• English
  • Login / Register

இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Toyota Camry

published on டிசம்பர் 11, 2024 09:51 pm by dipan for டொயோட்டா காம்ரி

  • 188 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2024 டொயோட்டா கேம்ரி ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும். மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது.

  • புதிய தோற்றத்தைப் பெறும் இந்த காரில் நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் ஷார்ப்பான C- வடிவ LED DRL -கள் மற்றும் டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  •  புதிய டூயல்-டோன் பிரவுன் மற்றும் பிளாக் டேஷ்போர்டு டிசைனுடன் உள்ளே இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன.

  • இது பனோரமிக் சன்ரூஃப், 3-ஜோன் ஏசி மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றையும் பெறுகிறது.

  • பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS தொகுப்பு ஆகியவை அடங்கும்.

  • 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அப்படியே உள்ளது. டொயோட்டாவின் சமீபத்திய ஹைப்ரிட் தொழில்நுட்பம் இப்போது கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

இறுதியாக இந்தியாவில் 2024 டொயோட்டா கேம்ரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 48 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆண்டில் உலகளவில் அறிமுகமான இந்த புதிய தலைமுறை மாடல், சர்வதேச அளவில் கிடைக்கும் ப்ரியஸ் மற்றும் சி-எச்ஆர் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்டுவருகிறது. உள்ளே இது புதிய வசதிகளுடன் வருகிறது. புதிய கேம்ரி வழங்கும் அனைத்தையும் விரிவாகப் பார்ப்போம்:

வெளிப்புறம்

புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி பிராண்டின் சமீபத்திய டிஸைன் லேங்குவேஜ் -க்கு அதிநவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது ஆங்குலர் சி-வடிவ டிஆர்எல்களுடன் கூடிய நேர்த்தியான எல்இடி ஹெட்லைட்கள், ஷார்ப்பான பானெட் ஃபோல்டுகள் மற்றும் பம்பரின் பக்கங்களில் ஏர் குழாய்களுடன் கூடிய பெரிய டூயல்-டோன் கிரில் ஆகியவை முன்பக்கமாக உள்ளன.  

இது 18-இன்ச் அலாய் வீல்களுடன் வருகிறது. மற்றும் பக்க சுயவிவரம் அதன் முந்தையை தலைமுறை கார்களை போலவே உள்ளது பெரிய மாற்றம் இல்லை. பின்புறத்தில் இது C-வடிவ LED டெயில் லைட்கள் உள்ளன.  அவை முன்புற DRL -களை ஒத்திருக்கின்றன. ஆனால் அவை மிகவும் பெரியவை, மேலும் அவற்றுக்கிடையே 'கேம்ரி' பேட்ஜிங் வைக்கப்பட்டுள்ளது. பூட் மூடியில் ‘டொயோட்டா’ லோகோவுடன் இன்டெகிரேட்டட் ஸ்பாய்லர் உள்ளது. மேலும் பின்புற பம்பரின் கீழ் பகுதி முரட்டுத்தனமான தோற்றத்துக்காக பிளாக் கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள்ளது.

இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

2024 Toyota Camry Interior

புதிய டொயோட்டா கேம்ரியின் கேபினில் டூயல்-டோன் பிரவுன் மற்றும் பிளாக் தீமில் ஃபினிஷ் செய்யப்பட்ட 3 லேயர் டேஷ்போர்டு உள்ளது. டாஷ்போர்டு சென்டர் கன்சோல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது கிளாஸி பிளாக் எலமென்ட்கள் உள்ளன. மேலும் கியர் லீவர், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் முன் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு புதிய ஸ்டீயரிங் வீல், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றைப் பெறுகிறது. 

ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), 3-ஜோன் ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் லும்பார் சப்போர்ட் மற்றும் வென்டிலேட்டட் 10-வே பவர்டு முன் இருக்கைகள் ஆகியவை இந்த காரில் உள்ள முக்கிய வசதிகளில் அடங்கும். பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ஸ்டீயரிங் உதவியுடன் கூடிய ADAS, அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவை அடங்கும்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

புதிய டொயோட்டா கேம்ரி 2.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது இப்போது டொயோட்டாவின் 5 -ம் தலைமுறை ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 230 PS -ன் இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் எலக்ட்ரிக் e-CVT கியர்பாக்ஸ் வழியாக முன் சக்கரங்களுக்கு வழங்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

இந்தியாவில் டொயோட்டா கேம்ரி ஆனது ஸ்கோடா சூப்பர்ப் நேரடியாக போட்டியிடுகிறது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ?கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Toyota காம்ரி

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience