இந்தியாவில் டிசம்பர் 11 அன்று புதிய Toyota Camry அறிமுகம் செய்யப்படவுள்ளது
published on நவ 19, 2024 09:29 pm by gajanan for டொயோட்டா காம்ரி 2024
- 10 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த ஒன்பதாம் தலைமுறை அப்டேட்டில் கேம்ரியின் வடிவமைப்பு, உட்புறம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக பவர்டிரெய்ன் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி டிசம்பர் 11 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
-
வெளிப்புறம் மற்றும் உட்புறத்திற்கு புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.
-
புதிய டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 10-இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே ஆகியவை குளோபல்-ஸ்பெக் கேம்ரியில் உள்ள வசதிகள் ஆகும்.
-
இந்தியா-ஸ்பெக் மாடல் ADAS உடன் வரலாம்.
-
சர்வதேச-ஸ்பெக் மாடல் அப்டேட்டட் 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்னை பயன்படுத்துகிறது.
-
விலை ரூ.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முற்றிலும் புதிய டொயோட்டா கேம்ரி 2023 ஆண்டில் பிற்பகுதியில் உலகளவில் வெளியிடப்பட்டது. வடிவமைப்பு, வண்ணங்கள், உட்புறம், வசதிகள், பாதுகாப்பு மற்றும் ஹைபிரிட் பவர்டிரெய்ன் உட்பட சில குறிப்பிடத்தக்க அப்டேட்களை கொண்டுள்ளது. வரும் டிசம்பர் 11ஆம் தேதி ஒன்பதாம் தலைமுறை கேம்ரியை இந்தியாவில் அறிமுகம் செய்ய டொயோட்டா நிறுவனம் தயாராகியுள்ளது .
புதிய வடிவமைப்பு
புதிய தலைமுறை கேம்ரி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட தோற்றத்தைப் பெறுகிறது. இதில் டொயோட்டாவின் புதிய டிஸைன் மொழி உள்ளது. இது ஒரு தாழ்வான நிலைப்பாடு, நீட்டிக்கப்பட்ட முன் ஓவர்ஹாங், ஷார்ப்பான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகள், தாழ்வான ரூஃப், மற்றும் ஒரு பெரிய கிரில் மூலம் பாராட்டப்பட்ட புதிய "ஹம்மர்ஹெட்" வடிவத்தைக் கொண்டுள்ளது. புதிய சி ஷேப்டு LED DRL -களுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய சி வடிவ டெயில் லைட்ஸ் ஆகியவை உள்ளன. சக்கர அளவுகள் 18- முதல் 19-இன்ச் வரை இருக்கால்ம். டிரிம் பொறுத்தவரையில் இந்தியா-ஸ்பெக் மாடல் 19-இன்ச் யூனிட்களை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஒன்பதாம் தலைமுறை கேம்ரியுடன் ஓஷன் ஜெம் மற்றும் ஹெவி மெட்டல் என இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த கேபின்
உட்புறத்தில் அனைத்து புதிய கேபின் உட்புற வண்ண தீம்களையும், லெதர் மற்றும் மைக்ரோ-ஃபைபர் பொருட்கள் உட்பட தனித்துவமான அப்ஹோல்ஸ்டரி மற்றும் டிரிம் ஆப்ஷன்களும் உள்ளன. உட்புறத்தில் வண்ண தீம்கள் போல்டர் அல்லது பிளாக், காக்பிட் ரெட் மற்றும் லைட் கிரே கலர் உடன் வருகிறது. டொயோட்டா புதிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளேவை வழங்கியுள்ளது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
சர்வதேச-ஸ்பெக் ஒன்பதாம் தலைமுறை கேம்ரியில் 10-இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ஒரு பனோரமிக் சன்ரூஃப், டெலிமேடிக்ஸ், கனெக்டட் கார் டெக்னாலஜி, டூயல்-ஜோன் ஏசி, மற்றும் வென்டிலேட்டட்/ஹீட்டட் சீட்கள், பவர்டு மற்றும் மெமரி ஃபங்ஷன் உடன் உள்ளது. மேலும் 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், 5 USB போர்ட்கள் (முன் மற்றும் பின்புறம்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவையும் இந்த காரில் உள்ளன. டொயோட்டா இந்தியா-ஸ்பெக் மாடலை போன்ற வசதிகளுடன் இந்த காரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுதலாக புதிய-ஜென் கேம்ரி சமீபத்திய அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளுடன் வருகிறது. இதில் பாதசாரிகளைக் கண்டறிதல், ரியர்-கிராஸ் டிராஃபிக் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப்பிங் அசிஸ்ட் ஆகியவை உள்ளன. .
புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்ன்
புதிய கேம்ரியில் டொயோட்டாவின் ஐந்தாம் தலைமுறை ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்ட புதிய 2.5-லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய பேட்டரி, இரண்டு புதிய எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ரீவொர்க் செய்யப்பட்ட எலமென்ட்கள் நிறைய உள்ளன. ஆல்-வீல்-டிரைவ் (AWD) பதிப்பில் இது 232 PS என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை இது கொடுக்கக்கூடியது. புதிய கேம்ரி 225 PS -ன் லோவர்டு பவர்ட் அவுட்புட் உடன் ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) பதிப்பிலும் இது வரும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
வெளிச்செல்லும் மாடலின் விலை ரூ. 46.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும். வரவிருக்கும் புதிய டொயோட்டா கேம்ரி சற்று அதிக விலையில் வரலாம். புதிய காரின் விலை சுமார் ரூ. 50 லட்சமாக இருக்கும் (எக்ஸ்-ஷோரூம்). அறிமுகம் செய்யப்பட்டதும் இது ஸ்கோடா சூப்பர்ப் உடன் போட்டியிடும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டொயோட்டா கேம்ரி ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful