய் வீல்கள்

இன்ட்டீரியர்

  • பிளாக் மற்றும் டேன் டூயல் டோன் தீம்

  • லெதர் அப்ஹோல்ஸ்டரி

  • ஆம்பியன்ட் லேம்ப்ஸ்

  • பிளாக் மற்றும் பிரெளவுன் டூயல் டோன் தீம்

  • லெதர் அப்ஹோல்ஸ்டரி

  • ஆம்பியன்ட் லேம்ப்ஸ்

இன்ஃபோடெயின்மென்ட்

  • 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே

கம்ஃபோர்ட் & வசதி

  • 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்

  • சிங்கிள் பேன் சன்ரூஃப்

  • மெமரி பங்ஷன் உடன் கொண்ட 10-வே பவர்டு டிரைவர் இருக்கை

  • எலக்ட்ரிக் பாஸ் மோடு உடன் 10-வே பவர்டு முன் பயணிகள் இருக்கை

  • 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே

  • 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம்

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

  • பின் இருக்கை மின்சார சாய்வு

  • சாய்வு, ஏசி மற்றும் இசைக்கான பின்புற தொடு கன்ட்ரோல்கள்

  • 10-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே

  • 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்

  • மெமரி செயல்பாடு கொண்ட 12-வே பவர்டு டிரைவர் சீட்

  • எலக்ட்ரிக் பாஸ் மோடு உடன் 12-வே பவர்டு முன் பயணிகள் இருக்கை

  • டிரைவ் இருக்கைக்கான மசாஜ் செயல்பாடு

  • வென்டிலேட்டட் மற்றும் சூடான முன் இருக்கைகள்

  • வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

பாதுகாப்பு

  • 9 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் அமைப்பு

  • 360 டிகிரி கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

  • லேன் கீப் அசிஸ்ட்

  • அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல்

  • ஹை பீம் அசிஸ்ட்

  • அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங்

  • 9 ஏர்பேக்ஸ்

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் 

  • 360 டிகிரி கேமரா

  • ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்

சிறப்பம்சங்களின் அடிப்படையில் கேம்ரிக்கு சூப்பர்ப் ஒரு நல்ல போட்டியாளராக உள்ளது. மேலும் சில அத்தியாவசிய வசதிகளின் விஷயத்திலும் முன்னணி வகிக்கிறது. இருப்பினும் சிறந்த இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ் மற்றும் விரிவான பாதுகாப்புக் வசதிகளுடன் கேம்ரி அதன் போட்டியாளரை விட அதிகமானவற்றை கொடுக்கிறது அதுவும் குறைவான விலையில்.

தீர்ப்பு

Skoda Superb

சூப்பர்ப் அதன் பெரிய அளவு மற்றும் சிறந்த வசதி வசதிகளுடன் ஒரு நல்ல விஷயத்தை கொடுத்தாலும் கூட அதன் விலை நிர்ணயம் நியாயமானதாக இல்லை. கேம்ரி குறைந்த விலையில் சிறந்த பாதுகாப்பு மற்றும் அதிக தொழில்நுட்பத்துடன் இதே போன்ற பேக்கேஜை கொடுக்கிறது.

2024 Toyota Camry

அது மட்டுமில்லாமல் கேம்ரி புதியது மற்றும் அதன் லேட்டஸ்ட் வடிவமைப்பில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது மிகவும் நவீனமான தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. மறுபுறம் சூப்பர்ப் ஆனது அதன் பழைய பதிப்பில் மட்டுமே இந்தியாவில் கிடைக்கிறது. இது கொஞ்சம் பழைய காராக தோன்றுகிறது, புதிய தலைமுறை சூப்பர்ப் ஏற்கனவே வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் 2025 ஆண்டில் இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் தற்போதைய பதிப்பு குறைந்த அளவுகளில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.

மேலும் படிக்க: 2024 ஆண்டில் இந்த 8 செடான் கார்கள் இந்தியாவுக்கு வந்தன

இந்த பிரீமியம் செடான்களில் எது உங்கள் தேர்வாக இருக்கும், ஏன்? கீழே உள்ள கருத்துகளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: கேம்ரி ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Toyota காம்ரி

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience